Thursday, October 10, 2019

வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தை தரம் உயர்த்த உதவுங்கள்
=================================

வரிப்பத்தான்சேனையில் உப அஞ்சல் அலுவலகம்  அமையப்பெற்றது எமது ஊருக்குக் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்.   ஆனால் இப் பொக்கிஷம் எமது  மணில் மறைந்து கொண்டு வருகின்றது.

எமது  உப அஞ்சல் அலுவலகம் 1958 .09.02.  திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவ் அலுவலகத்தின் முதலாவது தபால் உத்தியோகத்தராக ( PM) H உமர்லெப்பை கடமையாற்றினார். இவர் சுமார் 35 வருடங்கள் கடமை புரிந்தார். இதன் பின்னர் அப்துல் வாஹித் அவர்கள் சுமார் இரண்டு வருடங்கள் கடமை புரிந்தார். இதன் பின்னர் T  அபுல் காசிம் அவர்கள் 15 வருடங்கள் கடமைபுரிந்தார். அன்றில் இருந்து இனுறுவரைக்கும் A.C.M. தெளபீக் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.

எமது வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தில்  உள்ளடங்கும் பகுதிகளாக வரிப்பத்தான்சேனை முதலாம், இரண்டாம் , மூன்றாம் பிரிவுகள் , இறக்காமம் 5ம் பிரிவான நியூகுன, குடுவில், நல்லதண்ணிமலை, மாணிக்கமடுவ. கல்மடு போன்ற கிறாமங்கள் உள்ளடக்கப்படுகின்றது.

*  இன்று இதில்  சிரேஷ்ட பிரஜைகளுக்கான   கொடுப்பனவாக சுமார் 96 பேர்   எமது ஊரைச்சேர்ந்தவர்கள் பயனடைகின்றார்கள்.  ( 70  வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கான கொடுப்பனவு )

*   பொதுசன உதவி மாதாந்த கொடுப்பனவாக ( பிச்ச சம்பளம்)  258 பேர் எமது ஊரைச்  சேர்ந்வர்கள் பயனடைகின்றார்கள்.

* புற்று நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளை சுமார் 05  பேர்  எமது ஊரைச் சேர்ந்தவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.

* கிட்னி நோயாளிகளுக்கான கடுப்பனவை ஒருவர் பெற்றுக் கொள்கின்றார்.

இப்படி எமது ஊருக்கு சேவை செய்யும் உப அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய  நிலை படு மோசமாகவுள்ளது . வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது. வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தில்  வந்த இந்தவருடத்துக்கான வரவுசெலவுகள் பின்வருமாறு .

1) ஜனவரி
வரவு 15395.16 
செலவு 39165.8
லொஸ்ட்  23769.92/=

2) பெப்ரவரி
வரவு     15100.70
செலவு  38838.44
லொஸ்ட்  23737.74

3) மார்ச்
வரவு    
செலவு 
லொஸ்ட்

No comments:

Post a Comment