தொடர் = 09.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றுமோர் மருத்துவ மேதை அபூ மன்சூர் முவக்கப். இவருடைய முழுப் பெயர் அபூ மன்சூர் முவக்கப் இப்னு அலி அல் ஹரவி என்பதாகும். இவர் உஸ்மானிய இளவரசர் முதலாம் மன்சூர் இப்னு நூஹ் ( 961-976) என்பவரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாரசீக முஸ்லிமாவார். இவர் மருத்துவத் துறையைவிடவும் மருந்தியல் விஞ்ஞானத் ( pharmacology) துறையிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். முதன் முதலில் பாரசீக மொழியில் மருந்தியல் விஞ்ஞான நூலை எழுதிய பெருமை இவரைச்சாரும்.
இவர் எழுதிய கிதாபுல் அப்னியா அல் ஹகாயிக் அல் அத்வியா ( மருந்துகளுக்குரிய உண்மை இயல்புகளின் அடிப்படைகள் ) என்ற மருந்தியல் நூல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமைவாய்ந்த நூலாகும். இது 968 ம் ஆண்டிற்கும் 977 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவையாகும். இவர் இந்நூலை எழுதுவதற்கு தகவல்களைத்தேடி பாரசீகம் , இந்தியா போன்ற இரு நாடுகளுக்குச் நீண்ட பயணம் சென்றுள்ளதாக சில தகவல்கள் பதியப்பட்டுள்ளது.
கிரேக்க , சிரியா , அரேபிய , இந்திய , மூலகங்களை ஒன்றினைத்து எழுதப்பட்ட இந்நூல் சுமார் 585 மருந்துகள் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. இவற்றுல் 466 மருந்துகள் தாவரத்தில் இருந்தும் 75 மருந்துகள் கனிப் பொருட்களிலிருந்தும் 44 மருந்துகள் மிருகங்களில் இருந்தும் பெறப்பட்டவையாகும்.
மேலும் சோடியம் காபனேற்று , பொட்டாசியம் காபனேற்று ஆகிய இரு உப்புக்களையும் வேறுபடுத்தி தமது நூலில் எழுதியுள்ளார். ஆசனிய வொட்சைட்டு , குப்ரிக் ஒட்சைட்டு , சிலிசிக்கமியச் சேர்வைகள் போன்றவற்றின் நச்சு விளைவுகள் பற்றியும் நீறாத சுண்ணாம்பின் மயிரகற்றும் ( Depitatory) தன்மை பற்றியும் பரிசுச் சாந்தின் ( plaster of psris) அறுவை வைத்திய சிகிச்சைகளில் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் அதில் விளக்கியுள்ளார்.
இப்படி பத்தாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில் சிறப்புற்று விளங்கிய இவரை மேற்குலகம் திட்டமிட்டு மறைத்து வருகின்றது. மேற்குலகால் மறைக்கப்பட்ட இவரை எமது சமுகத்திற்கு அடையாளப்படுத்துவது எம்ஆனைவருக்கும் கடமையான ஒன்றாகும். அதற்காகவே இவருடைய அறிவியல் பங்களிப்பை தொகுத்துள்ளேன். முடியுமானால் இவருடைய அறிவியல் பங்களிப்பை எமது சமுகத்திற்கு எத்திவையுங்கள். இறைவன் அருள்புரிவான்.
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) வினிவுரையாளர் சலபி அரபுக்கல்லூரி.
No comments:
Post a Comment