பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம்:
Hafeesul Haq
Saturday, August 5, 2023
Wednesday, July 26, 2023
உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் மற்றும் எழுத்தாளர் கிரிஸ்டா ரோட்ரிக்ஸ் ஒரு இறுதித் தருணம்.( world renowned designer and author crisda Rodriguez)
====================================
1. என்னிடம் உலகில் விலை உயர்ந்த கார்கள் ஏறாளம் உள்ளது இருந்தும் நான் இருசக்கர நாட்காலியில் தான் நகர்கிறேன்.
2. எனது வீட்டில் அனைத்தும் பெறுமதியான விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள் உள்ளது இப்போது நான் இருப்பது தனியார் மருத்துவமனையின் சாதாரண ஆடையை அணிந்து இருக்கின்றேன்.
Friday, July 14, 2023
சூறதுல் கஃபின் சிறப்புக்கள்
قال البخاري في صحيحه: باب فضل سورة الكهف، ثم ذكر بسنده عن البراء بن عازب قال: كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حصان مربوط بشطنين فتغشته سحابة فجعلت تدنو وتدنو وجعل فرسه ينفر، فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له، فقال: تلك السكينة تنزلت بالقرآن. متفق عليه.
وفي صحيح مسلم مرفوعاً: من حفظ عشر آيات من أول سورة الكهف عصم من الدجال
وروى الحاكم في المستدرك مرفوعا إن من قرأ سورة الكهف يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. وصححه الألباني..
Monday, October 17, 2022
நவீன மருத்துவத்தின் தந்தை அலி இப்னு சீனா. (Father of the modern medicine )
தொடர் -15
நவீன மருத்துவத்தின் தந்தை அலி இப்னு சீனா. (Father of the modern medicine )
-----------------------------------------------------------------------
மத்திய காலத்தில் மருத்துவக் கலை வளர்ச்சி உச்சத்தை தொடுவதற்கு காரணமாக அமைந்தவர் அலி இப்னு சீனா . அவிசென்னா என்று ஐரோப்பியரால் அழைக்கப்படும் இவர் கி.பி.980 ம் ஆண்டு மத்திய ஆசியாவில் உள்ள பல்கு என்ற மாகாணத்தில் அப்ஸானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தற்போது இம்மாகாணம் சோவியத் ரஷ்யாவில் உள்ளது. அபூ அலீ அல் சீீனா என்பதே இவரின் முழுப்பெயர்.
இளமையிலேயே அறிவுத்திறன் மிக்கவராக விளங்கிய இவர் தனது 10வது வயதில் திருக் குருஆன் முழுவதையும் மனனம் செய்தார். இஸ்லாமிய சட்டக்கலையையும் அரபு இலக்கியத்தையும், இந்திய தூய கணிதத்தையும் இளமையிலே கற்று தேர்ந்தார். அக்காலத்தில் சிறந்த தத்துவ ஞானிகளுல் ஒருவராக விளங்கிய அபூ அப்துல்லாஹ் அல் நதீலி என்பவரிடம் கிரேக்க மெய்யியல்
அளவையியல் , வானியல் போன்றவற்றை கற்றார். இஸ்மாயீல் ஸாகித் என்பவரிடம் ஆத்மீக ஞானத்தையும் இப்னு அல் கும்ர் ஈஸா இப்னு யஹ்பா ஆகியோரிடம் மருத்துவக் கலையையும் கற்றார்.
தனது 17வது வயதில் திறன்வாய்ந்த வைத்தியராக நாடெங்கும் புகழ் பெற்றிருந்தார். ஒரு சமயம் புகாராவை ஆட்சி செய்த சாமானிய அரசர் இரண்டாம் நூஹ் இப்னு மன்ஸூர் (976-997) திடீரென நோயுற்றார். அரச மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து எவ்வளவோ முயன்றும் மன்னரை குணப்படுத்த முடியாமல் போனபோது. இறுதியில் இளவயதாக இருந்த இப்னு ஸீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை அவதானித்து தகுந்த மருந்தை கொடுத்தார். எல்லோரும் ஆச்சரிப்படும் வகையில் குணப்படுத்தினார். இதன் காரணமாக அவரின் புகழ் அரசவையிலும் அயல்நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. மன்னரின் சொந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு விசேட அனுமதியும் அவருக்கு வழங்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அரிய பல கையெழுத்து பிரதிகளைக் கொண்டிருந்த இந்நூலகம் துருக்கிய வீரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இவருடைய தந்தை அப்துல்லாஹ் புஹாராவில் சாமானிய அரசர்களின் அரசாங்கத்திலேயே வரி சேகரிப்பாளராக கடமையாற்றினார். இவர் மரணமடைந்த பின்னர் இப்னு சீனா மாமூனிய மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த கவாரிஸ்ம் எனும் பிரதேசத்திலுள்ள கோர்கான்ஜ் நகருக்குச் சென்றார். அங்கு அல் பிரூனி, அபூ ஸஹ்ல் மஸீஹி போன்ற அறிஞ்ஞர்களின் தொடர்புகள் அவருக்கு கிடைத்தது. இதே சமயத்தில் மஹ்மூத் கஸ்னவி (998-1030) களில் தமது வெற்றிகளை நாடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், போன்றவர்கள்மீது அக்கறை கொண்டிருந்த மஹ்மூத் கஸ்னவீ கோர் கான்ஜ் நகரத்தில் வாழ்ந்த அல் பிரூனி அபுல் கைர், அபு ஸஹ்ல் மஸீஹி, இப்னு சீனா, அபூ நஸ்ர் அர்ராக் போன்ற அறிஞ்ஞர்களை கேள்வியுற்று அவர்களை அரசவைக்கு அனுப்புமாறு கவாரிஸப் பிரதேச ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதிருந்தார். அங்கு போக விரும்பாத இப்னு சீனா மற்று அபூ ஸஹ்ல் மஸீஹி ஆகிய இருவரும் கோர்க்கான்ஜ் நகரைவிட்டு குர்கான் எனும் நகருக்கு சென்றார்கள். அங்கு காபூஸ் இப்னு வஸ்ம்கிர் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இங்கு சில காலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் நூல்கள் எழுதுவதிலும் மாணவர்களுக்கு மருத்துவம் கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
குர்ஆன் நகரில் இவர் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் காபூசின் மருமகன் என்னவென்று தெரியாத புதுவித நோயினால் பாதிப்புற்றிருந்தார் அரசவை மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவருடைய நோயை அவர்களால் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் இப்னு சீனாவை அழைத்தனர். நோயாளியை நன்கு பரிசோதித்த அவர் நோயாளியின் நாடித்துடிப்பை அவதானித்துக் கொண்டே குர்கான் நகரத் தெருக்களின் பெயர்களைக் கூறுமாறு அங்கிருந்த ஒருவரைக் கேட்டுக் கொண்டார்.
ஒரு குறிப்பிட்ட தெருவின் பெயர் கூறப்பட்ட போது அத்தெருவைச் சேர்ந்த வீடுகளின் பெயர்களையும் ஒரு குறிப்பிட்ட வீட்டின் விபரம் சொல்லப்பட்டபோது அவ்வீட்டில் உள்ளோர் பெயர்களையும் சொல்லுமாறு கேட்டார். ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயர் சொல்லப்பட்டபோது உண்டான நோயாளியின் உணர்சி பிரதிபலிப்பையும் நாடி துடிப்பில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவதானித்த இப்னு சீனா அப்பெண்ணை உடனே அழைத்துவரும்படி கூறினார்.
அப்பெண் அரண்மனை வந்ததும் காதலே நோய்க்கு காரணம் என்றும் இவர்கள் இருவரையும் இணைத்து வைப்பதே இதற்கான சிகிச்சை என்றும் கூறினார். அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்ததன் மூலம் அந்த இளைஞ்சரின் பிணியைக் குணப்படுத்தினார்.
குர்கான் அமீர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பிற்பாடு இப்னு சீனா அந்நகரை விட்டு ராய் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கே இளவரசி ஸையிதா ஸீரின் என்பவரின் ஆலோசகராக பதவியேற்றார். சுமார் மூன்று வருடங்கள் அங்கே பணியாற்றிய பின்னர் ஹம்தான் நகருக்குச் சென்று அங்கு இடம்பெற்ற அரசியற் புனட்சியை அடுத்து இஸ்பஹான் நகருக்குச் சென்றார். அங்கே இஸ்பஹான் இளவரசர் அலாஉத் தெளலா இவரைப் ஆதரித்ததோடு இவரை முதலமைச்சராகவும் ஆக்கி கெளரவித்தார்.இங்கே இவருக்கு இரண்டாம் அரிஸ்டோடில், இரண்டாம் கல்லன் ,ஹுஜ் ஜதுல் ஹக் ( உண்மையை நிருபிப்போர்) ஷெய்குல் ரயீஸ் ( பெரும் தலைவர்) முதலான பட்டங்களை அறிஞர்கள் சூட்டி பெருமைப் படுத்தினர்.
இப்னு சீனா தமது 21ம் வயதில் நூல்களை எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 980 நூல்கள் என்று புரோக்கல்மேன் (Brockel mann) என்பவர் குறிப்பிடுகின்றார்.இவற்றுள் 68 நூல்கள் சமயம் ,பெளதீக வதீதம் ( Mstaphysics) பற்றியவை. 8நூல்கள் வானியல், மெய்யியல், பெளதீகவியல் பற்றியவை. நான்கு கவிதை நூல்கள் 17நூல்கள் மருத்துவம் பற்றியவை. இவர் தமது நூல்களை அரபு மொழியில் எழுதினார்.இரண்டு நூல்கள் மட்டும்தான் தாய் மொழியான பாரசீக மொழியில் எழுதியுள்ளார். இவர் இஸ்பஹானில் வசித்தபோது எழுதிய 'அல் மஜ்முஆ ' எனும் பல்களைக் களஞ்சியம் அவரின் அறிவின் ஆழத்தை காட்டத்தக்கதாய் அமைந்துள்ளது.
இவர் எழுதிய மருத்துவ நூல்களுள் கானூன் பித் திப் (மருத்துவ விதிகள்) எனும் நூல் ஐரோப்பியரிடம் மிகுந்த புகழ்பெற்ற ஒரு நூலாகும். இந்நூலை இவர் கஸ்பியன் கடலுக்கு அருகில் உள்ள ஜோர் ஜியா எனும் நகரில் வாழ்ந்த போது எழுதினார். மருத்துவ விதிகளையும் சுல்லன் ,அர் ராசி ஆகியோரின் மருத்துவக் கோட்பாடுகளையும் விளக்கும் இந்நூல் ஐந்து பாகங்களைக் கொண்டது.
முதற்பாகம்உடலமைப்பியல்,நோய்கள் ,நோய்காரணிகள்.(Aetiology) குழந்தை நலம், வயோதிபர் நலம்,(Geriatics) பருவகால நோய் சிகிச்சை முறைகள் போன்றவை பற்றி விளக்குகிறது. இரண்டாவது பாகத்தில் மருந்தியல் விபரிக்கப்பட்டுள்ளது. இப்பாகம் 760 வகையான மருந்துகளைப் பற்றி விரிவான விபரங்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது பாகம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறைகள் பற்றியும் வகபரிக்கின்றது. நான்காவது பாகம் பல வகைப்பட்ட காச்சல்கள் ,குஷ்டம்,எலும்பு முறிவுகள், மூட்டுக்களின் இடப்பெயர்சிகள்,புண்கள், உணவு நஞ்சாகுதல், விசர் நாய்கடிகள், போன்ற பொதுவான நோய்கள் பற்றியும் சத்திர சிகிச்சை, அழகுபடுத்தும் கலை போன்றவை பற்றியும் விளக்குகிறது. ஐந்தாவது பாகம் மருந்துகள் தயாரித்தல் அவற்றின் அளவைகள் பற்றியும் விபரிக்கின்றது.
பழமைவாய்ந்த இப்பெரும் நூலில் உடலின் உட்புறத்தே அமைந்துள்ள கானில் சுரப்பிகள் சுரக்கத் தூண்டும், உட்சுரப்பிகள் ( Hormones) அளவைச் சுரக்காமல் அதிகமாகவும் குறைவாகவும் புரப்பதனால் பலவகையான நோய்கள் உண்டா என்ற உண்மையும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நுரையீரல் இறைச்சி செங்கண்மாரி , தோல் நோய்கள், ஆண்-பெண் பாலுறவுகளில் ஏற்படும் நோய்கள் நரம்பு நோய்கள் போன்ற அண்மைக்கால மருத்துவ மேதைகளின் தீவிர கவனத்தைப் பெற்றுள்ள நோய்களைப் பற்றியும் நோய்கள் பரவும் விதம் நோய் நிதானம் காணும் முறைகள் போன்ற விடையங்களைப் பற்றியும் இது விளக்குகின்றது.
இந்நூல் 12ஆம் நூற்றாண்டில் கிரிமோனை நகரைச் சேர்ந்த ஜிரார்ட்(Gerard) என்னும் இத்தாலியரால் இலத்தின் மொழியில் மொழிபேர்க்கப்பட்டதோடு 1-2 ஆம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை மருத்துவ விரிவுரைகளின் அடிப்படை என்ற வகையில் சென்ட் லூயிஸ், மொன்ட் பெல்லியர் போன்ற ஐரோப்பிய நகரங்களில் இருந்த பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பாடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இலத்தீன் மொழி, கிபுறு மொழி போன்றவற்றிலும் வெளிவந்தன. 16நூற்றாண்டில் இந்நூல் 20க்கும் அதிகமான பதிப்புகள் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக ஜேர்மன் மொழியிலும் , 1593 முதல் முதலாக அரபு பதிப்பு ரோம் நகரிலும், 1874 இல் கெய்ரோ நகரிலும் அச்சிட்டு வெளியீடப்பட்டது. 17ம் நூண்டாண்டின் இறுதிவரை இந்நூல் அச்சிட்டு மேலைத்தேய மருத்துவர்களாலும் மக்களாலும் விரும்பி வாசிக்கப்பட்டது.
மாக்ஸ் மேரூப் என்பவர் ''உலகில் வேறு எந்த மருத்துவ நூலும் இதைப்போல் அளவுக்கு அதிகமாக மக்களால் வாசிக்கப்படவில்லை'' என்றும் அதேபோல் Dr வில்லியம் ஒஸ்லர் (Dr.William Osler) என்பவர் இந்நூலைப்பற்றி கூறுகையில் மருத்துவ உலகின் வேதமாக நெடுங்காலம் போற்றப்பட்ட நூல் இதனைத் தவிர வேறில்லை'' என்று கூறுகிறார். அதேபோல் பிரிவைட் ஒர்ட்டன் என்பவர் கூறுகின்றார் ' உண்மையில் இது மருத்துவர்களின் வேதமாகவே இருந்தது எனக் கூறுகின்றார்.
இவர் ஹம்தான் நகரில் வாழ்ந்த போது எழுதிய நூலே கிதாபுஸ்ஷிபா (சிகிச்சை நூல்) இதை 1022 இல் தினந்தோறூம் ஐம்பது பக்கங்கள்வீதம் எழுதி முடித்தார். இந்நூல் மருத்துவ நூல் மாத்திரமல்லாது உளவியல் நூலாகவும் இருந்து வருகின்றது. இது 18பாகங்களைக் கொண்ட ஒரு கலைக் களஞ்சியம் என்று கெறப்படுகின்றது.
இவர் எழுதிய மற்றுமொரு நூல்தான் அர் ஜுஸா பித்திப்பி (மருத்துவக் கவிதை ) என்பது. கானுன் பித்திப்பியிலுள்ள கருத்துக்களின் சுருக்கம் கவிதை உருவில் தரப்பட்டுள்ளது. அதேபோல் அதவியதுல் காலிபா என்பதும் மற்றுமொரு நூலாகும். உள்ளது நோய்களுக்கான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள-மருந்தியல் (Psycho-Pharms cology) பற்றி அக்கால மருத்துவ உலகில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவாகும். இவர் எழுதிய கவானின் (சட்டங்கள்) ஹுதுத் அல் திப்பி ( மருத்துவத்தின் வரைவிலக்கணங்கள் ) போன்ற சிறு நூல்களும் இங்கு குறிப்பிடத்தக்கவை. இவை தவிர வயிற்றுவலி உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள தொடர்பு , கனவு களின் பொருள், நாடித்துடிப்பு என்பதுபற்றியும் சிறு நூல்கள் எழுதியுள்ளார்.
இப்னு சீனாவின் நூல்கள் பல நூற்றாண்டுகள்வரை அறிஞ்ஞர்களிடம் ஆதிக்கம் செலுத்திவந்தது. மேலைத்திய நாட்டுப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி இஸ்பஹான்,தில்லி, பக்தாத் கெய்ரோ, மொரோக்கோ. போன்ற கீழைத்தேச நாடுகளிலும் நிறுவப்பட்டிருந்த கல்லூரிகளிலும் இவை பாட நூல்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவர் பாரசீக முஸ்லிமாக இருந்தும் சில கவிதைகளையும் இரண்டு நூல்களையும் தவிர ஏனை நூல்களை அரபு மொழியிலேயே எழுதினார். இறத்குக்காரணம் அக்கால உலகில் (மேலைத்தியம் உட்பட) அரபு மொழி அறிவியல் மொழியாக இருந்தது. இவருடைய அழகாகன கையெழுத்துப் பிரதிகள் பல பிரித்தானியா நூதனசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறு சில கையெழுத்துப் பிரதிகள் ஐரோப்பிய நூல்நிலையங்களில் கானப்படுகின்றது.
தொற்றுநோய் கொள்கையை முதன் முதலில் மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இப்னு சீனாவையே சாரும். நீராலும் மண்ணுக்கு சில நோய்கள் பரவுகின்றன என்ற உண்மையையும் கண்டுபிடித்தார். இதுபற்றி கானூன் பித்திப் என்ற நூலில்கூட விபரித்துள்ளார். முதன்முதலில் ஐந்தாவது மண்டை நரம்பில் ஏற்படும் வலி பற்றி (Trigeminal Neruarlgia) விபரித்த பெருமையும் இவரையே சாரும். முகத்தசையில் ஏற்படும் சோர்வாதத்தை (Facial Paralysis) மைய நரம்பு மண்டலத்தோடு சம்பந்தப்பட்டது (Central) சுற்யன் நரம்பு மண்டலத்தோடு சம்பந்தப்பட்டது (Peripheral) என்று இருவகைப்படுத்தி விளக்கினார்.
மூளைச்சரும வளர்ச்சி (Meningitis) பற்றியும் அதன்பல்வோறு வகைப்படுத்தப்பட்ட நோய் நிதானம் பற்றியும் சிறந்த விளக்கத்தை எழுதினார். அதேபோல் புடைச்சாய்வு நோய் (Pleurisy)பற்றியும் பில்காசியேசிசு (Bil harziasis) எனும் நோயை நிதானம் கானும் வகை பற்றியும் விபரித்தார். மலோரியா நோய்பற்றியும் சரியான தரவுகளையும் தனது நூலில் எழுதிருந்தார்.
இவர் வைத்தியராக மட்டுமின்றி அறுவை சிகிச்சை வைத்திய நிபுணராகவும் புகழ் பெற்றிருந்தார். மூச்சுக் குழற் றெடுவையைப் பிளந்து குழாய் செலுத்தி சிகிச்சை செய்யும்முறை (Trecheotomy) இவரே முதன் முதலில் கண்டுபிடித்தார்.மிருகங்களின் தோல்களாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட புகுத்தியை (Syringe) பயன்படுத்தி மருந்துக்களை உடம்பில் புகுத்தி ஏற்றிய முதல் மருததுவரும் இவரே. சிறுநீர்ப் பையில் அறுவை வைத்தியம் செய்ததோடு பிரசவ வேளையில் அறுவை வைத்தியம் செய்வதும் அறிந்திருந்தார். கடின பிரசவத்தின்போது யோனி மடலில்னூடாக கையை நுழைத்து நிலை பிறழ்ந்திருக்கும் குழந்தையை ஒழுங்கான நிலைக்குத் திருப்பிவிடும் (Internal Version) முறையையையும் சாவனத்தால் குழந்தையை வெளியே எடுக்கும் (Forceps delivery) முறையையும், வைற்றையையும் கருப்பையையும் பிளந்து குழந்தையை எடுக்கும் ( Cresarian section) முறையையையும் இவர் அறிந்திருந்தார். பிற உயிரினங்களில் இருந்து நரமபு, தோல் தசை போன்ற உறுப்புக்களை பெயர்த்தெடுத்து மனித உடலில் ஒட்டவைக்கும் (Transplantation )அறுவை சிகிச்சை முறையையும் கையாண்டுள்ளார். தனது கானூன் பிதிப்பி எனும் நூலில் உறுப்புக்களை வெட்டி அகற்றுதல் (Amputaion) நாளத்தை வெட்டி குருதியை வெளியேறுறுதல் (Venesection) நாளத்தில் ஊசியால் துளையிட்டு குருதியை வெளியேற்றுதல் (Venepuncture) பெருங்குடலை கழுவுதல் (Enema) போன்ற சிகிச்சை முறைகளைப்பற்றியும் எழுதியுள்ளார். அறுவை சிகிச்சையின்போது கொடுக்கப்படும் உணர்சி நீக்கிகளைப் (Anaesthetics) பற்றியும் விபரித்துள்ளார்.
இப்னு சீனா கண்ணியல் துறையிலும் போதிய பரிச்சயம் பெற்றிருந்தார். கண்ணின் அமைப்பு, தொழிற்பாடு, நோய்கள் சிகிச்சை முறை போன்ற விடையங்களில் கூறியுள்ளார். கண்ணிலிருந்து ஒளி பிறக்கிறது அதன்காரணமாகவே பறப்பொருட்களைப் பார்க்க முடிகிறது என்றும் அக்கால மருத்துவ மேதைகள் நம்பிவந்தனர். இக் கருத்தை முற்றாக மறுத்த இப்னு சீனா வெளியிலிருந்து ஒளி கண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதனாலையே புறப் பொருட்களை பார்க முடிகிறது என்ற கருத்தை வெளியிட்டார். அதேபோல் ஒளியின் தாக்கத்தால் கண்மணி சுருங்குதல், கண்ணின் அசைவுக்கு காரணம் ஆறு தசை நார்கள் ,பார்வை நரம்புகள் முதலியவை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும் இவர் ஹோமியோபதி வைத்திய முறையில் கொடுக்கப்படும்நோய்குறிகளோடு தொடர்புள்ள ஒற்றுமை மருந்துகளைப்பற்றியும் சிறிதளவு விளங்கியுள்ளார். பாம்பின் விஷத்தில் மருந்து தயாரிக்க முடியும் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும். மனநோய் மருத்துவத் துறையிலும் பரிச்சயம் பெற்றிருந்தார். பல புதிய முறைகளைக் கையாண்டு எண்ணற்ற மன நோயாளர்களைக் குணப்படுத்தினார். இவர் கையாண்ட முறைகள் தற்கால மனநோய் வைத்தியத்திலும் கையாளப்படுகின்றது.
இவ்வாறு மத்திய கால மருத்துவக் கலைக்கு அரும்பணி ஆற்றிய இப்னுஸீனாவை தற்கால மருத்துவத்தின் தந்தை (Father of modern medicine) என்று ஐரோப்பியர் அழைக்கின்றனர்.
இவரைப்பற்றி பேராசிரியர் ஜோர்ஜ் சார்ட்டன் என்பவர் தமது விஞ்ஞான வரலாற்றுக்கோர் அறிமுகம் என்ற நூலில் கூறுகையில் ''இவர் மிகுந்த புகழ்பெற்ற விஞ்ஞானி இவர் எல்லா இனத்திற்கும் எல்லா நாட்டிற்கும் எல்லா காலத்திற்குமுரிய ஒரு பெரும் மருத்தூவர்''
ரொம் லண்டோ (Rom Landow) என்பவர் தமது ''இஸ்லாமும் அரேபியர்களும் '' (Islam and Arabs) நூலில் இப்னுஸீனா வரலாற்றிலே ஆயிரம் ஆண்டுகளாகப் பெரும் தத்துவஞானிகளுள் ஒருவராகவும் மருத்துவமேதைகளுள் ஒருவராகவும் வாழ்ந்தவர் என்று கூறுகிறார்.
இத்தகைய பெருமைக்குரிய ஒருவராக வாழந்த இப்னு சீனா கி.பி 1097 ரமழான் மாதம் தொழுதுகொண்டிருந்தபோது மரணித்தார். இவருடைய கல்லறை சோவியத் ரஷ்யாவிலுள்ள ஹமதான் எனும் நகரில் இருக்கின்றது. 1919 இல் இக்கல்லறை புனித சமாதியாகவும் அங்கிருந்த கட்டிடம் கல்வி நிலையமாகவும் திகழ்ந்தது. கிரேக்க மருத்துவமேதையான ஹிப்போ கிரேதிஸோடும் ஒப்பிடத்தக்கவகையில் மருத்துவத்துறையில் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குப் பெற்றிருந்த இம்மருத்துவ மேதையை பெருமைப்படுத்தும் பொருட்டு இக்கல்லறையில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் நூலகம் ஒன்றையும் இணைத்து 1954 இல் திருந்தி அமைக்கப்பட்டது.
1951 இல் இப்னு சீனா பிறந்து ஓராயிரம் ஆண்டு பூர்த்தி விழா ரஷ்யா உள்ளிட்ட பலநாடுகளில் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின்போது பாரசீகம் என்று பண்டைய பெயரைக்
கொண்ட ஈரானில் இப்னு சீனாவை ஞாபகமூட்டுவதற்காக முத்திரைகளும், நாணையங்களும் வெளியீடப்பட்டது. இவருடைய திருவுரப்படம் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மண்டபத்தில் இன்றுகூட தொங்கிய நிலையில் உள்ளது.
Article by
As sheikh Hafeesul haq (#Fathih institute for Higher Education Thihariya)
Director of USA Academy varipathanchenai.
Saturday, October 1, 2022
மேற்குலகால் மறைக்கப்பட்ட மற்றுமொரு முஸ்லிம் மருத்துவ மேதை அஹமத் இப்னு ஜஸ்ஸார்.
10நூற்றாண்டில் வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அஹமத் இப்னு ஜஸ்ஸார் என்பவர் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையாவர்.
சிறுபிள்ளை மற்றும் முதியோர் மருத்துவராக விளங்கிய இவர் கி.பி 285 இல் துனிசியாவில் கைரூவான் நகரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் அபூஜஃபர் அஹமத் இப்னு இப்ராஹிம் இப்னு அபீ காலித் இப்னு அல் ஜஸ்ஸார் என்பதாகும். அல் ஸார் , அல் கஸரா என்பன இவருக்கு ஐரோப்பியர் வழங்கிய இலத்தீன் பெயர்களாகும்.
ஐரோப்பியருக்கு ஐஸாக் ஜுடாயியஸ் என்ற பெயரில் அறிமுகமான யூத மருத்துவ மேதை இஸ்ஹாக் அல் இஸ்ராயீல் என்பவரின் பிரதான மாணவர்களுல் ஒருவராக (865-955 ) காலப் பகுதியில் விளங்கிய இவர் மருத்துவம் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
தூனிசியாவில் கைரவானை ஆட்சி செய்த பாதிமியர்களின் ஆட்சிக்காலங்களகல் அரசவையில் அரச வைத்தியராக கடமையாற்றிய இவர் ''ஸாதுல் முசாபிர் '' (பிரயாணிகளின் காப்பு) என்ற நூலையும் இலத்தீன், கிரேக்கம், ஹிப்ரு போன்ற மொழிகளில் மொழிபெயர்கப்பட்ட இந்நூல் உடலின் உட்புறத்தே தோன்றும் நோய்களைப்பற்றி மிகச்சரியான விபரங்களோடு தருவதோடு அம்மை ,சின்னமுத்து ஆகிய நோய்களைப்பற்றி விளக்கம் தருகிறது.
மேலும் இவர் பீனிசம் ( Coryza) ,கொள்ளை நோய் (Plaguc) போன்ற நோய்களைப்பற்றியும் தனியான நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி 979 மரணமடைந்தார்.
As sheikh Hafeesul (Fathih institute for Higher Education)
Varipathanchenai
Monday, September 26, 2022
இஸ்லாமியா கீற்றுக்களால் உலகை வெளிச்சமூட்டிய கதிரவன் நிரந்தரமாக மறைந்து விட்டது.
அஷ்ஷெய்க்
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )
இமாம் யூசுஃப் அப்துல்லாஹ் அல்-கர்ளாவி அவர்கள் 1926 / september / 09 இல் மேற்கு எகிப்தின் சப்துராப் என்ற கிராமத்தில் பிறந்தார் . இவர் தனது 2 வயதில் தந்தையையும் , 14 வயதில் தனது தாயையும் இழந்தார் . இவர் ஒரு விவசாயப் பின்னணியைக் கொண்டவர் .
இவர் தனது 10 வயது எட்டும்முன்னர் அல்குர் ஆனை மனனம் செய்தார் . இவருடைய ஆரம்பக்கல்வியை அல் அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்றார் . இவர் உயர்தரப்பரிட்சையில் தேசியரீதியில் இரண்டாமிடம் பெற்றார் . பின்னர் அல் அஸஹர் உஸூலுத்தீன் பீடத்தில் சேர்ந்து 1953 இல் 180 பட்டதாரி மாணவர்களில் முதல்தரத்தைத் தட்டினார் .
1958 அரபு மொழித்துறையில் Diploma பட்டம் பெற்றார் . பின்னர் 1960 இல் ஷரீஆ துறையில் MA பட்டமும் , 1973 இல் இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதிப்பட்டமும் பெற்றார்.
இவரின் இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பொறுத்தவரை . தனது 16 வயதில் தன்னுடைய சொந்தக்கிரமத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்கு ஆரம்பித்தார் . இவர் தனது 19 ஆவது வயதில் இஃவானுல் முஸ்லிமூன் அமைப்புடன் சேர்ந்து இஸ்லாமியப்பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் . கவலை என்னவென்றால் இவர் இஃவானுல் முஸ்லிமூன் அமைப்புடன் சேர்ந்து இஸ்லாமியப்பிரச்சாரம் செய்தமைக்காக இரண்டு சிறைகளில் பலமுறை தள்ளப்பட்டார் .1949 ,1954 - 1956 வரை அதிபர் ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியில் , பின்னர் 1962-லும் இவ்வாறு பல தடவைகள் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
1977-ல் கத்தார் பல்கலை கழகத்தில் இஸ்லாமிய ஷரீஆ துறையையும் சீறா மற்றும் சுன்னாஹ்வுக்கான ஆய்வு மையத்தையும் துவக்கினார். அல்ஜீரியாவில் இஸ்லாமிய கற்கைகளுக்கான அமீர் அப்துல் காதிர் பல்கலைகழக கல்வியிலாளர் குழுத் தலைவராகவும், இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சின் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் சுமார் 100 இற்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்
பலஸ்தீன் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் இவர் உலக முஸ்லிம்களுக்கு உதவும் பொருட்டு, சர்வதேச இஸ்லாமிய நிவாரண நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு ஊக்குவித்தார். அயர்லாந்தைத் தலைமையகமாகக் கொண்ட பத்வா மற்றும் இஸ்லாமிய ஆய்வுக்கான ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவராகவும் ,முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union of Muslim Scholars)(الاتحاد العالمي لعلماء المسلمين)
தலைவராகவும் தற்போது இருந்த நிலையில் தனது 96வது வயதில் கத்தாரில் வபாத்தானார்.
இவர் எழுதிய சில பிரசித்தி பெற்ற புத்தகங்கள் பின்வருமாறு.
*الحلال والحرام في الإسلام
*فتاوى معاصرة
*تيسير الفقه للمسلم المعاصر
*تيسير فقه الصيام
*فقه اللهو والترويح
*الاجتهاد في الشريعة الإسلامية
*المدخل لدراسة الشريعة الإسلامية
*من فقه الدولة في الإسلام
*الفتوى بين الانضباط والتسيب
*في فقه الأقليات المسلمة
*فقه الزكاة
*فوائد البنوك هي الربا الحرام
*دور الزكاة في علاج المشكلات الاقتصادية وشروط نجاحها
*كيف نتعامل مع القرآن العظيم
*الحياة الربانية والعلم
*النية والإخلاص
*الإخوان المسلمون سبعون عاما في الدعوة والتربية والجهاد
*الوقت في حياة المسلم
*الصحوة الإسلامية وهموم الوطن العربي والإسلامي
*أولويات الحركة الإسلامية في المرحلة القادمة
*في فقه الأولويات دراسة جديدة في ضوء القرآن والسنة
*الإسلام والعلمانية وجها لوجه
*ملامح المجتمع المسلم الذي ننشده
*غير المسلمين في المجتمع الإسلامي
*شريعة الإسلام صالحة للتطبيق في كل زمان ومكان
*الصحوة الإسلامية بين الجحود والتطرف
*الصحوة الإسلامية بين الاختلاف المشروع والتفرق المذموم
*من أجل صحوة راشدة تجدد الدين وتنهض بالدنيا
*تاريخنا المفترى عليه
*نحن والغرب
*الدين والسياسة
*الحلول المستوردة
*الحل الإسلامي فريضة وضرورة
*بينات الحل الإسلامي وشبهات العلمانيين والمتغربين
*موقف الإسلام من الإلهام والكشف والرؤى والتمائم والكهانة *والرقي
*الإيمان والحياة
*العبادة في الإسلام
*الخصائص العامة للإسلام
*مدخل لمعرفة الإسلام
*الإسلام .. حضارة الغد
*جيل النصر المنشود
*خطب الشيخ القرضاوي
*كلمات في الوسطية ومعالمها
*الإمام الغزالي بين مادحيه وناقديه
*الشيخ أبو الحسن الندوي كما عرفته
*عالم وطاغية
*الإسلام والفن
*الأقليات الدينية والحل الإسلامي
*القدس قضية كل مسلم
*ظاهرة الغلو في التكفير
*مع أئمة التجديد ورؤاهم في الفكر والإصلاح
*البابا والإسلام
*السنة والبدعة
*لماذا الإسلام
*لكي تنجح مؤسسة الزكاة في التطبيق المعاصر
*الحكم الشرعي في ختان الإناث
*خطابنا الإسلامي في عصر العولمة
*رعاية البيئة في شريعة الإسلام
*اقرأ أيضاً
*المصادر
*وصلات خارجية
Friday, September 23, 2022
மேற்குலகால் மறைக்கப்பட்ட மற்றுமொரு மருத்துவ மேதை இப்னு ஜுல் ஜுல்
தொடர் =12
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )
10ம் நூற்றாண்டில் ஸ்பெயினை தோற்றுவித்த முஸ்லிம் மருத்துவர்களுல் இப்னு ஹஸ்ஸான் இப்னு ஜுல் ஜுல் என்பவரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.
இஸ்பெயினை ஆட்சிசெய்த உமையாக் கலீபா இரண்டாம் ஹிஷாமின் ( 996-1009) அரசவை மருத்துவராக விளங்கிய இவரின் முழுப்பெயர் அபூதாவூத் சுலைமான் இப்னு ஹஸ்ஸான் இப்னு ஜுல் ஜுல் என்பதாகும்.
ஸ்பெயின் குருத்துபா நகரில் வாழ்ந்த இவர் 982 இல் கிரேக்க மருத்துவ மேதையான ''தயஸ்கோரைதஸ்'' என்பவரின் நூல் ஒன்றுக்கு விளக்கவுரையும் பின்னர் அனுபந்தமும் எழுதினார். இவர் எழுதிய அனுபந்தத்தில்
தயஸ்கோரைதஸ் குறிப்பிடாத மருந்துக்களின் பட்டியல் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் எழுதிய மற்றுமொரு நூலாக ''தாரீகுல் அதிப்பா வல் பலாஸிபா
''(மருத்துவர்கள்,தத்துவஞானிகள்,ஆகியோரின் வாழ்கை வரலாறு) என்பதாகும். இந்த நூலில் ஸ்பெயினில் அவருடைய காலம்வரை வாழ்ந்த முஸ்லிம் மருத்துவ மேதைகள் தத்துவஞானிகள் ஆகியோரின் வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன.
இந்த நூலை பிற்காலத்தில் அறிவியல் வரலாறு எழுதி புகழ்பெற்ற அபீ உஸைபிஆ என்பவர் பெரிதும் பயன்படுத்தியுள்ளதாக வரலாறுகள் கூறியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)