Tuesday, September 1, 2020

மேற்குலகால் மறைக்கப்பட்ட முஸ்லிம் மருத்துவ மேதை முஹம்மத் அத்தமீமி


பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த மருத்துவ மேதைகளில் இவரும் ஒருவர்.

அபூ  அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு ஸயீத் அத்தமீம் என்பதுவே இவரின் முழுப்பெயராகும். 
பலஸ்தீன் ஜெருசலத்தில் பிறந்த இவர்  970 இல் எகிப்திற்கு குடிபெயர்ந்து மரணமடையும் வரை அங்கு வாழ்ந்தார். 

மருத்துவ துறையில் ஆழ்ந்த அறிவும் நீண்ட அனுபவமும் கொண்ட இவர். மருத்துவவியலின் பல்வேறுபட்ட துறைகள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். 

இவர் எழுதிய நூல்களில் மருந்தியல் பற்றிய ' கிதாபுல் முர்ஷித் இலா ஜவாஹிருல் அத்தியா குவா அல் முப்ரதாத் , 
( உணவுப் பொருள்கள் மருந்துக்கள் ஆகியவற்றின் விளக்க நூல்) எனும் நூல் குறிப்பிடத் தக்கவையாகும். 


இந்நூல் தாவரங்கள், கனிப்பொருள்கள் ,விலங்குகள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான மருந்துகள் பற்றியும் , உணவுப் பொருட்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
இவர் பத்தாம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் மரணமடைந்தார். 

A.M. ஹபீஸுல் ஹக் 
வரிப்பத்தான்சேனை.