இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் .
இதில் வரும் படிப்பினை.... " பிள்ளைகளின் இலக்குகளை பெற்றோர்கள் தீர்மானிக்கக் கூடாது " ......
01) அஸ்ஸலாமு அலைக்கும் .
☺ வலைக்குமஸ்ஸலாம் #
02) உங்கள் பெயர் என்ன ?
☺லுத்பா ஹனியா .
03) உங்களுடைய எதிர்கால இலக்கு என்ன ?
☺ நான் நல்லா படிச்சி பெரிய scientist ஆகனும் .
4) நீங்க scientist ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன செய்வீங்க ?
☺ ம் . நான் நான் scientist ஆனன்டா முஸ்லிம் களுக்கு ஊடு ( வீடு ) கட்டிக் கொடுப்பன் .
05) வேறு என்ன செய்வீங்க ?
☺ ம் . மருந்து கொடுப்பன் . ஊசி அடிப்பன் .அவ்வளவுதான் .
☞ Masha allah இவ்வளவு முஸ்லிம்களுக்கு help பண்ணுவீங்களா ! Very good .
06) இறுதியாக நீங்க முஸ்லிம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க ?
☺ நான் என்ட சமூகத்திற்குச் சொல்வது அல்லாவுக்காக எங்களுடையா இலக்குகளை பெற்றோர்களாகிய நீங்கள் தீர்மானிக்காதிங்க !
எங்களுடைய இயலுமைக்கேற்ப நாங்கள்தான் எங்களுடைய இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும் . தயவுசெய்து நீங்க தீர்மானித்து எங்களுடைய வாழ்கையைப் பாழடையச் செய்யாதீங்க ! ...... Please !
- jzakllah .
Dr.லுத்பா ஹனியா . உங்களுடைய விளையாட்டு நேரத்தை எமக்கு ஒதுக்கி தந்தமைக்கு நன்றி . ஓடுங்க போய் விளையாடுங்க
நேர்காணல் :- Hafeesul Haq ( Fathihi )
varipathanchenai