.
@இதை உலகிற்கு எத்திவையுங்கள்@
-----------------------------------------------------------------
அறிமுகம்
________________
01 ) புவியல் அமைப்பு
வடக்கு - சீனா
கிழக்கு - தீபெத்
மேற்கு - பாகிஸ்தான்
தெற்கில் - இந்திய ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ள பிரதேசமே "ஜம்மு காஷ்மீராகும் " 151360 சதுர கிலோமீட்டர் ( km ) நிலப்பரப்பில் 63 % சதவீதமான நிலப்பரப்பு இந்தியாவில் கீழ் பகுதிலும் 37% சதவீதமான நிலப்பரப்பு ஆசாத் காஷ்மீராக பாகிஸ்தானுடனும் சேர்ந்து உள்ளது .
இதில் பிரம்மாண்டமான மலைத் தொடர்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள் , பனிப்பாறைகள் மற்றும் தோட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. இதனால் இதை " பூலோக சுவனம் " என்று வர்ணிக்கப் படுகின்றது .
02 ) சனத்தொகை
இந்திய ஆக்கிரமிபு காஷ்மீரின் 2011 ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி மொத்த சனத்தொகை 12.55 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது .
03 ) அரசியல் வரலாறு
இதன் அரசியல் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது . இதன் ஆரம்ப கால ஆட்சியாளராக காஷியப்பனின் மகன் நீல் என்பவரே காஷ்மீரை முதலில் ஆட்சி செய்தவர். கி.மு.,322 முதல் கி.மு.,185 வரையிலான காலகட்டத்தில் மவுரிய பேரரசும், கி.பி.100ல் குஷான் பேரரசும் காஷ்மீரை ஆட்சி செய்தன. கி.பி., 1200ம் காலகட்டத்தில் தான், காஷ்மீர் மண்ணில் இஸ்லாமியர்கள் காலூன்றினர்.
கி.பி., 1327ல் காஷ்மீரை ஆட்சி செய்த இந்து மன்னர் ரிச்சன் ஷா என்பவர், மத்திய ஆசியாவை சேர்ந்த, அப்துர் ரஹ்மான் புல்புல் என்பவரால் மதம் மாற்றப்பட்டார். உதைனா தேவா தான் காஷ்மீரை ஆட்சி செய்த கடைசி இந்து மன்னர். 1346ல் உதைனா தேவாவிடம் இருந்து, சம்சுதீன் லுடுட்மஸ் எனும் துருக்கி சுல்தான், ஆட்சியை கைப்பற்றினார். அடுத்த 4 நூற்றாண்டுகள், ஆப்கன் நாட்டினரின் கட்டுப்பாட்டில் காஷ்மீர் இருந்தது.
1586ல் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் கீழ் வந்தது. பின், முகலாயர்களை வீழ்த்திய துரானி பேரரசு, காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. அகமது ஷா துரானி 1757 முதல் 1819 வரை காஷ்மீரின் மன்னராக இருந்தார். 1819ல் துரானியர்களை வீழ்த்திய ரஞ்சித் சிங், சீக்கிய ஆட்சியின் கீழ் காஷ்மீரை கொண்டு வந்தார். 1846ல் ஆங்கில அரசு, சீக்கியர்களை வீழ்த்தி, காஷ்மீரை கைபற்றியது. பின்னர் ஆங்கிலேயர் காஷ்மீரை " அம்றிஸ்ராஜ் " ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான " குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்க்கு ஆங்கிலேயர் விற்றுவிட்டார்கள் . குலாப் சிங் ஜம்முவி அரசனாக மாறினார் .
குலாப் சிங் 1857 இல் இறந்தார் . இவரை அடுத்து றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இருவரும் ஆட்சிக்கு வந்தனர் .இறுதியாக வந்த ஆட்சியாளரே " ஹரிசிங் " ( 1925-1947 ) இவர் 80% மான மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தார் முஸ்லிம்களை அடக்கி ஆண்டார் . இவரின் அட்டூளியத்தை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் இவருக்கு எதிராக தொடர்ந்தும் கிளர்ச்சி செய்து வந்தனர் . 1931 ல் " டொக்ரா " படுகொலைகள் மூலம் முஸ்லிம்களை இவர் அடக்கினார் .
பல்வேறு தேசங்களாக இருந்து வந்து இந்திய உபகண்டங்கள் சுதந்திரம் பெற்ற போது காஷ்மீர் பிரதேசமும் ஒரு தேசமாக மஹாராஜா ஹரிசிங் என்ற இந்து மன்னரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது . ( காங்கிரஸ் கட்சில் முக்கிய தலைவர்களில் இருக்கும் "" கரண் சிங்கின் " தந்தையார் ) அப்போது ஆட்சி செயதுவந்தார் .
காஷ்மீரில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம் என்ற காரணத்தினால் அதை இந்தியாவுடன் சேர்ப்பதா ? அல்லது பாகிஸ்தானுடன் சேர்ப்பதா என்ற குழப்ப நிலை வந்தது . ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்றார்கள் மக்களோ பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்றார்கள் . தனது கொடுங்கோன்மையை மேலும் பலப்படுத்த மக்களின் எதிர்ப்புக்கு எதிராக 1947 ஒக்டோபர் 26 இல் சுயாட்சி அடிப்படையில் ஹரிசிங் இந்தியாவுடன் சேர்ந்து கொண்டார் .
பின்ர் மக்கள் எதிர்புகள் மேலோங்கியது இதை அடக்குவதற்கு ஹரிசிங் இந்திய இராணுவத்தின் உதவியை வைத்து காஷ்மீர் மக்கள் மீதான பிடியை இறுக்கினார் . இதன் விளைவாக இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தம் செய்ய தயாரானது . இந்தியா எல்லையில் இருந்து இந்திய இராணுவமும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீருக்குல் ஊடுருவின . காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது . அதை சுதந்திர காஷ்மீர் ( Azad kashmir ) என பாகிஸ்தான் கூறுகின்றது ஆனால் அதை இந்தியா ஆகிரமிப்பு காஷ்மீர் ( Pakistan Occupeid kashmir - pok ) என்று கூறுகின்றது . பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதி போக மீதி எஞ்சிய மூன்றில் இரு பகுதியை இந்தியா கைப்பற்றிக் கொண்டது . மக்களும் அதிர்த்தி நிலையில் தொடர்ந்தும் இருந்தார்கள் ஆங்காங்கே மக்களின் எதிர்ப்பு ஊர்வலங்களும் மேட் கொள்ளப் பட்டது ... இதனால் இந்திய இராணுவத்தின் நசுக்கல்கள் அதிகரித்து . இதை எதிர் கொண்ட காஷ்மீர் மக்கள் போராட ஆரம்பித்தார்கள் .
இதன் விளைவாக 1989 வரை ஒழுங்கு படுத்தப்பட்ட ஆயுதக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் தோற்றம் பெறவில்லை . ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை சுமார் 93,379 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து 6, 974 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் . இவர்களால் 1,05,866 வீடுகள் அழிக்கப்படும் தீவைக்கப்பட்டும் உள்ளது .
அதேபோல் இவர்களால் 22, 734 பேர் விதவையவும் , 1,07,366 பேர் அநாதையாக்கப்பட்டும் , 9,946 பேர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு மற்றும் மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் என்று காஷ்மீர் ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்டும் வருகின்றது .
அது மாத்திரமல்லாது RSS என்ற இந்தியாவின் பெரும் இனவாதக் குழுக்களின் கட்சியான " பா. ஜ. க . என்ற கட்சியில் தற்போது உள்ள இந்தியாவின் பிரதமர் "நரேந்திரமூடி " காஷ்மீர் மானில முதல்வர் ஆனபோது . ஆட்சிக்கு எதிராக இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என இனப் படுகொலை என்ற பெயரில் இல்லாமல் மக்கள் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று கொன்று குவித்தார்
இதனால்தான் பிரதமர் மூடிக்கு அமெரிக்கா அரசு அமெரிக்க செய்வதற்கு தடைவிதித்து ஆனால் அவர் இந்தியாவின் பிரதமர் ஆனபோது அந்தத் தடையை அமெரிக்க அரசு இல்லாமல் ஆகியது .
இப்படிப்பட்ட ஒருத்தனைத்தான் உலகம் ஆட்சி யாளனாக தேர்ந்தெடுத்துள்ளது
இதுதான் ஜனநாயக உலகா ?
.
உசாத்துனை நூல்கள்
01) காஷ்மீரின் துயரம் ( இணையக் கட்டுரை )
02) காஷ்மீர் என்ன நடக்கின்றது அங்கே ?
( மார்க்ஸ் பேரா )
அஷ்ஷெய்க் ஹபீஸுல்ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை