உலகில் பல மொழிகள் தோன்றி அழிந்துள்ளது ஆனால் அரபு மொழி இன்றுவரை காலத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சி கண்டு கொண்டே வருகின்றது . அதன் சொல் வளமாக இருக்லாம் , அதன் கருத்தாக்கங்களாக இருக்கலாம் , அதன் ஓசை நயமாக இருக்கலாம், இப்படி எந்த ஒரு மொழியும் கொண்டிராத ஒரு சிறப்பு எமது அரபு மொழிக்கு உள்ளது.
உலக வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழிக்கும் , ஒவ்வொரு மதத்திற்கும் அம் மொழியை அடிப்படையாக கொண்ட தனியான சிறப்பம்சங்கள் உள்ளது அதில் பிரதானமான அம்சம்தான் கலை அம்சம். இக்கலையம்சமானது எமது அரபு மொழிகளுக்கும் உள்ளது. இன்று அரபு மொழி சர்வதேச மொழியாகவும் உலக மக்கள் பயன்படுத்தும் நான்காவது மொழியாகவும் பிரசித்திபெறுவதற்கு இக்கலையம்சமும் ஒன்று.
இஸ்லாமி கலாச்சார மரபுரிமையை அடையாளப்படுத்தும் அரபு எழுத்தணி கலையைப் பயன்படுத்தியே அன்றைய நபித்தோளர்கள் குர்ஆனிய வசனங்களையும் ஹதீஸ்களையும், ஏடுகளிலும் பட்டைகளிலும், ஒட்டகை எலும்புகளிலும், ஈத்தம்மர ஒலைகளிலும், எழுதிப் பாதுகாத்துள்ளார்கள். எமது குர்ஆன் கூட (#கத்துல்கூபி) என்ற எழுத்தணி வடிவில் எழுதப்பட்டு இருப்பது எமக்கோர் மூலசான்றாகும்.
இது நபிஸல் அவர்களின் ஆட்சிக் காலம் , குலபாவு றாஷிதுகளின் ஆட்சிக்காலம், உமையாக்களின் ஆட்சிக் காலம் , அப்பாஸியர்களின் ஆட்சிக்காலம், உஸ்மானியர்களின் ஆட்சிக் காலம் , பாதிமிக்களின் ஆட்சிக் காலம் , மம்லூகியர்களின் ஆட்சிக் காலம் , மொகலாயர்களின் ஆட்சிக் காலம் என்று காலாகாலமாக வளர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்தக் கலை உமையாக்களின் ஆட்சிக்காலத்திலும், அப்பாஸியர்களின் ஆட்சிக்காலத்திலும் பெரிதும் வளர்ச்சி கண்டது . இதன் தாக்கத்தை பக்தாதில் இருக்கும் கட்டிடக் கலையிலும் , இஸ்பேனில் இருக்கும் கட்டிடக் கலைகளிலும் எம்மால் அவதானிக்க முடியும்.
ஆனால் துரதிஷ்ட வசமாக அரபு அலங்காரமிட்டு பாதுகாத்து வந்த எமது வரலாறு முதுசங்கள் அழிந்து கொண்டு வருகின்றது. ஒரு புறம் யுத்தத்தாலும் இன்னொரு புறம் சமூக அக்கரை இன்மையாலும் அழிந்து கொண்டு வருகின்றது. இதற்கு நல்லதோர் உதாரணம் #அரபு_வசந்தம் . இதனால் ஈராக் ,சிரியா யெமன் , லிபியா போன்ற நாடுகளில் அமைந்திருந்த எமது பாரம்பரிய கட்டிடங்கள் , எமது வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்பட்டமைக்கான சிறந்த சான்று.
அதேபோல் நவீன நாகரிகம் என்ற பெயரில் எமது பாரம்பரிய இஸ்லாமியக் கட்டிடக் கலைகளை அழித்துவிட்டு புதிய புதிய கட்டிடக் கலைகளை நாம் அறிமுகம் செய்து வருகின்றோம். இதன் விளைவு என்னவென்றால் எமது வரலாறுக்கான சான்றுகள் அழிந்து கொண்டே வருகின்றது.
இதற்கான விளைவை இலங்கை முஸ்லிம்களாகிய எமக்கு நன்றாக அவதானிக்க முடியும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று சான்றுகள் தெளிவாகப் பதியப் படாததன் காரணமாகவும் எமது இஸ்லாமிய கட்டிடக் கலையின் எச்சங்களை அழித்ததன் காரணமாகவும் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு வரலாற்றுச் சான்றுகளை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.
இன்று எமது அரபு எழுத்தணி எமது முஸ்லிம் சமூகத்தைவிட்டு அழிந்து வருவதற்கான இன்னுமொரு காரணம் அரபு எழுத்தணிமூலம் எந்தப் பயனும் இல்லை என்று நாங்கள் அதை ஒதுக்கி வைத்துள்ளோம். அப்படியல்ல அரபு எழுத்தணிமூலம் எமக்கு அதிகப் பயன் உள்ளது. இஸ்லாம் அழகியல் உணர்வை ஊக்குவிக்கின்றது ஆனால் நாங்கள் அதைப் புறக்கணித்து விட்டு வாழ்கின்றோம். இஸ்லாமிய வரலாற்றில் கட்டிடங்களையும் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களையும் அரபு எழுத்தணிமூலம் எப்படியெல்லாம் அலங்கரித்துள்ளார்களோ அதேபோல் எமது வீடுகளையும் நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் அரபு எழுத்தணிமூலம் நாம் அலங்கரிக் முடியும் . ஆனால் நாங்கள் அலங்கரிப்பதில்லை காரணம் இது பற்றி நாம் அறியவும்மில்லை இதில் ஆர்வமும்மில்லை .
இன்று ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு எழுத்தணி கலை உள்ளது அது பெளத்த சமூகமாக இருக்கலாம் அல்லது இந்து சமூகமாக இருக்கலாம் அல்லது வேறு சமூகங்களாக அந்தந்த சமூகங்கள் தங்களது கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்களது கலைகளை கட்டிடக் கலைகளில் மூலம் பாதுகாத்து வருகின்றது . ஆனால் எமது முஸ்லிம் சமூகம் ?? இதில் பெரிதும் பின்னடைவில் உள்ளது. எமது பாரம்பரிய #அரபு_எழுத்தணிக்_கலையை எமது வீடுகளில் பிரையோகிப்பது குறைவாகத்தான் உள்ளது.
எனவே நாங்கள் எமது பாரம்பரிய #அரபு_எழுத்தணிக்_கலையை எமது சமூகத்தில் அறிமுகம் செய்ய வேண்டும்.
அதை ஊக்குவிக்கும் போட்டி நிகழ்ச்சிகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ ஏற்பாடு செய்து ஆர்வப் படுத்த வேண்டும் . இதை இஸ்லாமிய நிறுவனங்கள் அல்லது பிரதேச கலாச்சார நிறுவனங்கள் ,பாடசாலைகள் அல்லது பள்ளிவாசல் நிறுவாகங்கள் சேர்ந்து செய்வது பொருத்தமானது.
எமது பாரம்பரிய கலாச்சார அரபு எழுத்தணிக் கலையை உயிர்ப்பிப்பதற்கு முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ்
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
பணிப்பாளர்
USA கல்வி நிறுவனம்.
வரிப்பத்தான்சேனை