Saturday, July 9, 2016

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி (ரஹ் )


A.M. HAFEESUL HAQ ( FATHHI)

பிறப்பு :- ஹி 58 [ மதீனாவில் ]

இவரின் புனைப்பெயர் :- [ இப்னு ஷிஹாப் , அபூபக்கர் ]

தாய் :- [ ஆயிஷா பின்த் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் ]

துறை :- [ வரலாறு , ஹதீஸ் ]

இவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் :- [2200]

இவரின் ஆசிரியர்கள் :- [ முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் , மாலிக் இப்னு அனஸ் ]

மரணம் :- [ ஹி 124 ரமளான் பிறை 17 ல் ] 

இமாம்  முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி (ரஹ் )   அவர்களைப் பொறுத்தவரை ஹி 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரும் ஹதீஸ் துறை அறிஞர்களில் இவரும் ஒருவர் . இவரைப் பற்றி பிரபலமான அறிஞரான  முஹம்மத் இப்னு ஸஃத் கூறுகையில் இமாம் ஸுஹ்ரி (ரஹ்) நம்பகத்தன்மைவாய்ந்த ஹதீஸ்துறை அறிஞர் . அவர் அறிவிலும் ஹதீஸ் அறிவிப்பிலும் நம்பகத்தன்மைவாய்ந்தவர் .

அதேபோல் அப்துர் ரஸ்ஸாக் என்ற பிரபலமான இஸ்லாமிய அறிஞர் கூறுகையில் " இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் ஸஃத் இப்னு அல் முஸையப் போன்ற பெரும் தாபியீன்களின் ஹல்காக்களில் அமர்ந்து படித்தவர். அதேபோல் மதீனாவில் இருந்த பெரும் அறிஞர்களில் ஒருவரான "உபைதுல்லாஹ் இப்னு உமர் " போன்ற பெரும் தாபியீனிடம் படித்துள்ளார் என்னு கூறுகின்றார் .

மேலும்  முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி   (ரஹ் )  அவர்கள் இமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் ஆசிரியர் என்றவகையில் சிறப்புற்று விளங்குகிறார் .

உண்மையில் ஹதீஸ் துறையின் வளர்ச்சிக்கு இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களின் பங்களிப்பை  எம்மால் அளவிட முடியாது .ஹதீஸ் துறையின் வளர்சியைப் பொறுத்தவரை ஹி 2 ம் நூற்றாண்டில்   கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸின் காலத்தில் ஆரம்பமானது . ஹதீஸ் துறைக்கு மிகவும் பங்களிப்பு செய்த கலீபாவாக நாம் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ( ரஹ் ) அவர்களைக் காண முடியும் .

ஹதீஸ் தொகுப்பைப் பொறுத்தவரை முதலாம் நூற்றாண்டிலேயே ஒரு சில ஹதீஸ் தொகுப்புகள் ஒரு சில ஸஹாபாக்களிடம் காணப்பட்டுள்ளது . அப்படி எழுதிப்பாதுகாத்த தொகுப்புக்கள் கூட முறையின்றி அங்கும் இங்கும் சிதறிக் கிடந்ததை எம்மால் வரலாற்றில் பார்க்க முடியும்.  பிற்காலத்தில் வந்த கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ( ரஹ் ) அவர்கள் அக்கறை காட்டி சிதறிக்கிடந்த ஹதீஸ்களை ஒரே தொகுப்பில் கொண்டு வருவதற்காகவும் அதை முறையாகப் பாதுகாக்க வேண்டும் போலியன ஹதீஸ் பயன்பாட்டைவிட்டும் மக்களை தூரப்படுத்த வேண்டும்  என்பதற்காக உமர் இப்னு அப்துல் அஸீஸ் ( ரஹ் ) அவர்கள் ஹதீஸ்களை தொகுப்பதற்கான ஒரு குழுவை தீர்மானித்தார்.

இதற்காக உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
அவர்கள் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற மூவர் கொண்ட குழுவை நியமித்து இப் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள் பின்வருமாறு

1. அபூபக்கர் இப்னு அம்றுப்னு அஸ்ம் (ரஹ்)
இவர் மதீனாவில் காழியாக ( நீதிபதியாகக் கடமையாற்றியவர்)

2. காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீபக்கர் (ரழி)

3. அபூபக்கர் முஹம்மத் இப்னு முஸ்லிம் இப்னு அப்துல்லாஹ் ( ரழி )

இவர்கள் தவிர ரபீஃ இப்னு ஸபீஹ் , ஸஃத் இப்னு அறுபா (ரஹ்) ஷுர்வாயி ( ரஹ்)  போன்றோர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள். 

இக்காலப்பிரிவில்தான் இமாம் ஸுஹ்ரி ( ரஹ்) அவர்கள் ஹதீஸ் தொகுப்பாளராக பிரசித்தி பெற்றிருந்தார். இமாம்   என்ற பெயரில் பிரபலமாக இருந்த இவர் இப்னு ஷிஹாப் என்ற பெயரில் அறிமுகமாகி இருந்தார் . இதுவரைக்கும் இவர் 2200 ஹதீஸ்களை அறிவிப்பு செய்துள்ளார் . இவர் ஹதீஸ்கலை மேதைகளைத் தேடிச் சென்று ஹதீஸ்களைத் தொகுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களுக்கு கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஹதீஸ்களை ஒன்று திரட்டும் பணியைக் கொடுத்தாக தத்ரீபுர் ராவி என்ற நூல் குறிப்பு காணப்படுகிறது.

ஸாலிஹ் இப்னு கைஸ் (ரழி) பின்வருமாறு கூறுகின்றார் நானும் ஸுஹ்ரியும் சமகாலத்தில் அறிவைத்தேடுபவர்களாக இருந்தோம் இருவரும் இணைந்து ஹதீஸ்களை திரட்டுவோம் என்று கூறுகின்றார் .
(கன்ஸுல் உம்மால் பக்கம் _05 )

முஃமர் ( ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார் இமாம் ஸுஹ்ரி ரஹ் அவர்கள் மதுன்லாவின் ஹதீஸ் திரட்டினால் பல ஒட்டகைகளிடம் ஏற்றிவிடலாம். ஹதீஸ் கலைலிலும் சட்டக்கலையிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய இமாம் ஸுஹ்ரி ரஹ் இமாம் புஹாரியின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது .

மதீனாவில் ஒவ்வொரு வீடு சென்றும் சிறியவர் பெரியவர் அனைவரிடமிருந்தும் ஹதீஸ்களை திரட்டி எழுதுவதில் இவர் காட்டிய அக்கரை வரலாற்றில் மறக்க முடியாது . "வலீத் இப்னு யஸீத் " படு கொலை செய்யப்பட்ட பின்னர் இவரின் நூலகத்தில் இருந்த ஹதீஸ் சுவடுகள் இடம் மாற்றப்பட்டன அதேபோல் இமாம் ஸுஹ்ரி ரஹ் அவர்கள் தனியாகத்திரட்டிய சுவடுகள் மாத்திரம் பல பகுதிகளுக்கு கோவேறு கழுதையில் ஏற்றிச் செல்லப்பட்டன .  பின்னர் ஹி 124 றமளான் பிறை 17 இல் காலமானார் இதுதான் இமாம் ஸுஹ்ரி ரஹ் அவர்கள் வாழ்க்கை வரலாறு

No comments:

Post a Comment