Friday, March 11, 2016

மொலானா மெளதூதி ( ரஹ் ) அவர்களின் வரலாறு

20 ஆம் நூற்றாண்டில் இந்திய உபகண்டம் பெற்றெடுத்த தலைசிறந்த   சீர்திருத்தவாதி.  மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

இவர் ஜமாதே இஸ்லாம் எனும் இயக்கத்தை உருவாக்கியவர். யுகப் புரட்சியை இஸ்லாம்தான் நிறைவேற்றும் என்ற எண்ணத்தை எமது உள்ளங்களில் விதைத்தவர். இவருடைய சிந்தனைத் தாக்கம் ஆசியாக் கண்டம் மட்டுமல்லாது ஆபிரிக்கா வடஅமெரிக்கா தென்அமெரிக்கா அவூஸ்திரேலியா ஐரோப்பா பேன்ற கண்டங்களிலும்  பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது . இஸ்லத்தின் வளர்ச்சிக்கு மௌலானா மௌதூதி ( ரஹ்) அவர்களின் பங்களிப்பை எம்மால் அளவிட முடியாது.

இவர் 1903 செப்டம்பர் (september ) 25 இல் ஹைதராபாத்தைச்சேர்ந்த ஒளரங்காபாத் என்னும் பிரதேசத்தில்  பிறந்தார். அவரது தந்தை செய்யித் அஹ்மத்;ஹஸன் இவர் அலிகார் ஆங்கில ஓரியன்ட் கல்லூரியில் படடித்து பின்னர் அலஹாபாத்தில்; சட்ட தொழில் நடத்தியவர். என்றாலும் அவர் ஆன்மீக வழியில் ஈர்க்கப்பட்டதன் காரணமாக மௌலானா மௌதூதியின் ஆன்மீக நடத்தைக்கு வித்திட்டது. இவருடைய தாயாரின் பெயர் ருகையாபேகம் இவர் புகழ்பெற்ற உறுதுக் கவிஞர்  மிர்ஸா குர்பான் அவர்களின் புதல்வியாவார்.  

தனது தந்தையிடம் ஆரம்பக் கல்வியைக் கற்ற  மௌலானா மௌதூதியி ( ரஹ் ) அவர்கள் பின்னர் மார்க்கக் கல்வியை பவூகானியா என்ற மத்ரஸாவிலும் கற்று பின்னர் தனது 11 ஆம் வயதில் மௌலவிப் பட்டம் பெற்று வெளியேறினார். அதேபோல் இவர் தனது 11ஆம் வயதிலேயே அறபு நூல்களை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார். எடுத்துக்காட்டாக அப்போது எகிப்தைய புகழ்றெ;ற எழுத்தாளரான “காஸிம் அல்பேனியின் “அல் மர்ஆ அல் ஜதீதா (நவீன காலப் பெண் ) என்ற நூலை உறுது மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.

பின்னர் தனது உயர் கல்வியை ஹைதராபாத் தாருல் உலூமில் கற்றுக் கொண்டிருந்த்போது தனது தந்தை நோய்;வாய்ப்பட்டதன் காரணமாக தனது உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. பின்னர் தனது சொந்த முயற்சியில் கல்வி கற்க ஆரம்பித்த அவர் தனது 17 ஆம் வயதில் தாய் மொழியான உறுது மொழியிலும் அறபு பாரசீகம் ஆங்கிலம் பேன்ற நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார் . 

அதன்பிறகு மௌலானா மௌதூதி (றஹ்) அவர்களின் மூத்த சகேதரரான  அபுல் கைருடன்  இதழியல் பணியில் ஈடுபட்டு வந்தார் . அவருடைய சகேதரரான அபுல் கைதருடைய மரணத்தைத் தொடர்ந்து தான் பொறுப்பெடுத்து  சிறப்பாக நடாத்தி வந்தார் . இதன் காரணமாக இவரது எழுத்துப் பணி கட்டம் கட்டமாக வளர ஆரம்பித்தது . 1918 இல் பிஜ்ஜானூரிலிருந்து வெளிவந்த ‘அல் மதீனா “ என்ற சஞ்சிகையின் ஆசிரியரக இணைந்தார் . சுமார் 1 ½ வருடம் பணிபுரிந்த பிறகு 1920 இல் ஜபலூரிலிருந்து வெளிவந்த “தாஜ்” என்ற சஞ்சிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்  . அதே சமயம் டில்லியில் இருந்து வெளிவந்த ஜம்இயதுல் உலமாவின்  ( அல் முஸ்லிம் ) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவூம் கடமையாற்றினார் . 

1923 இற்குப் பிறகு 1 ½ வருடம் தனது  உயர்கல்விக்காக செலவிட்டார் . பின்னர் “அல் ஜம்மியத் “ என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார் . இந்த சஞ்சிகை ஜம்இயத்துல் உலமா ஹிந்தின் முக்கிய சஞ்சிகையாக இருந்தது . இவர் 1925-1928 வரை சுமார் மூன்று வருடங்கள் கடமையாற்றி அதை சிறந்தஒரு சஞ்சிகையாக மாற்றினார் . பின்னர் ஹைதரா பாத் சென்று மொழி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தன்னை ஈடுபடுத்தினார் .  1927- 1928 கால கட்டங்களில் ( Asafiyah jyhasty of hydera bad ) ஹைதராபாத் அரச குடும்பம் மற்றும் ( A history of the seijuk trukiss  )   செல்ஜுகியர் வரலாறு அதேபோல் ( Toward unders tanting islam  )  இதுதான் இஸ்லாம் என்ற புத்தகத்தையூம் எழுதினார் . இந்தப் புத்தகங்களினூடாக மௌலானா மௌதூதி ( ரஹி ) அவர்களுக்கு தென்னிந்தியாவிலும் அறபுலகிலும்  பெரும் வரவேற்பு கிடைத்தது .

அதன் பின்னர் ஈரான் நாட்டின் அறி;ஞரான “ஸத்ருத்தீன் முஹம்மத் ஸிராஸ் “ எழுதிய  “அஸ்பருல் அர்பஆ” என்ற நூலை உறுது மொழியில் மொழிபெயர்த்தார் . சுமார் 3500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் உஸ்மானிய பல்கலைக் கழகத்திற்காக மொழிபெயர்க்கப்பட்டது . இவ்வாறு இமாம் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது சிந்தனைகளை புத்தக வடிவிலும் புது சஞ்சிகைகள்  வடிவிலும் மக்களுக்கு கொடுத்து வந்தார் . பின்னர் 1932 இல் ஹைதராபாத் வந்த  மொலனா மொதூதி (றஹ் ) அவர்கள் அங்கு “தர்ஜுமனுல் குர்ஆன் “ எனும் சஞ்சிகையை ஆரம்பித்து இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் இயக்கம் பற்றிய சிந்தனைகளை எழுதி மக்களின் நன்மதிப்பையூம் மக்களின் ஆதரவையூம் திரட்டினார் . இந்த சஞ்சிகையiனூடாக தென்னிந்தியா முழுவதும் இந்த சிந்தனை பரவியது . 1925 september  27 இல் “ கேசவப் பல்லாராம் ஹெட்கேவர்”  என்பவரால் நாக்பூரில்  R.S.S.  என்ற இந்து இனவாத அமைப்பு உருவாக்கப்பட்டது . இவர்களுக்கு 1927 April  முதல் June  15 வரை நாக்பூர் பயிற்சி முகாம்களில் பயிற்சியளிக்கப்பட்டுவந்தது . இதன் விளைவாக 1940 இல் இந்து வகுப்புவாதமும் முஸ்லிம் இனவாதமும் வலுவடைந்து வந்தது . இதன்காரணமாக  மௌலானா மௌதூதி ( றஹ்) அவர்கள் “தர்ஜுமனுல் குர்ஆன் “ என்ற சஞ்சிகையில் தெடர்ந்து இஸ்லாமிய இயக்கம் உருவாக்கப்படுவதன் அவசியத்தை எழுதிவந்தர் . இதற்கமைவாக 1941 August  25  அன்று ஜமாத்தே இஸ்லாம் என்ற இயக்கத்தின் முதல் கூட்டம் ‘ தர்ஜுமனுல் குர்ஆன் ‘ அலுவலகத்தில் நடைபெற்றது . இப்படி சிறு குழுவேடு ஆரம்பித்த மௌலானா மௌதூதியின் இந்த இயக்க சிந்தனை 1941 இன் பிறகு பெரும் வளர்ச்சி கண்டது . அதேபோல் பல சவால்களையூம் எதிர்கொண்டது .

இதன் விளைவாக 1948 இல் October   14 அன்று மௌலானா மௌதூதி ( ரஹ்) அவர்களும் அவருடைய தோழர்களும் “ இஸ்லாமிய ஆட்சியை ஆதரித்தும் அந்நாட்டின் பிரிட்டிஷ் அரசியல் சட்டத்திற்கு எதிராக மக்க்ளிடம் பிரச்சாரம் செய்ததாகச் சொல்லி பாகிஸ்தானிய அரசு  சிறையில் அடைத்தது . அதன்பின்னர் 1953 இ 1966 ஆண்டுகளிலும்; பாகிஸ்தானிய அரசு அவரை  சிறையில் அடைத்தது . 1962 இல் மௌலானா மௌதூதி ( ரஹ்) அவர்கள் “ராபிதத்துல் ஆலமி இஸ்லாமின் உலகமாநாட்டில் கலந்து கொண்டு அதன் நிறுவன உறுப்பினரானார் . அதன் பின்னர் 1947 க்குப்பின் அறபு மொழியில்; மொழிபெயர்க்கப்பட்ட  அவரது நூல்கள் அறபுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது . அவர் எழுதிய “இதுதான் இஸ்லாம் “ என்ற நூல் உலகில் பல மொழிகளில் உலாவந்தது . இதன் காரணமாக 1979 இல் அவருக்கு இஸ்லாமிய சேவைக்காக  “பைஸல் விருது “ கிடைத்தது . பின்னர் 1979 September  22 அன்று மௌலானா மொதூதி (ரஹ்) அவர்களின் உயிர் இவ்வூலகை விட்டுப்பிரிந்தது .

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .
இதுதான் தென்னிந்திய இஸ்லாமியப் புரட்சியாளனின் தியாக வரலாறு .

ஆக்கம்
ஹபீஸூல் ஹக் (பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment