Thursday, July 28, 2016

ISIS உருவான வரலாறு

 

( ISIS :- Islamic state iraq and sham) 

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி) 

#) ISIS இன் தோற்றம் (داعش )
#) ISIS என்ற இயக்கம்  தோன்றுவதற்கான #பின்னணி என்ன ? 

ஒவ்வொரு காலத்திலும் எமது முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு விதமான பிரச்சினையைக் எதிர்நோக்கி வந்ததுள்ளது  அந்தவகையில்   இன்று எமது முஸ்லிம் சமூகத்தில் ISIS என்ற வடிவில் பிரச்சனை உருப் பெருக்க  ஆரம்பித்துள்ளது. 

ISIS பற்றி பலரிடம் பல கருத்துக்கள் இருந்தாலும் இதனுடை  ஆரம்பம்  எப்போது என்பதில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. உண்மையில் ISIS என்ற தீவிர சிந்தனையின் உருவாக்கம் 1980 களிலேயே ஆரம்பமாகிவிட்டது.1980 களில் முஸ்லிம் நாடுகளை ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பிரிட்டிஷ் , போத்துகல் ஒல்லாது போன்ற நாடுகள் தனது காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்தது (Colonialism) இதனால் முஸ்லிம் நாடுகளில் மேற்கு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்தோடு  முஸ்லிம்களின் சில உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டது . இதனால் கவலை கொண்ட முஸ்லிம்கள் எங்களின்  மதச் சுதந்திரத்தை  ஐரோப்பிய சக்திகளிடமிருந்து மீட்க்க  வேண்டும் என்று ஈராக் லிபியா எகிப்து அல்ஜீரியா   போன்ற நாடுகளில் சிரிய சிரிய குழுக்கல் தோன்றியது. அவ்வாறு தோன்றிய  ஒரு சிறிய இயக்கம் ஈராக்கிலும் தோன்றியது . 

1980 களில் ((ஸலபியா அல் ஜிஹாதியா ))  என்ற ஒரு சிந்தனை  தோன்றுகிறது இதை துறை சார்ந்த அறிஞர்கள் 1980 களில் தோன்றிய வரம்பு மீறிய ஆயுதக் குழுக்கள் என்று கூறுவார்கள். இவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்றால் நீண்ட காலமாக இஸ்லாமிய அமைப்புகள் மக்களை சீர்திருத்தம் செய்வதில் எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை இந்த வழிமுறையில்  எமது இஸ்லாமிய இயக்கம் தொடர்ந்து பயனித்தால் முஸ்லிம் சமூகம் பாரிய வீழ்ச்சியை நோக்கி வண்ணம் செல்லும் என்று எண்ணி நாங்கள் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்றால் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் அப்போதுதான் எமது  இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் தலை தூக்கலாம் என்று எண்ணி அங்கு இருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிராக போராடுதல் வன்முறையைப் பயன்படுத்தல் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

சில நாடுகளில் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செயதார்கள். சில நாடுகளில் பிழையான கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்கு குண்டுகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினார்கள். இப்படி பயங்கரவாத வன்முறை வழியினூடக இஸ்லாத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இப்படியான பிழையான வழிகளைக் கையான்டார்கள்.

 இப்படி சலபிஸம் சிந்தனை  கொண்ட தீவிரவாதக் குழுக்களில் ஒன்று ஈராக்கிலும் உருவானது. ஈராக்கில் உருவானதில் முன்னணியில் இருப்பது அல் கைதாவாகும் இப்படியான ஒரு ஜிஹாதிய குழு ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அங்கு இருக்கும் வாலிபர்கள், சதாம் ஹுஸைனின் படையில் இருந்து பிரிந்து வந்தவர்கள் 8 வருட ஈரானியப் போரில் கசப்பு உணர்வுடன் இருந்தவர்கள் இப்படி வித்தியாசமான மனக் கசப்பு கொண்டவர்கள் சேர்ந்து  #ஜமாஅதுத் தெளஹீத் வல் ஜிஹாத் என்ற போராட்டக் குழு ஒன்றை #அபூ முஸ்ஃப் அஸ்ஸர்காவி என்பவர் 2004  ஈராக்கில் உருவாக்கினார். 

இவர் அல் கைதாவின் அதே சிந்தனையை உஸாமா பின்லேடனிடம் பைஅத் உருவாக்கினார். இந்தக் குழுவில் சிரியவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் #அபூ முஹம்மத் அல் கோலானி என்ற மாணவர் சேர்ந்து கொள்கின்றார். இவர் ஈராக்கில் #அபூ முஸ்ஃப் அஸ்ஸர்காவி இன் தலைமையில் போராடுகின்றார். இவரின் திறமையின் காரணமாக #ஜமாஅதுத் தெளஹீத் வல் ஜிஹாத் என்ற அமைப்பில் முன்னணிக்கு வந்தார்.  பின்னர் ஈராக்கில் இருக்கும் #மவ்சில் என்ற பகுதிக்கு தலைவராக இருந்தார்.

 2006  இல் அபூ முஸ்ஃப் அஸ்ஸர்காவி ஒரு தாக்குதலில் மரணிக்கின்றார். பின்னர் தலைமைக்கு  #அபூ உமர் அல் பக்தாதி என்பவர் வருகின்றார் அவரும்  மரணிக்கின்றார் பின்னர் #அபூ ஹம்ஸா அல் முஹாஜிர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் சிரியவிலும் அரபுப் புரட்சி வந்தது அப்போது சிரியாவைச் சேர்ந்த  #அபூ முஹம்மத் அல் கோலானி அதே அமைப்பை சிரியாவிலும் ஒரு கிழையை உருவாக்க அனுமதி கோறி 2012 இல் சிரியாவில் #ஜபஹதுன் நுஸ்றா லிஅஹ்லிஷ் ஷாம் ( ஷாம் மக்களை பாதுகாக்கும் முன்னணி ) என்ற  ஒரு படையை உருவாக்குகின்றார் . கடுமையாகப் போராடினார் .  இவர் அதே நேரம் அல்கைதாவின் சிந்தனையில்தான் போராடுகின்றார் இப்போது இருக்கும்  #ஐமன் லவாகிரிக்கு பைஅத் செய்தும் இருந்தார் . 

 இந்த சந்தர்ப்பத்தில் ஈராக்கில் இருக்கும் #ஜமாஅதுத் தெளஹீத் வல் ஜிஹாத் என்ற போராட்டக் குழுக்கு #அபூபக்கர் அல்பக்தாதி என்ற யூத தரகர் தலைமைப் பொறுப்பை பெறுகின்றான். தலைமைப் பொறுப்பை பெற்றவுடன் #அபூ முஹம்மத் அல் கோலானியிடம் கூறுகின்றார் நாங்கள் #ஜபஹதுன் நுஸ்றா லிஅஹ்லிஷ் ஷாம்  என்றும் தவ்லா இஸ்லாமிய என்றும் பெயர் வைத்திருக்கத் தேவை இல்லை நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து #தவ்லா இஸ்லாமிய ஈராக் வஷாம் ( ISIS :- Islamic state iraq and sham) என்று தனியான பெயரில் போராடுவோம் என்றார் .

இது #அபூ முஹம்மத் அல் கோலானிக்கு பிடிக்கவில்லை காரணம் #அபூபக்கர் அல்பக்தாதியின் தீவிப்போக்கும் அவரின் தீவிரமான பாச்சலும் பிழையக விளங்கியது . 
#அபூபக்கர் அல்பக்தாதி எப்படிப் பேசினார் என்றால் ((( நாங்கள் மாத்திரம்தான் உண்உண்மையான போராளிகள் நாங்கள் சொல்வதற்கு எதிராக போராடும் குழு இருந்தால் அவர்கள் காபிர்கள் )))  நாங்கள் போராடும் தொனியில்தான் அவர்கள் போராட வேண்டும் அவர்கள் இணையாவிட்டால் நாங்கள் அவர்களைக் கொள்ளுவோம் என்ற தொனியில் வந்தார் அப்போது #அபூ முஹம்மத் அல் கோலானி சொன்னார் எனக்கு முடியாது அது பிழை என்றார் அப்போதுதான் #அபூபக்கர் அல்பக்தாதி இவருக்கு எதிராகப் போர் தொடுக்கின்றார். 
இது 2014 இன் பிறகு இடம் பெறுகின்றது . 

எப்படி மாறினார் என்றால் #அபூபக்கர் அல்பக்தாதி சிரியாவின் அரச படைக்கு எதிராகப் போராடாமல் பஷாருக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு எதிராகப் போராடினார் . இப்படி போராட்டம் தோங்கிய போது  சிரியாவின் போர் இஸ்த்தம்பிதம் அடைந்தது அப்போது #சிரியாவில் உண்மைக்கு உண்மையாகப் போராடும் #அஹ்ராருஷ் ஷாம் எனற இயக்கம் முன்னணி தலைவர்கள் மஷூறா செயவதற்கு மிகவும் பாதுகாப்பான இடத்தில் ( சுரங்கத்தில் ஒன்று கூடிய போது இந்த ISIS தீவிரப் போக்கு கொண்டவர்கள் ஊடுருவி பெரியதோர் தாக்குதலை மேற் கொண்டார்கள் இதில் முன்னணியில் இருந்த தலைவர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டார்கள். உண்மையில் இஸ்லாத்திற்காகப் போராடிய ஒரு குழு ISIS  இன் தீவிரத் தன்மையால் அழிந்து விட்டது. இன்நிகழ்வு 2014 september 9 ம் திகதி இடம்பெற்றது. 

இப்படி இவர்களின் இஸ்லாத்திற்கு முறனான தாக்குதல்கள் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத நாடுகளில் தொடர்ந்து கொண்டு உள்ளது #அல்ஹம்துலில்லாஹ் இப்போது ஈராக்கின் #மெளசூல் நகரத்தை மாத்திரமே  இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்போது பல நாடுகள் இணைந்து இப்படியான முற்போக்குச் சிந்தனைகளைக்  கொண்ட ISIS 
என்ற அமைப்பின் கொட்டத்தை அடக்கிக் கொண்டு வருகின்றது . இதுதான் ISIS  அமைப்பின் உருவாக்கம் . கவலை என்னவென்றால் இப்படியான இயக்கத்தில் #அதிகமானோர்_இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியாமல் போராடுகின்றார்கள் . 

தயவுசெய்து இதை அனைவருக்கும் எத்திவையுங்கள் .

Wednesday, July 20, 2016

பலஸ்தீனில் கத்திப் புரட்சியின் விளைவு

பலஸ்தீன போராட்டம்  என்பது  நேற்றோ அல்லது இன்றோ ஆரம்பித் போராட்டமல்ல இது சுமாராக 65 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்  . அன்றிலிருந்து இன்றுவரைக்கும் பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடாவெடிகளும் அத்துமீறல்களும் தொடர்ந்து கொண்டே உள்ளது .

இன்று  பலஸ்தீனைப் பொறுத்தவரை #கத்திப்புரட்சி முன்ம்முறமாக மூன்று பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது   #ஒன்று #மேற்குக் கரை இது மஹமூத் அப்பாஸின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசம் இதில்  முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள்   இதில் சில பிரதேசங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.  #இரண்டாவதாதக   #43ம் பிரதேசம் அதாவது 1943 முன்பு வாழ்ந்தவர்கள் என்று சொல்வார்கள் இதி அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இது முற்றிலும் இஸ்ரேலின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபிரதேசம். இதில்தான் முஸ்லிம்களின் காணி சுவிகரிக்கப்பட்டு அகதிகளாக விரட்டப்பட்டுள்ளார்கள் இந்த மக்களுக்குதான் ஷேஹ் றாஹித் ஸலாஹ் பொறுப்பாக இருந்தார் . #மூன்றாவதாக காஸா பிரதேசம் இதில் இஸ்ரேலின் ஊடுருவல் இல்லை இது முற்றுமுழுதாக #ஹமாஸின் கட்டுப்பாடில் உள்ளது.

மேற் குறிப்பிட்ட மூன்று பிரதேசங்களிலும் கத்திப் புரட்சி மேலோங்கி வருகின்றது . இந்த கத்திப் புரட்சி இன்று இஸ்ரேலியர்களிடம் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் அதிகமான இஸ்ரேலியர்கள் இஸ்ரேலை விட்டு வேறு இடங்களுக்கு நகர்ந்து செல்வதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது . (Al hamthulillah )

#இதுவே_பலஸ்தீனர்களின்_வெற்றி ✌✌

Saturday, July 9, 2016

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி (ரஹ் )


A.M. HAFEESUL HAQ ( FATHHI)

பிறப்பு :- ஹி 58 [ மதீனாவில் ]

இவரின் புனைப்பெயர் :- [ இப்னு ஷிஹாப் , அபூபக்கர் ]

தாய் :- [ ஆயிஷா பின்த் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் ]

துறை :- [ வரலாறு , ஹதீஸ் ]

இவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் :- [2200]

இவரின் ஆசிரியர்கள் :- [ முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் , மாலிக் இப்னு அனஸ் ]

மரணம் :- [ ஹி 124 ரமளான் பிறை 17 ல் ] 

இமாம்  முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி (ரஹ் )   அவர்களைப் பொறுத்தவரை ஹி 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரும் ஹதீஸ் துறை அறிஞர்களில் இவரும் ஒருவர் . இவரைப் பற்றி பிரபலமான அறிஞரான  முஹம்மத் இப்னு ஸஃத் கூறுகையில் இமாம் ஸுஹ்ரி (ரஹ்) நம்பகத்தன்மைவாய்ந்த ஹதீஸ்துறை அறிஞர் . அவர் அறிவிலும் ஹதீஸ் அறிவிப்பிலும் நம்பகத்தன்மைவாய்ந்தவர் .

அதேபோல் அப்துர் ரஸ்ஸாக் என்ற பிரபலமான இஸ்லாமிய அறிஞர் கூறுகையில் " இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் ஸஃத் இப்னு அல் முஸையப் போன்ற பெரும் தாபியீன்களின் ஹல்காக்களில் அமர்ந்து படித்தவர். அதேபோல் மதீனாவில் இருந்த பெரும் அறிஞர்களில் ஒருவரான "உபைதுல்லாஹ் இப்னு உமர் " போன்ற பெரும் தாபியீனிடம் படித்துள்ளார் என்னு கூறுகின்றார் .

மேலும்  முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி   (ரஹ் )  அவர்கள் இமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் ஆசிரியர் என்றவகையில் சிறப்புற்று விளங்குகிறார் .

உண்மையில் ஹதீஸ் துறையின் வளர்ச்சிக்கு இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களின் பங்களிப்பை  எம்மால் அளவிட முடியாது .ஹதீஸ் துறையின் வளர்சியைப் பொறுத்தவரை ஹி 2 ம் நூற்றாண்டில்   கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸின் காலத்தில் ஆரம்பமானது . ஹதீஸ் துறைக்கு மிகவும் பங்களிப்பு செய்த கலீபாவாக நாம் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ( ரஹ் ) அவர்களைக் காண முடியும் .

ஹதீஸ் தொகுப்பைப் பொறுத்தவரை முதலாம் நூற்றாண்டிலேயே ஒரு சில ஹதீஸ் தொகுப்புகள் ஒரு சில ஸஹாபாக்களிடம் காணப்பட்டுள்ளது . அப்படி எழுதிப்பாதுகாத்த தொகுப்புக்கள் கூட முறையின்றி அங்கும் இங்கும் சிதறிக் கிடந்ததை எம்மால் வரலாற்றில் பார்க்க முடியும்.  பிற்காலத்தில் வந்த கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ( ரஹ் ) அவர்கள் அக்கறை காட்டி சிதறிக்கிடந்த ஹதீஸ்களை ஒரே தொகுப்பில் கொண்டு வருவதற்காகவும் அதை முறையாகப் பாதுகாக்க வேண்டும் போலியன ஹதீஸ் பயன்பாட்டைவிட்டும் மக்களை தூரப்படுத்த வேண்டும்  என்பதற்காக உமர் இப்னு அப்துல் அஸீஸ் ( ரஹ் ) அவர்கள் ஹதீஸ்களை தொகுப்பதற்கான ஒரு குழுவை தீர்மானித்தார்.

இதற்காக உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
அவர்கள் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற மூவர் கொண்ட குழுவை நியமித்து இப் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள் பின்வருமாறு

1. அபூபக்கர் இப்னு அம்றுப்னு அஸ்ம் (ரஹ்)
இவர் மதீனாவில் காழியாக ( நீதிபதியாகக் கடமையாற்றியவர்)

2. காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீபக்கர் (ரழி)

3. அபூபக்கர் முஹம்மத் இப்னு முஸ்லிம் இப்னு அப்துல்லாஹ் ( ரழி )

இவர்கள் தவிர ரபீஃ இப்னு ஸபீஹ் , ஸஃத் இப்னு அறுபா (ரஹ்) ஷுர்வாயி ( ரஹ்)  போன்றோர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள். 

இக்காலப்பிரிவில்தான் இமாம் ஸுஹ்ரி ( ரஹ்) அவர்கள் ஹதீஸ் தொகுப்பாளராக பிரசித்தி பெற்றிருந்தார். இமாம்   என்ற பெயரில் பிரபலமாக இருந்த இவர் இப்னு ஷிஹாப் என்ற பெயரில் அறிமுகமாகி இருந்தார் . இதுவரைக்கும் இவர் 2200 ஹதீஸ்களை அறிவிப்பு செய்துள்ளார் . இவர் ஹதீஸ்கலை மேதைகளைத் தேடிச் சென்று ஹதீஸ்களைத் தொகுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களுக்கு கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஹதீஸ்களை ஒன்று திரட்டும் பணியைக் கொடுத்தாக தத்ரீபுர் ராவி என்ற நூல் குறிப்பு காணப்படுகிறது.

ஸாலிஹ் இப்னு கைஸ் (ரழி) பின்வருமாறு கூறுகின்றார் நானும் ஸுஹ்ரியும் சமகாலத்தில் அறிவைத்தேடுபவர்களாக இருந்தோம் இருவரும் இணைந்து ஹதீஸ்களை திரட்டுவோம் என்று கூறுகின்றார் .
(கன்ஸுல் உம்மால் பக்கம் _05 )

முஃமர் ( ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார் இமாம் ஸுஹ்ரி ரஹ் அவர்கள் மதுன்லாவின் ஹதீஸ் திரட்டினால் பல ஒட்டகைகளிடம் ஏற்றிவிடலாம். ஹதீஸ் கலைலிலும் சட்டக்கலையிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய இமாம் ஸுஹ்ரி ரஹ் இமாம் புஹாரியின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது .

மதீனாவில் ஒவ்வொரு வீடு சென்றும் சிறியவர் பெரியவர் அனைவரிடமிருந்தும் ஹதீஸ்களை திரட்டி எழுதுவதில் இவர் காட்டிய அக்கரை வரலாற்றில் மறக்க முடியாது . "வலீத் இப்னு யஸீத் " படு கொலை செய்யப்பட்ட பின்னர் இவரின் நூலகத்தில் இருந்த ஹதீஸ் சுவடுகள் இடம் மாற்றப்பட்டன அதேபோல் இமாம் ஸுஹ்ரி ரஹ் அவர்கள் தனியாகத்திரட்டிய சுவடுகள் மாத்திரம் பல பகுதிகளுக்கு கோவேறு கழுதையில் ஏற்றிச் செல்லப்பட்டன .  பின்னர் ஹி 124 றமளான் பிறை 17 இல் காலமானார் இதுதான் இமாம் ஸுஹ்ரி ரஹ் அவர்கள் வாழ்க்கை வரலாறு