A.M.Hafeesul haq (Fathihi)
Varipathanchenai.
உண்மையில் யார் இவர்கள் ?
(Anonymous hacktivist collective) இது ஹெக்கர்கள் கூட்டு நிழலுக குழு.
உலகம் முழுக்க இருக்கும் தலை சிறந்த கணணி ஹெக்கர்களைக் கொண்ட மிக சக்தி வாய்ந்த குழு. அதிகார அத்துமீறலுக்கு எதிரான கொள்கை கொண்ட ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கும் கணினி ஜாம்பவான்களைக் கொண்ட குழு. இந்த அமைப்பு ஒருவரால் நிர்வகிக்கப்படவில்லை. இந்த அமைப்பிற்கு கென்று தனிப்பட்ட நாடும் இல்லை. உலகம் முழுவதும் இந்த அமைப்பு வியாபித்து காணப்படுகிறது. நாங்கள் பெரும் படை என்பது இவர்களின் வாசகம் (we are legion) கய் பாவ்கிஸ் மாஸ்க்" (Guy Fawkes mask) என்பது இவர்களின் அடையாளம் "
பல நாட்டு அரசுகளை நிறுவனங்களை தங்களின் ஹெக்கிங் மூலம் ஆட்டிப்படைக்கும் இவர்கள் மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர்கள். தங்களது சைபர் தாக்குதல்மூலம் (Cyber war) நீதியை பெற்று தருவது சர்வாதிகார ஆட்சியை ஒடுக்குவது போன்றவையே இவர்களின் செயற்பாடு . இவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு ‘4chan’ என்ற வலைதளத்தில் இருந்து அனானிமஸ் ஹெக்டிவிஸ்ட் கலெக்டிவ் (Anonymous hacktivist) என்ற பெயரில் முதன்முறையாக தோற்றம் தோற்றம் பொற்றார்கள்.
இவர்களுக்கு பல சமூக ஊடக கணக்குகள் இருக்கின்றன. மேலும் இவர்களுடைய ட்விட்டர் பக்கத்தை 15.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
கடந்த காலங்களில் பண்டோரா பேப்பர்ஸ், பனாமா பேப்பர்ஸ், விக்கிலீக்ஸ் பற்றிய ஆச்சரியமான தகவல்களை வெளியீட்டு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றார்கள்.
இவர்கள் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யப் படையினரின் தகவல்கள், பெயர்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியீட்டும்,
குறிப்பாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள், 40க்கும் அதிகமான வங்கிகள் என்று 300 பக்கங்களை ஹெக் செய்துள்ளதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
எங்கள் நாட்டில் எதிர்பார்க்காத அளவிற்கு சைபர் தாக்குதல் நடக்கிறது என்றும் இதனால் எங்களது நாட்டிற்கு பல கோடி நஷ்டம் என்றும் ரஷ்ய நாட்டு பாதுகாப்பு துறையும் ஒப்புக்கொண்டு உள்ளது.
இவ்வாறு இருக்க சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை அனானிமஸினால் “பன்டோரா ஆவணங்கள்” மூலம் அண்மையில் வெளியிட்டப்பட்டது.
இதில் தெற்காசியா நாடான இலங்கையின் ஊழல் ஆட்சியாளர்களின் சொத்து விபரங்களையும் வெளியிட்டு ஆசியா நாடுகளில் பிரசித்திபெற ஆரம்பித்தது.
அதற்கமைய பன்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் முன்னாள் நிதி பிரதி அமைச்சரும், இலங்கையின் தற்போதை அதிபரின் உறவினருமான
நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) 35,000,000,000 ரூபாய் சொத்து மதிப்பீட்டை வெளியீட்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி 2022 பெப்ரவரியில் தேசிய பணவீக்க விகிதம் 17.5% ஆக அதிகரித்துள்ளது. 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் களுத்தை நெரித்துள்ளது. இவ்வாறு இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை தொட்ட நிலையில் பொருட்களின் விலையேற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தி பாரிய சரிவு , சமையல் எரிவாயு தட்டுப்படு, போதிய இறக்குமதி இல்லை, நாளுக்குநாள் வாழ்கைச்செலவு கூடிக்கொண்டு செல்கிறது. மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அயல் நாடுகளுக்கு
செல்கின்றனர்....
இன்னொரு புறம் நாடுபூராக கோத்தா அரசு நாட்டை வெளியெறங்கவேண்டும் (Gota Go Home ) என்ற கொஷத்துடன் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனானிமஸ் (Anonymous) குழு இலங்கை அதிபருக்கும் ராஜபக்ஷ அரசுக்கும் 14 நாள் அவகாசத்தை கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
14 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு புதியவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்ஷ குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனவும் எச்சரித்துள்ள நிலையில் ராஜ மக்ஷ குடும்பத்தின் உகண்டாக பினாமிகள் சம்பந்தமான புதிய செய்தியையும் வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 3 சரக்கு (காகோ) விமானங்களின் மூலம் 102 டன் கரன்சிகள் உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மாத்திரம்ல்லாம் ராஜபக்ஷ குடும்பத்தின் பல நிறுவனங்கள் பினாமியூடாக செய்ற்பட்டு வருவாதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.
* செரினிட்டி குரூப் லிமிடெட்
Serenity Group Limited, Plot 20, 30 Naggulu Vale Road, Kampala, Uganda
* தரையில் கான்கிரீட் உற்பத்தி வேலைகள் (கிழக்கு ஆப்பிரிக்கா கான்கிரீட் தயாரிப்புகள் லிமிடெட்)
EACPL, East Africa Concrete Products Limited, 2 Naguru Dr, Kampala, Uganda
* ரியல் எஸ்டேட் நிறுவனம் ( ரியல் எஸ்டேட் நிறுவனம் )
iBM Ready Mix Concrete Supply Company Ltd, Kampala, Uganda
*நைல் ஹெவி இன்ஜினியரிங் நிறுவனம் (NILE ஹெவி இன்ஜினியரிங் நிறுவனம்)
NILE HEAVY ENGINEERING Ltd.
*கஃபே சிலோன் நிறுவனம்
CAFÉ CEYLON Ltd.
*எலிட்ரோ குளோபல் நிறுவனம்
Elitro Global Private Limited
*ரோஸ்மோர் எஸ்டேட்ஸ் நிறுவனம்
Rossmore Estates Pvt Limited
*ரெடெக்ஸ் நிறுவனம் (குளோபல் ரேடெக்ஸ் நிறுவனம் )
Global redex Uganda Ltd.
THE BAKEHOUSE Ltd.
Steel Pole Construction Uganda Ltd.
Serenity Solutions Co Ltd, Kampala, Uganda
இந்த நிறுவனங்கள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானவை எனவும்
ஆனால் இதன் பணிப்பாளர்களாக வேலுப்பிள்ளை கணநாதன்
தேவக மற்றும் ருவன் ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.எனவும் பல செய்திகள் மற்றும் அதனை உறுதிசெய்யும் ஆவணங்களும் வெளியாகியுள்ளது.
அனானிமஸின் செயற்பாடு இலங்கையின் ராஜபக்ஷ குடுப்பத்திற்கு பாரியோதோர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது...