போர் என்கின்ற போது எங்களுடைய சிந்தனையில் பொதுவாக உதிப்பது ஆயுதமுணையில் போராடுவது மாத்திரம்தான் போர் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படியல்ல மனிதனுக்கு மத்தியில் போட்டிகளும்,பொறுமைகளும் உருவான காலம் கடந்து இன்று நாடுகளுக்கிடையில் அதிகாரப் பரவல்கள் போட்டி போட்டு வளர ஆரம்பித்துள்ளது. இந்த அதிகாரப் பரவல்கள் நாடுகளுக்கிடையில் போர் இடம்பெறுவதற்குக் காரணமாக அமைகிறது.
ஆரம்ப காலத்தில் கப்பல் கட்டும் கைதொழிலிற்கும் ஆயுத உற்பத்திற்கும் கவனம் செலுத்திய நாடுகள் இன்று யுரேனியம், அணு ஆயுதம் ,தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
பொதுவாக biowar என்பது
biological warfare என்பதன் சுருக்கமாகும். ஒரு நாடு தனது எதிரி நாட்டின் மீது தொடு க்கும் போர் முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொடிய வியாதியை உண்டாக்கக் கூடிய இலகுவாக பரவக்கூடிய பக்டீரியாக்களை அல்லது வைரஸ்களை கண்டு பிடித்து அதை ரகசியமாக தனது எதிரி நாட்டில் பரப்பிவிடு வது .மனிதர்கள் ,பிராணிகள்,
பயிர்கள் போன்றவற்றின் மீது பரப்பிவிட்டு பெரும் சேதத்தை விளைவித்து எதிரி நாட்டை நிலை குலையச் செய்கின்ற செயலே இதுவாகும்.
எடுத்துக்காட்டாக சின்னம்மை
நோயை உருவாக்கும்
வரிசெல்லா ஜோஸ்டர் ( Varicella Zoster ) எனும் வைரஸ் இந்த வைரஸினால் சுமாராக
300 மில்லியன் மக்கள் சின்னமை நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
உயிர்க்கொல்லி நோய் என்று சொல்லுமளவுக்கு உயிர்ப்பலி வாங்கிய ஒன்று.
இது குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகத் தாக்கும். ஐந்து முதல் பத்து நாள்கள் வரை உடலில் தங்கியிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மனிதரிடமிருந்து தும்மல், சளி, இருமல் வழியே மற்றொருவருக்குப் பரவக்கூடியது.
உடலினுள் சென்று மூன்று வாரத்தில் இந்வைரஸ் தன்னுடை பாதிப்பைக் காட்ட ஆரம்பிக்கும். அதிகபட்சமாக, 102 டிகிரி வெப்பம் வரை காய்ச்சல் அடிக்கும். தொண்டை, நுரையீரலில், தோலில் புண்களை ஏற்படுத்தும். இது நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்புகள் உண்டு. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால்
சின்னம்மையை உயிர்கொல்லி நோயாக பார்த்தார்கள்.
இந்த அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த நோய்கான தடுப்பூசியை 1980 ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடித்து வைரஸ் கிருமியை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டார்கள். என்றாலும்
அந்த வைரஸ் கிருமியின் சில சாம்பிள்கள் மாத்திரம் ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக சேமித்து வைத்துள்ளார்கள்.
இப்போது பிரச்சினை என்னவென்றால் 1980
ஆண்டுக்குப் பிறகு பிறந்த யாருக்கும் சின்னம்மை நோய்க்கான தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், இத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தீவிரவாத இயக்கங்களின் பிடியில் சிக்கி பயோ வார் ஆயுதமாக (Bio-war Weapon) மாற வாய்ப்புள்ளது" என்று அமெரிக்காவின் ( FDA ) என்ற ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்னிலை தோன்றினால் எப்படியான விளைவுகள் தோன்றும்?
ராஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் முறுகல் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் முறுகல் வல்லரசு நாடுகளின் பணிப்போரில் பலிகடாவாகும் வளர்முக நாடுகள்
இதன் விளைவே கொரோனா வைரஸ் Covid-19 என்று பலரால் பேசப்பட்டு வருகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் எமது முஸ்லிம் நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
Ash Sheikh Hafeesul haq ( Fathihi)
Varipathanchenai