Sunday, December 30, 2018

பலஸ்தீனர்களை நாடுகடத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள்

பெரும்பான்மை முஸ்லிம்களாக வாழும் பலஸ்தீன் தேசத்தை அபகரித்து அங்கு யூத குடியேற்றங்களை நிறுவி யூத தேசமாக்கும் நோக்கில் இஸ்ரேலிய அரசாங்கம் பலகட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் அம்முன்னெடுப்பின் முதற்கட்டமாக  இஸ்ரேலியப்படைகளால்  பலஸ்தீனின் பல பாகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும் , அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின்  உடமைகள் அபகரிக்கப்பட்டும் வீடுகள் இடிக்கப்பட்டும் வருகின்றது . 

கடந்த வெள்ளிக்கிழமை அப்துல்லாஹ் அல்-ஹுனானி ஆய்வு மற்றும் ஆவணங்கள் மையம் ( Abdullah al-Hurani Center for Studies and Documentation) முன்வைத்த தகவலின் அடிப்படையில் 2018 ல் மாத்திரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் பலஸ்தீனின மேற்குக்கரைப்பகுதியில் சுமாராக 538 பலஸ்தீன முஸ்லிம்களின் வீடுகளை இடித்தும்  சுமாராக1,300 பல்தீன மக்களை  அப்பிரதேசத்தை விட்டும் இஸ்ரேலிய இப்வாக்கிரமிப்புப்படைகள் வெளியேற்றியுள்ளதாக அப்துல்லாஹ் அல்-ஹுனானி ஆய்வு மற்றும் ஆவணங்கள் மையம் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டுமாதங்களில் ஆக்கிமிக்கப்பட்ட பலஸ்தீன் பகுதியில் 157 பலஸ்தீனர்களுடை வீடுகளை இஸ்ரேலிய ஆக்கிமிப்புப்படை இடித்து தரைமட்டமாகியது. இது கடந்த வருடத்தைவிடவும் (2017 ) ஒப்பிடுகையில் 24% வீதத்தால் அதிகரித்துள்ளது.  2018 ம் ஆண்டில் மாத்திரம் 45% வீதம் இடிபாடுகள்.  சுமாராக 1300 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் பலவந்தமாக  வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களில் 225 பேர் சிறு குழந்தைகளாவர்.  மேலும் 5 பள்ளிவாசல்களையும் இடித்து தரைமட்டமாகியுள்ளது. அதேபோல் 460 பாலஸ்தீன கட்டிடங்களுக்கு எதிராக நிறுத்த கட்டுமான-இடிப்பு உத்தரவுகளை வெளியிட்டன. இது போதாமைக்கு இஸ்ரேல் சிவில் நிர்வாகமானது முடிக்கப்படாத கட்டுமான பணிமுறையில் அனைத்து பாலஸ்தீனிய கட்டிடங்களையும் அகற்ற இராணுவ ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.   அப்பகுதியில் 30 நாட்களில் அல்லது குறைவான பகுதிக்கு இஸ்ரேலிய குடியிருப்புக்களை அமர்த்துவதற்கு வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

மனித உரிமை , சமாதானம் என்று  வாய்கிழிய கத்தும் ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.  சமுக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாத அரபுநாடுகள்கூட பலஸ்தீன் விவகாரத்தில் முதளைக்ககண்ணீர் வடிக்கின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் பலஸ்தீன் தேசம் எம் உம்மத்தின் ஒரு அடையாளம்.  அப்பூமி எம் உம்மத்தின் உரிமை . எம்முரிமையைப் பாதுகாக்க அகிம்சை வழியாகப் போராடுவோம்.

இதை எமது சமுகத்திற்கு எத்திவையுங்கள் அல்லாஹ் அருள்புரிவான்.

கட்டுரை
அஷ்ஷெய்க் A.M.  ஹபீஸுல் ஹக் ( Fathih institute of srilanka )
விரிவுரையாளர் சலபி அரபுக்கல்லூரி.
வரிப்பத்தான்சேனை.  

Saturday, December 29, 2018

மேற்குலகால் மறைக்கப்பட்ட மற்றுமோர் மருத்துவ மேதை அபூ மன்சூர் முவக்கப்


தொடர் = 09.

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றுமோர் மருத்துவ மேதை அபூ மன்சூர் முவக்கப். இவருடைய முழுப் பெயர் அபூ மன்சூர் முவக்கப் இப்னு அலி அல் ஹரவி என்பதாகும். இவர் உஸ்மானிய இளவரசர் முதலாம் மன்சூர் இப்னு நூஹ் ( 961-976) என்பவரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவராவார்.  இவர் பாரசீக முஸ்லிமாவார். இவர் மருத்துவத் துறையைவிடவும் மருந்தியல் விஞ்ஞானத் ( pharmacology) துறையிலேயே அதிகம் கவனம் செலுத்தினார்.  முதன் முதலில் பாரசீக மொழியில் மருந்தியல் விஞ்ஞான நூலை எழுதிய பெருமை இவரைச்சாரும்.

இவர் எழுதிய கிதாபுல் அப்னியா அல் ஹகாயிக் அல் அத்வியா ( மருந்துகளுக்குரிய உண்மை இயல்புகளின் அடிப்படைகள் ) என்ற மருந்தியல் நூல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமைவாய்ந்த நூலாகும். இது 968 ம் ஆண்டிற்கும் 977 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவையாகும்.  இவர் இந்நூலை எழுதுவதற்கு தகவல்களைத்தேடி பாரசீகம் , இந்தியா போன்ற இரு நாடுகளுக்குச் நீண்ட பயணம் சென்றுள்ளதாக சில தகவல்கள் பதியப்பட்டுள்ளது.

கிரேக்க , சிரியா , அரேபிய , இந்திய , மூலகங்களை ஒன்றினைத்து எழுதப்பட்ட இந்நூல் சுமார் 585 மருந்துகள் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது.  இவற்றுல் 466 மருந்துகள் தாவரத்தில் இருந்தும் 75 மருந்துகள் கனிப் பொருட்களிலிருந்தும் 44 மருந்துகள் மிருகங்களில் இருந்தும் பெறப்பட்டவையாகும்.

மேலும் சோடியம் காபனேற்று , பொட்டாசியம் காபனேற்று ஆகிய இரு உப்புக்களையும் வேறுபடுத்தி தமது நூலில் எழுதியுள்ளார். ஆசனிய வொட்சைட்டு , குப்ரிக் ஒட்சைட்டு , சிலிசிக்கமியச் சேர்வைகள் போன்றவற்றின் நச்சு விளைவுகள் பற்றியும் நீறாத சுண்ணாம்பின் மயிரகற்றும் ( Depitatory) தன்மை பற்றியும் பரிசுச்  சாந்தின் ( plaster of psris) அறுவை  வைத்திய சிகிச்சைகளில் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் அதில் விளக்கியுள்ளார்.

இப்படி  பத்தாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில் சிறப்புற்று விளங்கிய இவரை மேற்குலகம் திட்டமிட்டு மறைத்து வருகின்றது.  மேற்குலகால் மறைக்கப்பட்ட இவரை எமது சமுகத்திற்கு அடையாளப்படுத்துவது எம்ஆனைவருக்கும் கடமையான ஒன்றாகும். அதற்காகவே இவருடைய அறிவியல் பங்களிப்பை தொகுத்துள்ளேன். முடியுமானால் இவருடைய அறிவியல் பங்களிப்பை எமது சமுகத்திற்கு எத்திவையுங்கள்.  இறைவன் அருள்புரிவான்.

கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) வினிவுரையாளர் சலபி அரபுக்கல்லூரி. 

Monday, December 3, 2018

Information of Varipathanchenai

Varipathanchenai
=================================

01) Varipathanchenai 01

* 1540 சனத்தொகை.
* 419  குடும்பம்

02) Varipathanchenai 02

* 2082  சனத்தொகை
* 515 குடும்பம் .

03 ) Varipathanchenai 03

* 1910  சனத்தொகை
*505  குடும்பம்.
* பெளத்தர்கள் 56
__________________________________________

👉1990  ஆண்டு யுத்தத்தின் விளைவு .

* Varipathanchenai 01
  மரணம் = 01
  விதவை =01

* Varipathanchenai 02
  மரணம் = 02
  விதவை = 02

* Varipathanchenai 03

கானனாமல் போநோர் = 03
மரணம் = 02
விதவை 02
__________________________________________

Varipathanchenai இல் இயங்கும் சமுக நிறுவனங்கள். 

👉கல்வி சார்ந்த
* EDVA நிறுவனம்.
* SESDO நிறுவனம்

👉விளையட்டு  சார்ந்த

Vc மிலான் விளையாட்டுக் களகம்.
Slama  இளைஞர் கழகம். 
EDVA  இளைஞர் களகம்.

Friday, November 2, 2018

வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் சபை.
=================================

பிரதம நம்பிக்கையாளர் ( தலைவர் )

01) அஷ்ஷெய்க் S M. ஹாமித் லெவ்வை
( மதனி, அதிபர் சலபி அரபுக்கல்லூரி )

செயலாளர்
02) A.R.M. அலியார் ( முதலாளி)

பொருளாளர்
03)  S.M. பிர்தெளஸ் ( முதலாளி)

உபதலைவர்
04) அல்ஹாஜ்  A. ஆதம் லெவ்வை
( போடியார் )

உபசெயலாளர்

05) அல் ஹாஜ் K.L. கலீல்
( முஸ்லிம் விவாகப்பதிவாளர் )

பெரிய ஜும்ஆ பள்ளிவசல் நம்பிகையாளர் சபை உறுப்பினர்கள்.

06) A.M.M. பரீஸ்( CEB)
07) A.L. சாதிக் ( மெளலவி)
08) S. சாப்தீன் ( SLPA )
09) A.M. மீராஸாஹிப் ( ஆமி சாஜன் )
10) அல் ஹாஜ் A.B.  பாறூக் ( முதலாளி)
11) UL. முனாஸ் ( முதலாளி)
12) M.I. றபீக் ( போடியார் )

அன்வர் ஜும்ஆ பள்ளிவாசல்.

13) U.K. நசீர் ( போடியார் )
14) P.T. அலியார் ( முதலாளி )
15) A.S.முஹம்மது ( முதலாளி)
16) M.M. ஹனீபா ( முதலாளி )

நூர் பள்ளிவாசல்

17) S.A. றஸாக் ( SLWB)

அஸ்ஸபா பள்ளிவாசல்

18)  அல்ஹாஜ் A.M. றம்ழான் ( முதலாளி) 19) A.L. சூர் ( போடியார் )

ஸஹாபா பள்ளிவாசல்.

20) ஜனாப்  S.L. மஹ்றூப் .

மேற்படி இவர்கள் வரிப்பத்தான்சேனை பள்ளிவாசல்களுடைய நம்பிகையாளர்களாக செயற்படுவதற்கான நியமனத்தை  முஸ்லிம் கலாச்சார பண்பாட்டலுவலகள் தினைக்களத்தின் பணிப்பளரினால் கடந்த 2018.11.01 திகதி அனுப்பப்பட்டுள்ளது. 
( அல் ஹம்துலில்லாஹ் )

தகவல்
வரிப்பத்தான்சேனை நம்பிகையாளர்சபை

Varipathanchenai news. 

Tuesday, May 15, 2018

ரமழானை அமல்களால் அலங்கரிப்போம்

இஸ்லாம் ஒவ்வொரு இபாதத்களும் ஒவ்வொரு பெறுமானங்களைக் கொடுத்து ள்ளது . அது தொழுகையாக இருக்கலம் ஸகாதாக இருக்கலாம் ,ஹஜ்ஜாக இருக்கலாம் அல்லது நோன்பாகக்கூட இருக்கலாம்  இவை ஒவ்வொருக்கும் முக்கியமான பெறுமானங்களை வளங்கியுள்ளது.  இப்படியான பெறுமானங்களை எமது சமுகம் உணர்ந்து  அமல் செய்வதென்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

எமது சமுகத்தில்  ஒரு பழமொழியுள்ளது. சொல்லுவார்கள்  "காற்றுள்ளபோது தூற்றிக்கொள் " என்பார்கள்.   இது எமக்குப் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.  நோன்புமாதத்தைப் பொறுத்தமட்டில் இது எமது பாவங்களை சுட்டெரிக்கின்ற மாதம். இதை எமது சமுகம் சரியாகப் புரிந்து திட்டமிட்டுப் பயன்படுத்துவதில்லை. இம்மாதம் எம்மைவிட்டுப் பிரிந்தபிறகுதான் நாம் யோசிக்கின்றோம் ஐயோ ! நான் ரமழான் மாதத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே ! எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு நான் உய்ருடன் இருப்பேனா என்றுகூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரிகின்றோம்.  போன காலம் போய்விட்டது  இப்போது எம்மை ரமழான் மாதம் வந்தடைந்துள்ளது. எனவே ரமழானை சிறப்பாகப் பயன்படுத்துவோம்.

இவ்வருட ரமழானை பயன்மிக்க ரமழானாகப் மாற்றிட சில வழிகாட்டல்கள்.

1) நோன்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளல்.

அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கியதன் நோக்கம் வெறுமனே விழித்து பசித்து தாகித்து இருப்பதல்ல நோக்கம் மாறாக இதனூடாக தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்துவதற்கு விதியாக்கியுள்ளது.

2) ரமழானின் சிறப்பை அறிந்து செயற்படல்.

" ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்பட்டு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. மேலும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான் நபிஸல் அவர்களால் கூறினார்கள். ( புஹாரி )

3)  ரமழான் மாதத்தில் செய்யும் அமல்களை அறிந்து செயற்படல்.

யார் ரமழானுடைய மாதத்தில் ஈமானுடமும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ( புஹாரி)

4)  லைலதுல் கத்ரின் சிறப்பை அறிந்து கொள்ளல்.

லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. ( அல் கத்ர் 3 ) இவ்விரவு அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு .

5) கியாமுல் லைல் வணக்கத்தின்பால் கவனம் செலுத்தல்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் யார் ஈமானுடமும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என கூறினார்கள்.  ( புஹாரி )

நபிஸல் அவர்கள் ரமழான் காலத்திலும் ரமழான் அல்லாத காலத்திலும் 11  ரகாயத்களுக்கு அதிகமாக தொழவில்லை. அழகாக நீட்டித் தொழுதார்கள். ( புஹாரி 1147 முஸ்லிம் 738 )

உமர் ( ரழி) அவர்கள் உபய் பின் கவ்ப் ரழி தமீம் அத்தாரி ரழி ஆகிய இரு ஸஹாபிகளை மக்களுக்கு தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். (  அல் முவத்தா 519 )

கியாமுல்  லைல் தொழுகை 11 அல்லது அதற்கு மேல்  என்றும் கருத்து வேறுபாடு உள்ளது.

Sunday, January 28, 2018

கிழக்கில் முஸ்லிம்களின் ஆதரவை இழந்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் 

===============================

1981 இல் M.H.M. அஷ்ரபால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் கோட்டையாக  இருந்தது . அதேபோல் தேசியரீதியாகவும் முழு முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றிருந்தது . காரணம் தலைவர் அஷ்ரப் அவர்கின் சமூகப்பற்று .  இதன்  காரணமாக முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகெதிராக குரல் கொடுத்தார் . முஸ்லிம்களின் வேலை இன்மைப் பிரச்சினைகளுக்கு அரசிடமிருந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார் . கிழக்கு முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 1995 .10.23  இல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார் . இதன் காரணமாக முஸ்லிம்களிடத்திலும் . அதிலும் குறிப்பாக கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

ஆனால் இன்று தலைவர் அஷ்ரப்பின் மரணத்தின் பிற்பாடு பலவீனமற்றுக் காணப்படுகிறது . காரணம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடத்தில் ஏற்பட்ட தலைமைத்துவ ஆசைகள் . இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பலமிழந்தும் ஆதரவையும் இழந்து வந்தது . இன்னும் ஒரு கவலை என்னவென்றால் எதிர்காலத்தில் கிழக்கில் இருந்தது முஸ்லிம் காங்கிரஸ் அடியோடு அழிந்து போகலாம் . காரணம் எமது தலைவர் ரவூப் ஹகீமின் தலைமைதுவம் . இதைச் சொன்னால் இவருடைய தலைமைத்துவத்தில்  என்ன குறையுள்ளது ? என்பீர்கள் .

தலைவர் அஷ்ரப் அவர்களினால் சமூக பயன் பெற்றது போன்று ஹகீமினால் எமது சமூகம் பயன்பெற வில்லை . இவர் தனது வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் கிழக்கு தனது முகத்தைக் காட்ட வருவார் . இதுதான் எதார்த்தம் . அதேபோல் இவர் மக்களுக்காக வாழ விலை தன் வயிற்றை நிறப்புவதற்காக வாழ்கின்றார் . ( கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இப்போது இருக்கும் அரசாங்கத்திற்கு சார்பா க 16 கோடி ரூபா வாங்கியுள்ளதாக சில கருத்துக்கள் வெளியாகியுள்ளது  ) இது அதிகமானோருக்குத் தெரியாது . அன்மையிலும் பெளத்த இனவாதிகள் முஸ்லிம்களைத் தாக்கிய போது இவர் அவர்களுக்கு எதிராக  குரல் கொடுக்க வில்லை . எனவே முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் மாறவேண்டும் . இதை மாற்றுவது எமது முஸ்லிம் சமூகத்தின் பெறுப்பு இதைப்பற்றி இறைவனிடத்தில் எமக்கு நிச்சயம் கேள்வி கணக்கு உண்டு . சிந்திப்போம் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ்)