Friday, September 23, 2022

மேற்குலகால் மறைக்கப்பட்ட மற்றுமொரு மருத்துவ மேதை இப்னு ஜுல் ஜுல்

தொடர் =12

கட்டுரை 
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )

10ம் நூற்றாண்டில் ஸ்பெயினை தோற்றுவித்த முஸ்லிம் மருத்துவர்களுல் இப்னு ஹஸ்ஸான் இப்னு ஜுல் ஜுல் என்பவரும் குறிப்பிடத்தக்க ஒருவர். 

இஸ்பெயினை ஆட்சிசெய்த உமையாக் கலீபா இரண்டாம் ஹிஷாமின் ( 996-1009) அரசவை மருத்துவராக விளங்கிய இவரின் முழுப்பெயர் அபூதாவூத் சுலைமான் இப்னு ஹஸ்ஸான் இப்னு ஜுல் ஜுல் என்பதாகும். 

ஸ்பெயின் குருத்துபா நகரில் வாழ்ந்த இவர் 982 இல் கிரேக்க மருத்துவ மேதையான  ''தயஸ்கோரைதஸ்'' என்பவரின் நூல் ஒன்றுக்கு விளக்கவுரையும் பின்னர் அனுபந்தமும் எழுதினார். இவர் எழுதிய அனுபந்தத்தில் 
தயஸ்கோரைதஸ் குறிப்பிடாத மருந்துக்களின் பட்டியல் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். 

இவர் எழுதிய மற்றுமொரு நூலாக ''தாரீகுல் அதிப்பா வல் பலாஸிபா
''(மருத்துவர்கள்,தத்துவஞானிகள்,ஆகியோரின் வாழ்கை வரலாறு) என்பதாகும். இந்த நூலில் ஸ்பெயினில் அவருடைய காலம்வரை  வாழ்ந்த முஸ்லிம் மருத்துவ மேதைகள் தத்துவஞானிகள் ஆகியோரின் வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. 

இந்த நூலை பிற்காலத்தில் அறிவியல் வரலாறு எழுதி புகழ்பெற்ற அபீ உஸைபிஆ என்பவர் பெரிதும் பயன்படுத்தியுள்ளதாக வரலாறுகள் கூறியுள்ளது.

No comments:

Post a Comment