தொடர் :- 8
பத்தாம் நூற்றாண்டு தோற்றுவித்த மற்றொரு முஸ்லிம் மருத்துவ மேதை அஹ்மத் அல்பலதீ என்பவர் . இவரின் முழுப் பெயர் அஹ்மத் இப்னு யஹ்யா அல் பலதீ என்பதாகும் . இவர் எகிப்ததை ஆட்சி செய்த பாதிமியா கலீபாக்களுள் ஒருவரான அஸீஸ் இப்னு தீனில்லாஹ் ( 975 - 996 ) இன் முதல் மந்திரியாக விளங்கிய யாகூப் இப்னு யூசூப் என்பவரின் வாழ்ந்தார்.
அக்கால எகிப்திய மருத்துவர்களுள் தலை சிறந்தவராகக் கருதப்பட்டார். இவர் எழுதிய நூலின் பெயர் "கிதாப் தத்பீருல் ஹபாலா வல் அத்பால்"என்பதாகும் . இன்நூல் கர்ப்பமுற்ற பெண்கள் , சிறு குழந்தைகள் ஆகியோரின் சுகநலம் பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் , அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விபரிக்கின்றது.
இவரை மேற்குலகு மறந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூடாது .
Hafersul haq
Varipathanchenai
No comments:
Post a Comment