Saturday, October 1, 2022

மேற்குலகால் மறைக்கப்பட்ட மற்றுமொரு முஸ்லிம் மருத்துவ மேதை அஹமத் இப்னு ஜஸ்ஸார்.

10நூற்றாண்டில் வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அஹமத்  இப்னு ஜஸ்ஸார் என்பவர் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையாவர். 

சிறுபிள்ளை  மற்றும் முதியோர் மருத்துவராக விளங்கிய இவர் கி.பி 285 இல் துனிசியாவில்  கைரூவான் நகரில்  பிறந்தார். இவரின் முழுப்பெயர் அபூஜஃபர் அஹமத் இப்னு இப்ராஹிம் இப்னு அபீ காலித் இப்னு அல் ஜஸ்ஸார் என்பதாகும். அல் ஸார் , அல்  கஸரா என்பன இவருக்கு ஐரோப்பியர் வழங்கிய இலத்தீன் பெயர்களாகும். 

ஐரோப்பியருக்கு ஐஸாக் ஜுடாயியஸ் என்ற பெயரில் அறிமுகமான யூத மருத்துவ மேதை இஸ்ஹாக் அல் இஸ்ராயீல் என்பவரின் பிரதான மாணவர்களுல் ஒருவராக (865-955 ) காலப் பகுதியில் விளங்கிய இவர் மருத்துவம் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார். 

தூனிசியாவில் கைரவானை ஆட்சி செய்த பாதிமியர்களின் ஆட்சிக்காலங்களகல் அரசவையில் அரச வைத்தியராக கடமையாற்றிய இவர் ''ஸாதுல் முசாபிர் '' (பிரயாணிகளின் காப்பு) என்ற நூலையும் இலத்தீன், கிரேக்கம், ஹிப்ரு போன்ற மொழிகளில் மொழிபெயர்கப்பட்ட இந்நூல் உடலின் உட்புறத்தே தோன்றும் நோய்களைப்பற்றி மிகச்சரியான விபரங்களோடு தருவதோடு அம்மை ,சின்னமுத்து ஆகிய நோய்களைப்பற்றி  விளக்கம் தருகிறது.  

மேலும் இவர் பீனிசம் ( Coryza) ,கொள்ளை நோய் (Plaguc) போன்ற நோய்களைப்பற்றியும் தனியான நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி 979 மரணமடைந்தார். 

As sheikh Hafeesul (Fathih institute for Higher Education) 
Varipathanchenai 

 

No comments:

Post a Comment