கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி இலங்கையின் மூத்த இஸ்லாமி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர். பாரம்பரிய சூபித்துவ சிந்தனையில் துறைசார்ந்து இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்.
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியை நான் நேரில் கண்டதில்லை. அவருடை விரிவுரையிலும் நான் இருந்ததில்லை. எனது குடும்பத்திற்கும், எனது ஊரிற்கும் ஜாமிஆ நளீமியா தொடர்பு அதிகம் உள்ளது. மறைந்த எனது சகோதரர் #அஷ்ஷெய்க்_லாபிர் ( நளீமியின் ) சிந்தனைத்தாக்கம் நளீமிக்கள் பற்றியும், அதன் விரிவுரையாளர்கள் பற்றியும் , #நளீம் ஹாஜியார் பற்றியும், கலாநிதி #சுக்ரி பற்றியும் நல்ல எண்ணத்தை எனது குடும்பத்தில் ஏற்படுத்தியது.
இந்த சிந்தனைத் தாக்கம் என்னையும் தாக்கியது. கலாநிதி சுகரி பற்றிய தேடலையும் அவரது கட்டுரைகள் மற்றும் அவரது புத்தகங்களை வாசிக்கும் வேற்கையும் எனக்குள்அதிகரித்தது. ஜாமியா நளீமியாவில் செல்ல வேண்டும் என்ற ஒரு இலக்கும் தோன்றியது பின்னர் தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் அது தடைப்பட்டது.
கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரியின் சிந்தனைப் பாரம்பரியமும். அவரது வரலாற்று அணுகுமுறைம் உண்மையில் விசித்திரமானது. எனது பாதிஹ் கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளரும், இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய நாகரீக பாடத்தின் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் பாரி ( நளீமி) அவர்கள் எமக்கு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று என்ற பாடத்தை நடத்தினார். அப்பாடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது இலங்கையில் வரலாற்றுத் துறையில் பிரசித்தி பெற்ற முஸ்லிம்கள் யாரும் இருக்கின்றார்களா ? என்று கேட்கப்பட்டது அவர் சிரித்திவிட்டுச் சொன்னார் தற்போதைக்கு #கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியைத் தவிர யாரும் இல்லை என்று ஏக்கத்துடன் சொன்னார்.
நல்லதோர் சிந்தனையாளர் சகோதரர் நண்பர் Lafees shaheed உடைய ஒரு பதிவில் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிறப்புத் துறை சூபித்துவம். சூபித்துவம் குறித்து அவர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகத்தான் எழுதியுள்ளார்.
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி சூபித்துவத்தின் தத்துவம் மற்றும் இறையியல் பற்றி பேசிய இமாம் கஸ்ஸாலி, முஹ்யித்தீன் இப்னு அரபி, அப்துல் கரீம் ஜீலி போன்றவர்களை நன்கு கற்றவர். ஆன்மீக பின்புலம் இல்லாமல் சூபித்துவத்தை புரிந்துகொள்வது மிகவும் கடிணம், தீராத முயற்சியால் சூபிதத்துவத்தை புரிந்து கொண்ட இவருடைய சிந்தனையை நவீன இஸ்லாமிய சிந்தனை சமுகம் வெறுமென ஆன்மீகப் பயிற்றுவிப்பு என அணுகியது. இவருடைய இந்த விருப்புரிமை கொடையை ஜாமிஆ நளீமியாகூட புரிந்துகொள்ளவில்லை என்பது மகத்தான மனவேதனை. என்கின்றார்.
மேற்குறிப்பிட்ட விடையங்கள் முற்றிலும் எதார்தமானவை. கலாநிதி எம்.ஏ.எம். சுக்கிரியின் அறிவியல் பங்களிப்பை ஒருபோது எமக்கு அளவிடமுடியாது.
இவருடைய இந்த அறிவியல் இடத்தை நிறப்புவதற்கு இலங்கை முஸ்லிம் என்றவகையில் எமக்கு ஒருதாசப்தத்கால அளவைவிடவும் இடைவெளி அதிகரிக்கலாம்!
அல்லாஹ் அன்னவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் என்ற உயர்ந்த சுவர்கத்தை வழங்குவானாக!
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக்
( பாதிஹி)
No comments:
Post a Comment