Thursday, September 29, 2016

أقوال أئمة المذاهب الإسلامية في جواز كشف وجه المرأة

مذهب الشافعية

قال الإمام الشافعي في كتابه "الأم" (1|89): "وكل المرأة عورة، إلا كفيها ووجهها. وظهر قدميها عورة". واختاره البيهقي في السنن الكبرى (7|85) وفي "الآداب".. واختاره البغوي الشافعي في "شرح السنة" (9|23), وكذلك في روضة الطالبين وعمدة المفتين (6/15).. وفي المجموع شرح المهذب (17/298).

مذهب الحنابلة

قال ابن قدامة في المغني (ج1/ص349): (ولو كان الوجه والكفان عورة لما حرم سترهما ولأن الحاجة تدعو إلى كشف الوجه للبيع والشراء والكفين للأخذ والإعطاء) .
وكذلك قاله المرداوي في "الإنصاف" (1|452): (الصّحِيحُ مِنْ الْمذْهبِ أنّ الْوجْه ليْس بِعوْرةٍ. وعليْهِ الأصْحابُ. وحكاهُ الْقاضِي إجْماعًا).

وقال ابن مفلح في "الآداب الشرعية" (1/316): ( قال العلماء رحمهم الله تعالى: وفي هذا حجة على أنه لا يجب على المرأة أن تستر وجهها في طريقها وإنما ذلك سنة مستحبة لها).
قال ابن عبدالبر في التمهيد (6|364) في المرأة: (وقال أبو بكر بن عبد الرحمن بن الحارث: "كل شيء من المرأة عورة حتى ظفرها". ثم رواه بإسناده عنه ثم قال: "قول أبي بكر هذا خارج عن أقاويل أهل العلم، لإجماع العلماء على أن للمرأة أن تصلي المكتوبة، ويداها ووجهها مكشوف ذلك كله منها تباشر الأرض به. وأجمعوا على أنها لا تصلي متنقبة ولا عليها أن تلبس فقازين في الصلاة. وفي هذا أوضح الدلائل على أن ذلك منها غير عورة. وجائز أن ينظر إلى ذلك منها كل من نظر إليها بغير ريبة ولا مكروه. وأما النظر للشهوة فحرام تأملها من فوق ثيابها لشهوة، فكيف بالنظر إلى وجهها مسفرة؟).

مذهب الظاهرية

قال ابن حزم في المحلى (ج3/ ص216): بعدما ذكر الآية (وفيه نص على إباحة كشف الوجه لا يمكن غير ذلك أصلا).. جاء في كتاب" الفقه على المذاهب الأربعة" تأليف لجنة من العلماء منهم الجزيري: في بحث حد عورة المرأة (1/167-الطبعة الثانية): "أما إذا كانت بحضور رجل أجنبي أو امرأة غير مسلمة فعورتها جميع بدنها ما عدا الوجه والكفين فإنهما ليسا بعورة فيحل النظر لهما عند أمن الفتنة".
وأما القول بأن الأمر بأن لا تخمر المحرمة وجهها, ولا تلبس القفازين دليل على أنها كانت تفعل ذلك في غير الإحرام فهو قول باطل وإلا فهل يعني أمر الله الحجاج بتعرية رؤوسهم في الإحرام دليل على أنهم كانوا يغطونها وجوباً في غير الإحرام؟ وهذا ليس من قول أهل الفقه والنظر, ولا أهل الظاهر والأثر.. وأما حديث (المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان...). رواه الترمذي (117) وابن خزيمة (1685) وابن حبان (5598، 5599). فهو حديث ضعيف لأن كل طرقه المرفوعة فيها قتادة - وهو مدلس من الطبقة الثالثة- وقد عنعن بها. لذلك رجّح ابن خزيمة في صحيحه (3|94) ألا يكون قتادة قد سمع هذا الحديث.

أولا : مذهب الحنفية

قال الطحاوي في "شرح معاني الآثار" (2|392): "أبيح للناس أن ينظروا إلى ما ليس بمحرّم عليهم من النساء إلى وجوههن وأكفهن، وحرم ذلك عليهم من أزواج النبي صلى الله عليه وسلم وهو قول أبي حنيفة وأبي يوسف ومحمد رحمهم الله تعالى". وذكره الشيباني في "المبسوط" (3|56) واختاره, وفي بدائع الصنائع 5-121, وكذلك السرخسي في كتابه المبسوط (10/152-153).

وقال الجصاص _وهو حنفي _ في (أحكام القرآن) ( 3/316 ): وقول ابن مسعود في أن (ما ظهر مِنْها) هو الثياب؛ لا معنى له؛ لأنه معلوم أنه ذكر الزينة، والمراد العضو الذي عليه الزينة، ألا ترى أن سائر ما تتزين به من الحلي والقُلب والخلخال والقلادة يجوز أن تظهرها للرجال إذا لم تكن هي لابستها، فعلمنا أن المراد مواضع الزينة، كما قال في نسق الآية بعد هذا: ( ولا يُبْدِيْن زِينتهُنّ إِلاّ لِبُعُولتِهِنّ)� � والمراد موضع الزينة، فتأويلها على الثياب لا معنى له، إذ كان مما يرى الثياب عليها دون شيء من بدنها كما يراها إذا لم تكن لابستها). وانتصر لهذا القول الزمخشري في "كشافهِ".

ثانيا: مذهب المالكية

جاء في "الموطأ" رواية يحيى (2|935): "سئل مالك: هل تأكل المرأة مع غير ذي محرم منها أو مع غلامها؟ فقال مالك: ليس بذلك بأس إذا كان ذلك على وجه ما يُعرفُ للمرأة أن تأكل معه من الرجال قال: وقد تأكل المرأة مع زوجها ومع غيره ممن يؤاكله".

قال الباجي في "المنتفى شرح الموطأ" (7|252): "يقتضي أن نظر الرجل إلى وجه المرأة وكفيها مباح لأن ذلك يبدو منها عند مؤاكلتها".

قال ابن القطان في النظر في أحكام النظر (ص143) بعد أن ذكر هذا النص عن مالك: "وهذا نص قوله. وفيه إباحة إبدائها وجهها وكفيها للأجنبي. إذ لا يتصور الأكل إلا هكذا. وقد أبقاه الباجي على ظاهره".

وفي كتاب "البيان والتحصيل" لابن رشد الجد عن مالك أنه سئل عما يظهر من وجه المرأة، فأدار عمامته تحت ذقنه وفوق حاجبيه معلناً بذلك جواز ظهور دائرة الوجه.... وكذلك في "المدونة" (2/221(ونقله ابن عبدالبر في "التمهيد" (15-111) وارتضاه.

وذكره القرطبي في تفسيره قال: قلت : هذا قول حسن، إلا أنه لما كان الغالب من الوجه والكفين ظهورهما عادة وعبادة.

Monday, September 26, 2016

பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கிவரும் பல ஊடகங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் முடக்கம்


தற்போது பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கிவரும் பல ஊடகங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் முடக்கப்பட்டு வருகின்றது.

இஸ்ரேலிய இராணுவம்  பலஸ்தீனில் நடத்துகின்ற கொடூரத் தாக்குதல்களையும் சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் அவை நடத்தும் வன்முறைகளை அந்த இலத்திரனியல் ஊடகங்கள் உலகிட்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறி   அந்த ஊடகங்கை ஹெக் செய்து அதை நடத்திய உரிமையாளர்களையும் சிறைப்பிடித்து வருவதாக அங்கு வரும் செய்திகள் கூறுகின்றன .

தகவல் :=  அப்துர் றஹ்மான் (( தூனிசியா )
By:- hafeesul haq( fathihi )

குறிப்பு :-  எனது முகநூல் மற்றும் எனது எனது இனையத்தில் முடியுமானவரை பலஸ்தீன் மற்றும் தற்கால நடப்புகள் சம்பந்தமா எழுதி வருகின்றேன் உங்களுடைய பூரன ஒத்துழைப்பை இதில்  நான் எதிர்பார்க்கின்றேன்

Sunday, September 25, 2016

Great thanks to Electronics Media and Print Media


எனது  மிகக் குறுகிய கால எழுத்துப் பணியில்
இலத்திரனியல்  ஊடகங்கள்  ஒரு எழுத்தாளர்  என்ற ஒரு அந்தஸ்தை எனக்குத் தந்துள்ளது  அல் ஹம்துலில்லாஹ். முதற்கண் நான் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். 

எனது  எழுத்துப் பணியில் ஆரம்ப கருத்தாவாக இருந்த "வன்னி எக்ஸ்பிரஸ் செயதி மற்றும் கல்குடா நேசன் போன்ற செய்தி நிறுவனங்களின்  பங்களிப்பை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. அதேபோல் இன்று நான் பத்திரிகைகள் மற்றும் இது போன்ற இலத்திரனியல் ஊடகங்களில் எழுதுவதற்குக் காரணமாக இருந்த எனது மதிப்புக்குரிய பணிப்பாளர் அக்றம் அபூபக்கர் ( நளீமி ) எனது ஆசிரியர்கள் , எனது வகுப்பு நண்பர்கள் , எனது இரத்த உறவுகள் மற்றும் எனது ஊர் ஆர்வலர்கள் போன்றோர்களை நான் ஒரு போதும் மறக்க முடியாது. 
இவர்களின் தூண்டுதலின் பிரகாரம்தான் இன்று நான்  எழுதிவருகின்றேன்  அந்தவகையில் இவர்களுக்கு எனது நன்றிகள். 

அதேபோல் எனது குறுகிய கால எழுத்துப் பணியில் இன்று பிரபல்யமாகப் பேசப் படுகின்றேன் என்றால் அதற்கு மிகப் பிரதானமான காரணம் இது போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் ( Electronic_Media ) இவர்களின் பாரிய  பங்களிப்பை என்னால் அளவிட முடியாது. மேலும்  உங்களின் ஒத்துழைப்பையும் என்னால் அளவிட முடியாது. 

எனவே எனக்கும் எனது  கருத்துக்களுக்கும் ஆதரவு வழங்கிய உளங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 
Jzakllah 

((இன்னும் பெயர் குறிப்பிடாத அதிகமான ஊடகங்கள் உள்ளது இதில் பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும் ))) 

Hafeesul haq( Fathihi )
varipathanchenai 

Friday, September 23, 2016

சிரியாவுக்கான மனித உரிமை ஆணைக் குழுவின் புதிய அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான மனித உரிமை ஆணைக் குழுவின் புள்ளி விபரவியலின் கணிப்பீட்டின்படி "சிரியாவின் உள்நாட்டு யூத்தம் ஆரம்பமாகி 2014  வரைக்கும் ( 2011_ 2014 ) சுமார் இரண்டு இலச்சத்தி இருபதாயிரம் பேர் சிரியாவாசிகள்  கொடுங் போலன் பஷார் அல் அஸாத்தால் ஷஹீதாக்கப்பட்டதாகவும் கடந்த 2014 இல் மாத்திரம் 76.000 பேர் கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்டதாகவும் அவை ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளது .

கடந்த 2015 ஆண்டு மாத்திரம் 4.3 மில்லியன் சிரியாவாசிகள்  சிரியாவில் இருந்து தனது அயல் நாடுகளுக்குப் புலம் பேர்ந்ததாகவும்  சிரியாவில் மாத்திரம் 13.2 மில்லியன் சிரியாவாசிகள் வெளிநாட்டு உதவிகளில் தங்கி இருப்பதாகவும் அவை ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளது .  இது போதாமைக்கு 2.7 மில்லியன் சிரியா சிறுவர்கள் சிரியாவுக்குள்ளையும் வெளியிலும்  பாடசாலைக் கல்வியை விட்டு  தூரமாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை  சில அறிக்கைகளை  ஊடகங்களில்  வெளியிட்டுள்ளது . அவை மேலும் கூறுகையில் சிரியாவில் ஆரம்ப கல்வியை விட்டு  2.1 மில்லியன் சிறுவர்கள் 5 தொடக்கம் 17 வயது வரையானவர்கள் எனவும்     அவை அறிக்கை வெளியிட்டுள்ளது .

இதுதான் சிரியாவின் இன்றைய நில

Hafeedul haq 

Varipathanchenai 

Thursday, September 22, 2016

காஸாமீது இஸ்ரேல் நடத்திய பொருளாதார முற்றுகைகள்

கடந்த காலங்களில் காஸாமீது இஸ்ரேல் நடத்திய பொருளாதார  முற்றுகையால்  அங்கு வாழும் மக்கள் பட்ட  கஷ்டம் ஒன்றல்ல இரண்டல்ல . இதை வாசிக்கின்ற போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .

01 ) 1929 - முதல் காஸாவி யூதர்களின்  குடியேறம்  ஆரம்பிக்கப்பட்டது  .

02 ) காஸா முதலாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது . ( Leaque of Nation)

03) 1948- 1967  எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது .

04) 1967 இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டது .

05) 2005 -2007  பலஸ்தீன் அதிகார சபையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது . இது ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரம் இடம்பெற்றது .

06) 2007 ஜூனில் அல் பதாஹ் இயக்கத்திற்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் தூண்டிவிடப்பட்டன .

07) 2007 ஜூன் 14 - அல் பதாஹ் இயக்கம் காஸாவிலிருந்து வரட்டியடிக்கப்பட்டு காஸா முழுவதும் ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது .

08) 2008 ஜனவரி காஸாவின் எல்லைப்புறங்கள் முற்றாக மூடப்பட்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது .

09) 2008 ஜனவரி 19 காஸாவுக்கான மின்சார விநியோகத்தில் 80% மான வற்றை இஸ்ரேல் துண்டித்து காஸாமீது விமானத் தாக்குதல்களை நடாத்த ஆரம்பித்தது .

10) 2008 மார்ச் காஸாவிற்கான எரிபொருளை முற்றாகத் துண்டித்து , தரைவழியாகவும் ஆகாயவழியாகவும் தாக்குதல் நடத்தியது .

11) 2008 டிசம்பர் 27 காஸாமீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி , நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தது .

12) 2009 ஜனவரி 3ல்  இஸ்ரேல் யுத்த தாங்கிகளுடன் காஸாவிற்குல்  ஊடுருவி   அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது .

13) 2009 ஜனவரி 7ல் அமெரிக்க காங்கிரஸ் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தியது .

14) 2012 இல் இஸ்ரேல்  இரண்டாவது முறை முற்றுகையிட்டு  காஸாமீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது .

15) 2014 ஜூலை 08 ல் இஸ்ரேல் மூன்றாவது முறையாக கடும் தாக்குதல்களை நடத்தியது . இதனால் 2200 பேர் கொல்லப்பட்டார்கள் .

எனவே இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களை உலகிற்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டும் . காஸா மக்களுக்கு விடிவுக்கா கைகோர்ப்போம் .


Hafeesul haq

Varipathanchenai 

Wednesday, September 21, 2016

அல் முறாபிதா அல் முகத்தசியா

இவர் ஹனாதி ஹல்வானி  பலஸ்தீனில் மஸ்ஜிதுல் அக்ஸாவை யூதர்களிடமிருந்து மீட்கப் போராடும் பெண்களில் ஒருத்தர் .
( அல் முறாபிதா அல் முகத்தசியா )

இதுதான் பலஸ்தீனப் பெண்களின் துணிவு

அல் முறாபிதா அல் முகத்தசீயா

இவருடைய பெயர் கதீஜா பின் குவைஸ்
இப்போது பலஸ்தீனில் மஸ்ஜிதுல் அக்ஸாவை யூதர்களிடம் இருந்து மீட்க்கப் போராடும் வீரப் பெண்களில் ஒருவர் (அல் முறாபிதா அல் முகத்தசியா)

இறைவன் இவருக்கு அருள் புரிவானாக !

Sunday, September 18, 2016

நான் கண்ட சிறந்தோர் ஆளுமை Mr. விமலன்

இவர் அக்கறப்பற்று #தம்பட்ட எனும்  பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் கவிஞர் , பாடகர் சிந்தனையாளர்.  பிரவியில் #கண்பார்வையற்ற இவர் இலங்கையின் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் BA பட்டப்படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .


இவர் அண்மையில்  வசந்தம் தொலைக்காட்சியில் முகமூடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வி :-  கண் பார்வையற்ற உங்களுக்கு  கணவுகள்  எப்படி இருக்கும் ? என்று ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது .

பதில் :- உண்மையில் கண் பார்வையற்றவர்களுக்கும் கணவுகள் தோன்றும் . எப்படி என்றால் கண் பார்வையுள்ளவர்களுக்கு video வாகத் தோன்றும். கண் பார்வை இல்லாதவர்களுக்கு odio வாகத் தோன்றும் என்று விசித்திரமாக பதிலளித்தார்.

இவருக்கு கண் பார்வை மாத்திரம்தான் இல்லை ஆனால்  இறைவன் இவருக்கு அதிக ஆற்றலைக் கொடுத்துள்ளான். இவருடைய சிறப்பு என்னவென்றால் அதிக மனன சக்தி உடையவர். குறுகிய நேரத்தில் கவிதை எழுதக் கூடியவர். சிறப்பாகவும் பாடக் கூடியவர். தற்போது #இவர்_இஸ்லாத்தைப்  படித்துக் கொண்டு இருக்கின்றார். இவருக்கு நீங்களும் பிரார்த்தனை புரியுங்கள்.

தொகுப்பு :- Hafeesul haq
varipathanchenai

Friday, September 16, 2016

சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை


Hafeesul haq ( Fathihi )

சிரியா தென் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ளத ஒரு நாடு. இது வடக்கில் துருக்கியையும், மேற்கில் லெபனானையும், மத்திய தரைக் கடலையும் , தெற்கில் பலஸ்தீனையும் ஜோர்தானையும், கிழக்கில் ஈரானையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது .
இதனுடைய பரப்பளவாக 185 சதுர கி.மீ பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் மத்திய தரைக் கடலோரத்தின் சிறிய பகுதியையும் மத்திய தரைக் கடலிலுள்ள எர்வத் எனப்படும் சிறிய தீவையும் கோலான் குன்றுகளையும் கொண்டுள்ளது. மேலும் ஜபலுஷ் ஷெய்க் என்ற நாட்டின் மிக உயரமான மலையையும் கொண்டுள்ளது . இதன் உத்தியோக பூர்வ மொழியாக அரபு , ஆங்கிலம் , பிரெஞ்சு மற்றும் குர்தி போன்ற மொழிகள் உள்ளன. இதன் தலை நகராக டமஸ்கஸ் ( Damascus ) காணப்படுகிறது

2005 ஜூலை மாதத்தில் சனத்தொகை கணக்கீட்டின் படி 19.043.00  மக்கள் தொகையைக் கொண்டுள்ளது . அதன் மொத்த தேசிய உற்பத்தி $71.74 பி வும் அதன் தலா வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 5.348 ( 10 ) வீதம் கொண்டுள்ளது .

சிரியாவின் மக்கள் தொகையில் 74%  பெரும்பாண்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் களையும் , 16 % ஷீஆ முஸ்லிம்களையும் , 10 % கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது .

சிரியாவைப் பொறுத்தவரை இது மனித வரலாற்றில் மிகவும் பழமை வாய்ந்த ஒரு ஒரு பூமி.   கண்ணானியர்கள் ,  செம்மித்தியர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்து வந்த ஒரு நாடு. இஸ்லாமிய வரலாற்றில் ஷாம் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான பிரந்தியத்தின் ஒரு பகுதி ( பலஸ்தீன் ,ஜோர்தான் ,லெபனான் , சிரியா என்பன  ஷாம் பிரதேசத்தில் உள்ளடங்கும்  நாடுகள் ) இதன் சிறப்புகள் பற்றி ஏறாளமான ஹதீஸ்கள் நபிஸல் அவர்களால் முன்மொழியப் பட்டுள்ளது .

இங்கு  கி.மு. 30 ஆம் ஆண்டில் செம்மித்தியர்களின் ஆட்சியின் கீழும் பின்னர் ஆர்மோனியர்கள் , எகிப்தியர்கள், அசீரியர்கள், பபிலோனியர்கள் , பாரசீகர்கள் என்று பல்வேறு பிரிவினர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர் . கி.மு. 64 இல் மஹா அலெக்ஸாந்தரின் கட்டுப்பாட்டில் சிரியா இருந்தது. சிரிய வரலாற்று  இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது கலீபா அபூபக்கர் ( றழி ) அவர்கள் சிரியாவைக் கைப்பற்றுவதனூடாக இஸ்லாம் பல நாடுகளுக்கு அறிமுகமாகும் என்ற நோக்கில் நாற்பெரும் இஸ்லாமியப் படையை ஹிஜ்ரி 12 இல் சிரியாவுக்கு அனுப்பப்பட்டது .

யர்மூக் நதிக்கரை அருகில் ஜவ்லான் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் ரோமர்களுக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. இஸ்லாமியப் படையின் தளபதியாக  காலித் பின் வலீத் ( றழி )  தலைமைவகித்தார். தொடர்க்கத்தில் சிரிவின் தென் பகுதி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தது. தொடர்ந்தும் டமஸ்கஸும் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு சிரியா முழுவதும் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ( றழி ) தலைமையில் கைப்பற்றப் பட்டது. சிரியாவின் பெரும்பாலான நகரங்களான ஹிம்ஸ், ஹுமா போன்ற நகரங்களும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. சிரியாவின் மாகாண அதிபராக முஆவியா ( றழி ) நீண்ட காலம் பதவி வகித்தார். இவருடைய ஆட்சியில் இருந்து உமையா வம்ச ஆட்சி தொடங்கியது சும்மார் 90 வருடங்களாக டமஸ்கஸ் தலைநகராக இருந்தது.

பின்னர் கி.பி. 878 இல் எகிப்திய ஆட்சியாளர் அஹ்மத் பின் துலூன் என்பவர் சிரியாவைக் கைப்பற்றினார். கி.பி. 969 முதல் 1027 வரை எகிப்திய பாதிமிக்களின் ஆட்சி தொடர்ந்தது. பின்னர் சல்ஜூக்கியர்கள் கைவசமானது. சிறிது காலம் கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் சிலுவை யுத்தத்தின்போது சிரியாவின் சில பகுதிகளை முஸ்லிம் படைகள் மீட்டது. இதற்கு நூருத்தீன் ஸன்கி தலைமை வகித்தார்.  பின்னர் ஸலாஹுத்தீன் ஐயூபி அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1193 இல் ஸலாஹுத்தீன் ஐயூபின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் கிறிஸ்தவர்கள் தன்வசமாக்க முயன்றார்கள் .

பின்னர் 1517 இல் துருக்கிய மன்னர் முதலாம் ஸலீம் சிரியாவை உஸ்மானிய சாம்ராஜியத்தோடு இணைத்தார். இவ்வாறு மூன்று நூற்றாண்டுகள் சிரியா உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் இருந்தது. முதலாம் உலகப் போரில் துருக்கி பலவீனப் படுத்தப் பட்டதால் அதன் கீழ் இருந்த பிராந்தியங்கள் காலனித்துவ சக்திகளால் துண்டாடப் பட்டன.  இதற்கமைவாக சிரியா பிரான்ஸின் காலனித்துவ நாடாக மாறியது. 1941 இல் பிரான்ஸிடமிருந்து சிரியா அரசியல் சுதந்திரம் பெற்றது. 1945 இல் தேர்தல் மூலம் அங்கு ஒர் தேசிய அரசாங்கம் நிறுவப் பட்டது . இதன் ஜனாதிபதியாக சுக்ரி குவைலித் தெரிவானார். 1958 இல் எகிப்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு நாடுகளும் தம்மை ஐக்கிய அரபுக் குடியரசு என அறிமுகம் செய்தன . 1961 இல் இராணுவ சபை உருவாக்கப்பட்டு பின்னர் எகிப்திலிருந்து சிரியா பிரிக்கப்பட்து .

பின்னர் சிரியாவின் ஜனாதிபதியாக நாஸிம் அல் குத்ஸி ஜனாதிபதியகத் தெரிவு செய்யப்பட்டார். 1963 மார்ச் 8 இல் ஜனாதிபதி   நாஸிம் அல் குத்ஸியின் அரசாங்கம் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் திட்டமிட்டு  பதவி கவிழ்க்கப்பட்டது. அப்போதைய இராணுவத் தளபதியாக ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் என்பவரே பிரதான சூத்திரதாரியாக இருந்தார். பின்னர் ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் புரட்சி மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தார். இவர் சுமார்  2000 ஆண்டு வரையும் சிரியாவின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக இருந்தார். 2000 இல் அஸாதின் மரணத்தைத் தொடர்ந்து அவனது மகன் கொடுங் கோலன் பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு  வந்தான் .

இராணுவப் புரட்சி மூலம் பதவியைக் கைப்பற்றிய அஸாத் சோசலிஸ கொள்கையைக் கடைப்பிடித்தார். மேலும் அவரது பாத் கட்சியும் குடும்பமும் அதிக அதிகரத்தில் ஈடுபடும் வகையில் சிரியாவின் அரசியல் அமைப்பை மாற்றிக் கொண்டார். அன்றிலிருந்து இன்னு வரைக்கும் அந்தக் கொள்கை நீடிக்கின்றது. இதில் 60 %மான பாராளுமன்ற ஆசனங்கள் அவருடைய பாத் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. 40%மான ஆசனங்களுக்குத்தான் நாட்டில் தேர்தல் நடைபெறும் . அதில் ஊழல் நிறம்பியதாகவும் கானப்படும். அதேபோல் இவர் ஷீஆ முஸ்லிம்களில் பனு நூசைரி எனும் பிரிவைச் சேர்ந்தவர். இது ஷீஆக் கொள்கையில் மிகவும் கழிபட்ட கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறு பஷாரின் 53 வருட குடும்ப ஆட்சியின்  கொடுமைகளையும்  ஊழல்களையும்  சகிக்க முடியாத சிரியா மக்கள் பஷாரின் ஊழல் நிறைந்த  குடும்ப ஆட்சிக்கு எதிராக   சிரியா மக்கள் கொந்தழிக்க ஆரம்பித்தார்கள்  அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 53  வருடங்கள்  16 % வீதம் கொண்ட ஷீஆக்கள் 76 %  வீதம் கொண்ட சுன்னி முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்.

இப்படி அடக்கி ஆழப்பட்ட மக்கள் ஊழல் நிறைந்த  பஷாரின் ஆட்சிக்கு எதிராக கொந்தழித்தெழுந்தபோது அது  2011 பெப்ரவரி 17  அன்று உள்நாட்டு போராக மாறியது .
அந்நாட்டின்  அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை உக்கிரமடைந்து வருகின்றது

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு  முதல்  இன்று வரை  சுமார் 3 இலட்ச்சத்திற்கும் அதிகமானோர்   உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக  நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.

பஷார் அல் அஸாத்தின் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி   மாலிக்கியின்  அரசங்கமும் , ரஷ்யாவின் அதிபர் புட்டினும் , லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும்  தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது   . வேடிக்கை என்ன வென்றால் ஈரான் 150 கோடி சுன்னி  முஸ்லிம்களை  ஷீஆக்களாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது .

இன்று சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 15 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும்  துர்க்கி , கனடா , ஜேர்மன் , பிரான்ஸ்  போன்ற  நாடுகளில் அகதிகளாக அடிப்படை வசதி இன்றி சொந்தங்களை இழந்தும்  வாழ்கிறார்கள் .

இன்று சிரியா isis  அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும் . சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும் , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து  அழிக்கப்பட்டு வருகின்றது

இன்று  நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.%  சதவீதம் அழிந்து போய்விட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான மனித உரிமை ஆணைக் குழுவின் புள்ளி விபரவியலின் கணிப்பின் படி "சிரியாவின் உள்நாட்டு யூத்தம் ஆரம்பமாகி 2014  வரைக்கும் ( 2011_ 2014 ) சுமார் இரண்டு இலச்சத்தி இருபதாயிரம் பேர் சிரியாவாசிகள்  கொடுங் போலன் பஷார் அல் அஸாத்தால் ஷஹீதாக்கப்பட்டதாகவும் கடந்த 2014 இல் மாத்திரம் 76.000 பேர் கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்டதாகவும் அவை ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளது .

கடந்த 2015 ஆண்டு மாத்திரம் 4.3 மில்லியன் சிரியாவாசிகள்  சிரியாவில் இருந்து தனது அயல் நாடுகளுக்குப் புலம் பேர்ந்ததாகவும்  சிரியாவில் மாத்திரம் 13.2 மில்லியன் சிரியாவாசிகள் வெளிநாட்டு உதவிகளில் தங்கி இருப்பதாகவும் அவை ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளது .  இது போதாமைக்கு 2.7 மில்லியன் சிரியா சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு தூரமாக்கப்பட்டுள்ளதாக இன்னும் சில அறிக்கைகள் சிரியா ஊடகங்களினால் வெளியாகியுள்ளது .

இன்னும் இரண்டு வருடங்களின் பின் சிரியா என்ற  நாடு இருந்துள்ளதா என்று சொல்வது எம்மால் கடினமாக உள்ளது .
இதுதான் இன்றை சிரியாவின் நிலை
எனவே எமது சிரியா உடன் பிறப்புக்காகப் பிரார்திப்போம்.

இதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

Tuesday, September 13, 2016

சிரியா முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக


இறைவா ! 
பஷாருக்கு  அபூலகபைவிட கேவலமான மரணத்தைக் கொடுப்பாயாக 

* பெருநாளைக் கொண்டாடக் கூட #உரிமை இல்லை

*இதுதானா மனித# நியதி ??

*எங்கே மனித உரிமை ??

*எங்கே ஐக்கிய நாடுகள் சபை ???

* எங்கே முஸ்லிம் நாடுகள் ?

இறைவன் போதுமானவன்

இதை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள்

Thursday, September 1, 2016

Asslamu alikum my dear brothers and sisters ( கருத்துக் கணிப்பு )

இலங்கையில்  இயங்கி வரும்  தமிழ் ஊடகங்களைப்  பொறுத்தவரை இவைகள் தற்கால  முஸ்லிம் உலகு சம்பந்தமாக எழுதும் வீதம் குறைவாகத்தான் உள்ளது.  இது பத்திரிகைகள் மாத்திரமல்ல இலத்திரனியல் ஊடகங்களும் கூட   ஐரோப்பிய தென்னிந்திய  சினிமாக்களையும் அதில் வரும் நடிகைகளையும் வர்ணிக்கும்   எமது இலங்கை ஊடகங்கள்  சோமலியாவிலும் இந்தியாவிலும் சிரியாவிலும் வறுமையால் உண்பதற்கு உணவின்றி பரிதாபமாக உயிரிழக்கும்  சோகக் காட்சிகளை உலகுக்கு காட்டுவதில்லை இதை முஸ்லிம் என்ற வகையில் நாம்  ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்

அந்தவகையில் இலங்கை ஊடகங்களால் சொல்லப்படாத தற்கால முஸ்லிம்  உலகு சம்பந்தமாக இன்று   சமூக வலைத்தளங்கில் என்னால் முடியுமான வரை   எழுதி வருகின்றேன் குறிப்பாக #சிரியா_பலஸ்தீன்_மற்றும் துருக்கி போன்ற விடையங்கள் 

இந்த விடையம் பெரும்பாலும் எந்த ஊடகங்களிலும்  பேசப்படாத  பகுதி என்ற படியால் இவை  எமது சமூகத்தில்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
#அல்_ஹம்துலில்லாஹ்

இது குறித்து உங்களுடைய கருத்துக்களை  கூறினால் சிறப்பாக இருக்கும்

Jzakllah