இஸ்லாம் ஒவ்வொரு இபாதத்களும் ஒவ்வொரு பெறுமானங்களைக் கொடுத்து ள்ளது . அது தொழுகையாக இருக்கலம் ஸகாதாக இருக்கலாம் ,ஹஜ்ஜாக இருக்கலாம் அல்லது நோன்பாகக்கூட இருக்கலாம் இவை ஒவ்வொருக்கும் முக்கியமான பெறுமானங்களை வளங்கியுள்ளது. இப்படியான பெறுமானங்களை எமது சமுகம் உணர்ந்து அமல் செய்வதென்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது.
எமது சமுகத்தில் ஒரு பழமொழியுள்ளது. சொல்லுவார்கள் "காற்றுள்ளபோது தூற்றிக்கொள் " என்பார்கள். இது எமக்குப் பொருந்தும் என்று நினைக்கின்றேன். நோன்புமாதத்தைப் பொறுத்தமட்டில் இது எமது பாவங்களை சுட்டெரிக்கின்ற மாதம். இதை எமது சமுகம் சரியாகப் புரிந்து திட்டமிட்டுப் பயன்படுத்துவதில்லை. இம்மாதம் எம்மைவிட்டுப் பிரிந்தபிறகுதான் நாம் யோசிக்கின்றோம் ஐயோ ! நான் ரமழான் மாதத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே ! எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு நான் உய்ருடன் இருப்பேனா என்றுகூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரிகின்றோம். போன காலம் போய்விட்டது இப்போது எம்மை ரமழான் மாதம் வந்தடைந்துள்ளது. எனவே ரமழானை சிறப்பாகப் பயன்படுத்துவோம்.
இவ்வருட ரமழானை பயன்மிக்க ரமழானாகப் மாற்றிட சில வழிகாட்டல்கள்.
1) நோன்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளல்.
அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கியதன் நோக்கம் வெறுமனே விழித்து பசித்து தாகித்து இருப்பதல்ல நோக்கம் மாறாக இதனூடாக தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்துவதற்கு விதியாக்கியுள்ளது.
2) ரமழானின் சிறப்பை அறிந்து செயற்படல்.
" ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்பட்டு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. மேலும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான் நபிஸல் அவர்களால் கூறினார்கள். ( புஹாரி )
3) ரமழான் மாதத்தில் செய்யும் அமல்களை அறிந்து செயற்படல்.
யார் ரமழானுடைய மாதத்தில் ஈமானுடமும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ( புஹாரி)
4) லைலதுல் கத்ரின் சிறப்பை அறிந்து கொள்ளல்.
லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. ( அல் கத்ர் 3 ) இவ்விரவு அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு .
5) கியாமுல் லைல் வணக்கத்தின்பால் கவனம் செலுத்தல்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் யார் ஈமானுடமும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என கூறினார்கள். ( புஹாரி )
நபிஸல் அவர்கள் ரமழான் காலத்திலும் ரமழான் அல்லாத காலத்திலும் 11 ரகாயத்களுக்கு அதிகமாக தொழவில்லை. அழகாக நீட்டித் தொழுதார்கள். ( புஹாரி 1147 முஸ்லிம் 738 )
உமர் ( ரழி) அவர்கள் உபய் பின் கவ்ப் ரழி தமீம் அத்தாரி ரழி ஆகிய இரு ஸஹாபிகளை மக்களுக்கு தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். ( அல் முவத்தா 519 )
கியாமுல் லைல் தொழுகை 11 அல்லது அதற்கு மேல் என்றும் கருத்து வேறுபாடு உள்ளது.