Monday, June 27, 2022

இலங்கையில் அரபு மொழி வளர்ச்சி

ஆய்வுக் கட்டுரை 
தொடர் 01

இலங்கை மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடர்புகள்.


இலங்கை-மத்திய கிழக்கு நாடுஙளுடனான தொடர்புகளை பின்வரும் விடையங்கள் மூலம் எமக்கு அறிந்து கொள்ள முடியும். 

*அரபு நாணையங்கள்
*அரபு பிரயானிகளின் குறிப்புகள்
*அரபுக் கல்வெட்டுகள் 
*மஸ்ஜித்கள், கல்லறைகள், நினைவுத் தூபிகள். 
*முஸ்லிம்கள் மத்தியில் கானப்படும் மரபுவழிக் கதைகள்

இவற்றினூடாக இலங்கை  மத்தியகிழக்கு நாடுகளுடன்  வைத்திருக்கும் தொடர்பை எமக்கு அவதானிக்க முடியும். 

இலங்கை மத்தியகிழக்கு தொடர்பை பொறுத்தமட்டில்  கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே அரேபியர்களுக்கும் இலங்கைக்குமிடையில் வர்த்தக தொடர்பு நிலவிவந்துள்ளது. 

* ஆரியர் வருவதற்கு முன்னரே இலங்கையில் அரேபியர் குடிபுகுந்துள்ளனர். 
(விஜயன் அவனது 700 தோழர்களுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னரே  கி.மு 453 இல் இலங்கையில் எமனியர்கள் வாழ்ந்துள்ளதாக (Wilhelm Geigr) என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். 

*கி.மு.377ல்  பண்டுகாபய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தலைநகரான  அநுராதபுரத்தில் அரேபிகளுக்கென தனியான வீடுகள் இருந்துள்ளதாக வரலாறுகள் உறுதிப்படுத்தியுள்ளது.(அந்திரியெஸ் நெல்) 

*கடந்த 2000 ஆண்டுகளாக  அரேபியர் இலங்கையில் குடியிருப்பதால் வேடர்களையும் ஏனைய பழங்குடிகளைப்போன்று அவர்களும் இன்நாட்டின் பழங்குடிகள்தான் என்று பிரபல அகழ்வாராய்ச்சியாளர் கலாநிதி பாலேந்திரா  என்பவரின்கூற்றாகும்.

* உரோம வரலாறு ஆசிரியர் பிளினியின் கருந்துப்படி கிறுஸ்துவ ஆண்டு தொடங்கும் முன்னரே அரேபியர் இலங்கையில் குடிகளாக வாழ்ந்துள்ளனர். என்ற கருத்தை கூறுகிறார்.

*சீன யாத்திரிகரான பாக்கியன் தேரர் என்பவர் அவரது தேச சஞ்சார அறிக்கையில் கி.பி.414 இல் அநுராதபுரத்தில் அரபு வணிகர்களை சந்தித்ததாகவும் அவர்களின் வீடுகள் அழகாக காட்சியளித்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இலங்கையின் நான்காவது பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (SWRD-Solomon West Ridgeway Dias Bandaranaike ) அவர்களின் கூற்றின்படி  இலங்கை எந்தளவிற்கு பழமைவாய்ந்ததோ அந்தளவிற்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களும் பழமையானவர்களே என்ற கூற்றை முன்வைத்துள்ளார். 


இலங்கை - மத்திய கிழக்குக்குநாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கான  காரணங்கள்

* இலங்கையில்  சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையின் எல்லையில் அமைந்திருக்கும்
பாவா ஆதம் அலை தொடர்பு ( பெளத்தர்கள்- சிறிபாத மலை என்றும் , தமிழர்கள்-சிவனொளிபாதமலை என்று கூறுவார்கள். 

*அரேபியர்களின் கிழக்கு, மேற்கு வர்த்தகப்பாதையின் மையமாக இலங்கை கானப்பட்டமை. 

*இலங்கை இருக்கும் இயற்கு துறைமுக வசதி. (உ+ம். திருகோனமலை துறைமுகம்) 

* வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வனிகத்தின் பிதாவாக ரோமர்கள், பாரசீகர்கள், அபீசீனியர்கள் திகழ்ந்தமை. 

*அரேபிய-பாரசீக வனிக குழுக்கள் தங்கிச்செல்லும் மத்திய நிலையமாக இலங்கை காணப்பட்டமை. 

*அரேபிய வனிகர்களுக்கு சூதேச மன்னர்கள் மற்றும் மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றமை. (சுதேச பெண்களை அரேபியர் திருமணம் செய்தமை) 

* இலங்கையில்  சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையின் எல்லையில் அமைந்திருக்கும்
பாவா ஆதம் அலை தொடர்பு ( பெளத்தர்கள்- சிறிபாத மலை என்றும் , தமிழர்கள்-சிவனொளிபாதமலை என்று கூறுவார்கள். 

*அரேபியர்களின் கிழக்கு, மேற்கு வர்த்தகப்பாதையின் மையமாக இலங்கை கானப்பட்டமை. 

*இலங்கை இருக்கும் இயற்கை துறைமுக வசதி. (உ+ம். திருகோனமலை துறைமுகம்) 

* வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வனிகத்தின் பிதாவாக ரோமர்கள், பாரசீகர்கள், அபீசீனியர்கள் திகழ்ந்தமை. 

*அரேபிய-பாரசீக வனிக குழுக்கள் தங்கிச்செல்லும் மத்திய நிலையமாக இலங்கை காணப்பட்டமை. 

*அரேபிய வனிகர்களுக்கு சூதேச மன்னர்கள் மற்றும் மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றமை. (சுதேச பெண்களை திருமணம் செய்தமை) 

இலங்கை மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள்.

மகாவம்சம் கி.மு.4 நூற்றாண்டளவி
ல் அநுராதபுரத்திற்கு மேற்குப்புரமாக யோனர்களுக்கு ( Yonas) ஒதுக்கப்பட்டிருந்த இடம் பற்றி குறிப்பிடுகின்றது. பாரதியாரின் கவிதையிலும் யோனர்கள் ( Yonas) சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை Dr willhem என்ற வரலாறு ஆசிரியரும் உறுதி செய்துள்ளார்.  

கி.மு.4 நூற்றாண்டளவில் தென்மேற்கு ஆசியாவில் பெரும் நிலப்பரப்பை ஆண்ட  சுலைமான் (அலை )அவருடைய ஆட்சிக் காலத்தில்  அவருக்கும் அவரது மணைவிக்கும் இலங்கையின் பெறுமதிமிக்க இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பாளிப்பாக கிடைத்ததாக சில குறிப்பு சில அரபு நூல்களில் எழுதப்பட்டுள்ளது. 

கி.மு.1நூற்றாணடளவில் அரேபிய வணிகத்தொடர்புகள் இலங்கையில் அரேபியர் தங்கி இருக்கவும்,  குடியிருப்புக்களை ஏற்படுத்தவும் காரணமாகியது. SD Goitien தொகுத்துள்ள  '' அரேபியரின் வணிக நடவடிக்கைகள் பற்றிய கடிதங்களின் தொகுப்பு '' என்பதில் பின்வரும் தகவலைக் குறிப்பிடுகின்றார். 

அறபு வணிகர்கள் இந்துசமுத்திரப் பிரதேசங்களில் வியாபார நடவெடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை  அவர்கள்  தமது மணைவிமார்களையும் அங்கு அழைத்துச் செல்லவில்லை.  வருவக்காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ,கஷ்டங்கள் , பிரிவுத் துயரங்கள் போன்றவற்றை அவர்களின் கடிதங்கள் மூலம் எமக்கு அறிந்து முடியும். 

இவ்வாறு அரேபியர்கள் மேற்கிந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு  வந்து வாசனைத் திரவியங்கள், இரத்தினக்கற்கள், யானைத் தந்தங்கள். போன்றவற்றை வியாபாரம் செய்தனர். இவ்வாறு வந்த அரேபியர்கள் இங்குள்ள பெண்களை திருமணம் செய்து குடியேற்கங்களை அமைக்கவும் ஆரம்பித்தனர். 

கிரேக்கர்கள் இந்தியாவை அறிவதற்கு முன்னரே அரேபியர் இலங்கையை அறிந்து கொண்டனர். எகிப்து மாலுமியான உறிப்பலஸ் பருவப்பெயர்ச்சி காற்றைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்வதற்கு முன்னரே அக்காற்றை பயன்படுத்தும் அறிவையும் துணிவையும் அறபிகள் பெற்றிருந்தனர். 
கி.பி 4/5 நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் சூறத், மங்களூர், கள்ளிக்கோட்டை, கொல்லம், மலபாரில் உள்ள துறைமுகங்கள் போன்றவற்றிலும் இவர்கள் வர்த்தகத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். பின்னர் கி.பி. 9 ம் நூற்றாண்டில் அரேபிகளின் வரத்தகம் உச்சநிலையை அடைந்தது. 

மலபார் ,ம உயர் பிரதேசங்களில் இருந்து இலங்கை வந்து போகலானார்கள். சீனா யாத்திரரான பாக்கியன் தேரர் தனது குறிப்பில்  கி.மு. 414 இல் தென் அரேபிய வர்த்தகர்களை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இது  அரேபிய இலங்கை உறவை எடுத்துக்காட்டுகிறது. 


இஸ்லாம் அரேபியாவில் அறிமுகமான பின்னர் முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு



 கி.பி.610 இல் இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் தோற்றம் பெற்றது.  இஸ்லாத்தைப் போதிதித்த முஹம்மத் (ஸல்) அவர்கள் தலைமையில் அரேபியர் ஒன்றுதிரட்டப்பட்டார்.  இதனால் இஸ்லாத்தின் பலம் அதிகரித்து அயல் நாடுகளான  எகிப்து, ஈராக், ஈரான், சிரியா,யெமன், போன்ற நாடுகள் அவர்களால் வெற்றி கொண்டனர். இவ்வெற்றியை அடுத்து  ஈரான், எகிப்து, சிரியா போன்ற  நாடுகளின் கடல் வழி தரைவழிப்பாதை முஸ்லிம்கள் வசம் வந்தன. 

அதேபோன்று கைப்பபட்டப்பட்ட சில நாடுகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு  அரபு மொழி கற்கவேண்டிய  தேவை ஏற்பட்டது. காரணம் நாட்டை கைப்பற்றிய முஸ்லிம்கள் அரேபிகளாக இருந்த காரணத்தினாலும் அவர்கள்  அரபு மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்தியதனாலும் சுதேசிகள் அரபு மொழியை கற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதேபோல் அவர்களில் வியாபாரத்திலும் அரபு மொழியை பயன்படுத்தினர். 
இவ்வாறு கற்றவர்கள் கீழைத்தேய நாடுகளுக்கு வரலானார்கள் இதன் விழைவாக இலங்கையில் அரபு அறிமுகமானது.  அரேபியர்கள் இஸ்லாத்தின் வருகைக்குமுன் கீழைத்தேய நாடுகளில் வியாபாரம் செய்தாலும் பெரிதாக அறிமுகமாகவில்லை காரணம் இஸ்லாத்திற்கு முன் அரபுநாடுகள் ரோம்  பாரசீக எல்லைப்புற நாடுகளாக இருந்தது.  அதேபோல் அரபு மொழி பொருட்படுத்தப்படாத மொழியாக இருந்தது.  இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரே அரபு மொழி சர்வதேச மொழியாகவும், முஸ்லிம்களின் இஸ்லாத்தின் மொழியாகவும் அரபு நாடுகள் பலம் பொருந்திய அரசாகவும்  மாறியது.  





இலங்கைக்கும் மத்திய கிழக்கிற்குமான தொடர்பினை பின்வருமாறு இருக்கமுடியும்.

1.இலங்கை அரேபிய உறவுகள்
2.இலங்கை எகிப்திய உறவகள் 
3 இலங்கை பாரசீக உறவுகள் 





இவ்வாறு குடியேறிய அரேபிகள் நபி ஸல் அவர்களின் நுபுவத்தின் (நபித்துவம்) பின்னர் இலங்கையிலும் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது.