திருமணம் என்பதற்கு சேர்தல் என்று பொருள் படும் . எதார்தமாக தனது இச்சைகளைப் போக்கிக் கொள்வதற்காகவும் , தனது சிறந்த சந்ததியை உருவாக்குவதற்குமான சமூக அங்கிகாரமமே திருமணம் எனப்படும் . ஒரு மனிதன் தனித்து வாழ்வதென்பது மிகவும் கடினமான ஒன்று . அவனது பிறப்பில் ஆரம்பித்து அவனது இறப்புவரைக்கும் துணையோடுதான் வாழவேண்டும். ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும்சரி இவர்கள் இரண்டு சாராரும் ஒன்றில் ஒருவர் தங்கித்தான் வாழ வேண்டும் . காரணம் இது இறை நியதி . அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்
ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍﺗَّﻘُﻮﺍ ﺭَﺑَّﻜُﻢُ ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻘَﻜُﻢْ ﻣِﻦْ ﻧَﻔْﺲٍ ﻭَﺍﺣِﺪَﺓٍ ﻭَﺧَﻠَﻖَ ﻣِﻨْﻬَﺎ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻭَﺑَﺚَّ ﻣِﻨْﻬُﻤَﺎ ﺭِﺟَﺎﻟًﺎ ﻛَﺜِﻴﺮًﺍ ﻭَﻧِﺴَﺎﺀً ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﺗَﺴَﺎﺀَﻟُﻮﻥَ ﺑِﻪِ ﻭَﺍﻟْﺄَﺭْﺣَﺎﻡَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺭَﻗِﻴﺒًﺎ ﴾ ﺍﻟﺴﻮﺭﺓ ﺍﻟﻨﺴﺎﺀ :1
மனிதர்களே உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் . அவன் எத்தகையவன் என்றால் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய இணையை ( மனைவியை ) யும் படைத்தான் . இன்னும் அவ்விருவரின்மூலம் பல ஆண்களையும் பல பெண்களையும் பரவிடச் செய்தான் . எனவே அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் . எனவே மனிதன் சோடியாக வாழ்வதென்பது இறை நியதி .
இஸ்லாத்தில் திருமணத்தைப் பொறுத்தவரை ஏறாளமான சிறப்புக்களையும் நோக்கங்களையும் கொண்டுள்ளது .
01) இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு இபாதத் .
திருமணத்தை வெறும் தாமத்திய உறவாகப் பார்க்காமல் அதை ஒரு இபாதத்தாகப் பார்க்கும்படி இஸ்லாம் கூறுகிறது . சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள்
ﺍَﻟﻨِّﻜَﺎﺡُ ﻣِﻦْ ﺳُﻨَّﺘِﻲْ ﻭَﻣَﻦْ ﺭَﻏِﺐَ ﻋَﻦْ ﺳُﻨَّﺘِﻲْ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲْ ‘திருமணம் எனது சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல’ என்று கூறினார்கள் .
மேலும் கூறினார்கள்
ﻭَﻟَﺎ ﺗَﻜُﻮْﻧُﻮْﺍ ﻛَﺮُﻫْﺒَﺎﻥِ ﺍﻟﻨَّﺼَﺎﺭٰﻯ
‘கிறித்துவ பாதிரிகளைப் போன்று (பிரமச்சாரிகளாக) இருந்து விடாதீர் கள' என்றும் கூறினார்கள் . இன்னொரு ஹதீஸின் திருமணம் மார்க்கத்தில் மூன்றில் இரண்டைப் பூர்த்தி செய்கிறது என்றார்கள் .
ﻭَﻣَﻦْ ﻧَﻜَﺢَ ﻓَﻘَﺪْ ﺍَﺩّٰﻯ ﺛُﻠُﺜَﻲْ ﺩِﻳْﻨِﻪٖ . ﻓَﻠْﻴَﺘَّﻖِ ﺍﻟﻠﻪَ ﻓِﻲْ ﺑَﺎﻗِﻴْﻪ
‘திருமணம் செய்தவன் மார்க்கத்தில் மூன்றிலிரண்டு பங்குகளை நிறை வேற்றி விட்டவனாவான். மீதியில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும். என்றார்கள் .
ﻳَﺎﻣَﻌْﺸَﺮَ ﺍﻟﺸَّﺒَﺎﺏِ ﻣَﻦِ ﺍﺳْﺘَﻄَﺎﻉَ ﻣِﻨْﻜُﻢُ ﺍﻟْﺒَﺂﺀَﺓَ ﻓَﻠْﻴَﺘَﺰَﻭَّﺝْ ﻓَﺎِﻧَّﻪُ ﺍَﻏَﺾُّ ﻟِﻠْﺒَﺼَﺮِ ﻭَﺍَﺣْﺼَﻦُ ﻟِﻠْﻔَﺮْﺝِ . ﻭَﻣَﻦْ ﻟَّﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﻌَﻠَﻴْﻪِ ﺑِﺎﻟﺼَّﻮْﻡِ ﻓَﺎِﻧَّﻪُ ﻟَﻪُ ﻭِﺟَﺂﺀٌ .
வாலிபர்களே ! உங்களில் வசதி வாய்ப்பினைப் பெற்றவர், திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திருமணமாகிறது (பிற பெண்களை சிற்றின்ப நோக்கோடு பார்ப்பதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடி யதாகவும், மர்மஸ்தானத்தை (விபச்சாரத்தை விட்டும்) பாதுகாக் கக் கூடியதாகவும் இருக்கிறது. வசதி வாய்ப்பினைப் பெறாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும். ஏனெனில் நோன்பு சிற்றின்ப வேட்கையைத் தணிக்கக் கூடியதாக இருக்கிறது.
02 ) உள அமைதி கிடைக்கிறது .
﴿ ﻭَﻣِﻦْ ﺁَﻳَﺎﺗِﻪِ ﺃَﻥْ ﺧَﻠَﻖَ ﻟَﻜُﻢْ ﻣِﻦْ ﺃَﻧْﻔُﺴِﻜُﻢْ ﺃَﺯْﻭَﺍﺟًﺎ ﻟِﺘَﺴْﻜُﻨُﻮﺍ ﺇِﻟَﻴْﻬَﺎ ﻭَﺟَﻌَﻞَ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﻣَﻮَﺩَّﺓً ﻭَﺭَﺣْﻤَﺔً ﺇِﻥَّ ﻓِﻲ ﺫَﻟِﻚَ ﻟَﺂَﻳَﺎﺕٍ ﻟِﻘَﻮْﻡٍ ﻳَﺘَﻔَﻜَّﺮُﻭﻥَ ( 21 ) ﴾
உங்களில் இருந்தே ( உங்களுடைய ) மனைகளை அவர்கள் மூலம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காக உங்களுக்காக அவன் படைத்ததும் , உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கியதும் அவனுடைய அத்தாச்சியில் உள்ளவையாகும் . ( அர் ரூம் : 21 )
03 பரம்பரை விருத்தி ஏற்படுகிறது .
ﻓَﺎﻧْﻜِﺤُﻮﺍ ﻣَﺎ ﻃَﺎﺏَ ﻟَﻜُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ( النساء:3 )
நீங்கள் சிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள் .
மற்றொரு சந்தர்ப்பத்தில் நன்றாகப் பிள்ளை பெறுகின்ற உங்களைப் பராமரிக்கின்ற சிறந்த இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள் .
மேலும் சொன்னார்கள் ஒரு மனிதனின் சந்தோசம் மூன்று விடியங்களில் உள்ளது.
01) அவனுக்குக் கிடைக்கின்ற மனைவி ( مرأة الصالحة )
02) ஒரு சிறந்த வசிப்பிடம் ( இஸ்லாமிய சூழல் ) ( مسكن الصالح )
03 ) ஒரு சிறந்த வாகனம் ( مركب الصالح )
அதேபோல் ஒரு மனிதனின் துக்கம் மூன்று விடையங்களில் தங்கியுள்ளது.
01) ஒரு மோசமான பெண் ( مرأة السوء )
02 ) ஒரு மோசமான வீடு ( مسكن السوء )
03) மோசமான வாகனம் ( مركب السوء )
எனவே இவை மூன்றும் ஒரு மனிதனின் சந்தோசத்தையும் துறதிஷ்டத்தையும் தீர்மானிக்கின்றது.
ஒரு பெண் சிறப்பானதாக இருப்பதற்கான உதாரணம் பிர்ரவ்னின் மனைவி ஆசியா நாயகி . பிர்ரவ்ன் ஒரு கெட்டவனாக இருந்தமையால் ஆசியா நாயகியின் வாழ்க்கை சரியாக அமையவில்லை .
* நூஹ் நபியின் வாழ்க்கை
மனைவி சரி இல்லை இதனால் தனது பிள்ளைகள் காபிராக மரணித்தார்கள் .
எனவே திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் சிறப்பாக அமைய வேண்டும்.
04) குடும்ப உறவுகள் பேணப்படுகிறது.
யார் குடும்ப உறவுகளைத் துண்டித்து வாழ்கிறாரோ அவர் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார் என நபிஸல் அவர்கள் கூறினார்கள் .
மற்றொரு சந்தர்ப்பத்தில் யாருடைய ஆயுளை நீடிக்கப் பட வேண்டும் என்று விரும்புகின்றாரோ யாருடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர் உறவுகளைப் பேணி வாழட்டும். என்றார்கள் .
மேலும் நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் அவளின் நான்கு விடையங்களுக்காக திருமணம் முடிக்கப் படுகின்றாள்
ﺗُﻨْﻜَﺢُ ﺍﻟْﻤَﺮْﺃَﺓُ ﻟِﺄَﺭْﺑَﻊٍ : ﻟِﻤَﺎﻟِﻬَﺎ ، ﻭَﻟِﺤَﺴَﺒِﻬَﺎ ، ﻭَﻟِﺠَﻤَﺎﻟِﻬَﺎ ، ﻭَﻟِﺪِﻳﻨِﻬَﺎ ، ﻓَﺎﻇْﻔَﺮْ ﺑِﺬَﺍﺕِ ﺍﻟﺪِّﻳﻦِ ﺗَﺮِﺑَﺖْ ﻳَﺪَﺍﻙَ )
1 அவளின் சொத்திற்காக
2 அவளின் பரம்பரைக்காக
3 அவளின் அழகுக்காக
4 அவளின் மார்க்கத்திற்காக ( தீன் )
இதில் யார் மார்க்கமுள்ள பெண்ணைத் தெரிவு செய்துகொள்ள வில்லையோ அவருடைய வாழ்க்கை நாசமாகட்டும் . அவர் கைசேதமடைந்துவிட்டார் , நஷ்டமடைந்துவிட்டார் என நபிஸல் அவர்கள் கூறினார்கள் .
ஒரு திருமணத்தில் கவனத்திற் கொள்ள வேண்டிய விடையங்கள்
1. இரண்டு பேருக்கும் பொருத்தப்பாடு மிகவும் முக்கியம்.
கல்வித்தகமை இருந்தால் கல்வித்தகமை உள்ளோர் , அழகாக இருந்தால் அழகு உள்ளோர் , நீளம் குறைவாக இருந்தால் நீளம் குறைவாக உள்ளோர் என்று பொருத்தப்பாடு பார்க்க வேண்டும் . இல்லாவிட்டால் உளவியல்ரீதியான பாதிப்பு ஏற்படும் .
2. குடும்ப சூழல்கள் பார்க்கப்பட வேண்டும்.
நபிஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள் குப்பை மேட்டில் முழைக்கும் பச்சைத் தாவரத்தை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன் என்றார்கள் .
விளக்கம் :- குப்பை மேட்டில் முழைக்கும் பச்சை தாவரம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அது இருந்த இடம் குப்பை . எனவே பிள்ளை வளர்ப்புக்கு சூழல் மிக முக்கியம்.
3. வயது மிகவும் குக்கியம்
இன்று 30 வயது ஆண் 20 அல்லது 15 வயது பெண்களை திருமணம் செய்கின்றார்கள் பார்ப்பதற்கு தந்தை மகள் போன்று உள்ளது . இது குடும்ப உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
4. இரண்டு பேரினதும் விருப்பம் மிக முக்கியம் .
5. ஒருத்தருக்கொருவர் தங்களின் குறைகளை மறைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
* அவர்கள் உங்களுக்கு ஆடைகள் நீங்கள் அவர்களுக்கு ஆடைகள்
6. இறை தொடர்பு உள்ள வர்களாக இருத்தல் வேண்டும்.
கணவன் தூங்குகின்றார் மனைவி தொழுகைக்காக
எழுப்புகின்றார் கணவன் எழும்பவில்லை எனவே தண்ணீர் தெளித்து தனது கணவனை எழுப்பாட்டுகின்றார் அதேபோல் மனைவி தூங்குகின்றார் கணவன் தொழுகைக்காக
எழுப்புகிறார் எழும்பவில்லை எனவே கணவன் தண்ணீர் தெளித்து தனது மனைவியை எழுப்பாட்டுகின்றார் இவர்கள் இரண்டுபேருக்கும் அல்லாஹ் அருள்பாலிக்கட்டும் என்று நபிஸல் அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள்
கணவன் மனைவி கடைப்பிடிக்க வேண்டியவைகள்.
1. கணவன் , மனைவி ஸலாம் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .
2. சுத்தம் பேண வேண்டும்
கணவனுக்காக தன்னை எப்போதும் அலங்கரித்து இருக்க வேண்டும் . ( கணவனும் மனைவியும் சுத்தம் பேணுவோராக தொடர்ந்து இரித்தல் வேண்டும் )
இன்று தலாக் அதிகம் இடம்பெறுவதில் இதுவும் ஒரு காரணம் .
3. இரண்டுபேருக்குமத்தியில் தப்பெண்ணம் இருக்கக் கூடாது .
4. இரண்டு பேரும் குடும்ப விடையங்களை ஆலோசனை செய்வோராக இருத்தல் வேண்டும் .
( கணவன் மனைவியின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் மனைவி கணவனின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் )
இவற்றை கடைப்பிடித்தால் நிச்சயமாக சிறந்ததோர் இஸ்லாமிய குடும்பத்திற்கு அடித்தளமாக அமையும் . இன்ஷா அல்லாஹ் .
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை