Hafeesul haq ( Fathihi )
சிரியா தென் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ளத ஒரு நாடு. இது வடக்கில் துருக்கியையும், மேற்கில் லெபனானையும், மத்திய தரைக் கடலையும் , தெற்கில் பலஸ்தீனையும் ஜோர்தானையும், கிழக்கில் ஈரானையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது .
இதனுடைய பரப்பளவாக 185 சதுர கி.மீ பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் மத்திய தரைக் கடலோரத்தின் சிறிய பகுதியையும் மத்திய தரைக் கடலிலுள்ள எர்வத் எனப்படும் சிறிய தீவையும் கோலான் குன்றுகளையும் கொண்டுள்ளது. மேலும் ஜபலுஷ் ஷெய்க் என்ற நாட்டின் மிக உயரமான மலையையும் கொண்டுள்ளது . இதன் உத்தியோக பூர்வ மொழியாக அரபு , ஆங்கிலம் , பிரெஞ்சு மற்றும் குர்தி போன்ற மொழிகள் உள்ளன. இதன் தலை நகராக டமஸ்கஸ் ( Damascus ) காணப்படுகிறது
2005 ஜூலை மாதத்தில் சனத்தொகை கணக்கீட்டின் படி 19.043.00 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது . அதன் மொத்த தேசிய உற்பத்தி $71.74 பி வும் அதன் தலா வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 5.348 ( 10 ) வீதம் கொண்டுள்ளது .
சிரியாவின் மக்கள் தொகையில் 74% பெரும்பாண்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் களையும் , 16 % ஷீஆ முஸ்லிம்களையும் , 10 % கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது .
சிரியாவைப் பொறுத்தவரை இது மனித வரலாற்றில் மிகவும் பழமை வாய்ந்த ஒரு ஒரு பூமி. கண்ணானியர்கள் , செம்மித்தியர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்து வந்த ஒரு நாடு. இஸ்லாமிய வரலாற்றில் ஷாம் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான பிரந்தியத்தின் ஒரு பகுதி ( பலஸ்தீன் ,ஜோர்தான் ,லெபனான் , சிரியா என்பன ஷாம் பிரதேசத்தில் உள்ளடங்கும் நாடுகள் ) இதன் சிறப்புகள் பற்றி ஏறாளமான ஹதீஸ்கள் நபிஸல் அவர்களால் முன்மொழியப் பட்டுள்ளது .
இங்கு கி.மு. 30 ஆம் ஆண்டில் செம்மித்தியர்களின் ஆட்சியின் கீழும் பின்னர் ஆர்மோனியர்கள் , எகிப்தியர்கள், அசீரியர்கள், பபிலோனியர்கள் , பாரசீகர்கள் என்று பல்வேறு பிரிவினர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர் . கி.மு. 64 இல் மஹா அலெக்ஸாந்தரின் கட்டுப்பாட்டில் சிரியா இருந்தது. சிரிய வரலாற்று இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது கலீபா அபூபக்கர் ( றழி ) அவர்கள் சிரியாவைக் கைப்பற்றுவதனூடாக இஸ்லாம் பல நாடுகளுக்கு அறிமுகமாகும் என்ற நோக்கில் நாற்பெரும் இஸ்லாமியப் படையை ஹிஜ்ரி 12 இல் சிரியாவுக்கு அனுப்பப்பட்டது .
யர்மூக் நதிக்கரை அருகில் ஜவ்லான் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் ரோமர்களுக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. இஸ்லாமியப் படையின் தளபதியாக காலித் பின் வலீத் ( றழி ) தலைமைவகித்தார். தொடர்க்கத்தில் சிரிவின் தென் பகுதி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தது. தொடர்ந்தும் டமஸ்கஸும் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு சிரியா முழுவதும் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ( றழி ) தலைமையில் கைப்பற்றப் பட்டது. சிரியாவின் பெரும்பாலான நகரங்களான ஹிம்ஸ், ஹுமா போன்ற நகரங்களும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. சிரியாவின் மாகாண அதிபராக முஆவியா ( றழி ) நீண்ட காலம் பதவி வகித்தார். இவருடைய ஆட்சியில் இருந்து உமையா வம்ச ஆட்சி தொடங்கியது சும்மார் 90 வருடங்களாக டமஸ்கஸ் தலைநகராக இருந்தது.
பின்னர் கி.பி. 878 இல் எகிப்திய ஆட்சியாளர் அஹ்மத் பின் துலூன் என்பவர் சிரியாவைக் கைப்பற்றினார். கி.பி. 969 முதல் 1027 வரை எகிப்திய பாதிமிக்களின் ஆட்சி தொடர்ந்தது. பின்னர் சல்ஜூக்கியர்கள் கைவசமானது. சிறிது காலம் கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் சிலுவை யுத்தத்தின்போது சிரியாவின் சில பகுதிகளை முஸ்லிம் படைகள் மீட்டது. இதற்கு நூருத்தீன் ஸன்கி தலைமை வகித்தார். பின்னர் ஸலாஹுத்தீன் ஐயூபி அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1193 இல் ஸலாஹுத்தீன் ஐயூபின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் கிறிஸ்தவர்கள் தன்வசமாக்க முயன்றார்கள் .
பின்னர் 1517 இல் துருக்கிய மன்னர் முதலாம் ஸலீம் சிரியாவை உஸ்மானிய சாம்ராஜியத்தோடு இணைத்தார். இவ்வாறு மூன்று நூற்றாண்டுகள் சிரியா உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் இருந்தது. முதலாம் உலகப் போரில் துருக்கி பலவீனப் படுத்தப் பட்டதால் அதன் கீழ் இருந்த பிராந்தியங்கள் காலனித்துவ சக்திகளால் துண்டாடப் பட்டன. இதற்கமைவாக சிரியா பிரான்ஸின் காலனித்துவ நாடாக மாறியது. 1941 இல் பிரான்ஸிடமிருந்து சிரியா அரசியல் சுதந்திரம் பெற்றது. 1945 இல் தேர்தல் மூலம் அங்கு ஒர் தேசிய அரசாங்கம் நிறுவப் பட்டது . இதன் ஜனாதிபதியாக சுக்ரி குவைலித் தெரிவானார். 1958 இல் எகிப்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு நாடுகளும் தம்மை ஐக்கிய அரபுக் குடியரசு என அறிமுகம் செய்தன . 1961 இல் இராணுவ சபை உருவாக்கப்பட்டு பின்னர் எகிப்திலிருந்து சிரியா பிரிக்கப்பட்து .
பின்னர் சிரியாவின் ஜனாதிபதியாக நாஸிம் அல் குத்ஸி ஜனாதிபதியகத் தெரிவு செய்யப்பட்டார். 1963 மார்ச் 8 இல் ஜனாதிபதி நாஸிம் அல் குத்ஸியின் அரசாங்கம் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் திட்டமிட்டு பதவி கவிழ்க்கப்பட்டது. அப்போதைய இராணுவத் தளபதியாக ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் என்பவரே பிரதான சூத்திரதாரியாக இருந்தார். பின்னர் ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் புரட்சி மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தார். இவர் சுமார் 2000 ஆண்டு வரையும் சிரியாவின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக இருந்தார். 2000 இல் அஸாதின் மரணத்தைத் தொடர்ந்து அவனது மகன் கொடுங் கோலன் பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு வந்தான் .
இராணுவப் புரட்சி மூலம் பதவியைக் கைப்பற்றிய அஸாத் சோசலிஸ கொள்கையைக் கடைப்பிடித்தார். மேலும் அவரது பாத் கட்சியும் குடும்பமும் அதிக அதிகரத்தில் ஈடுபடும் வகையில் சிரியாவின் அரசியல் அமைப்பை மாற்றிக் கொண்டார். அன்றிலிருந்து இன்னு வரைக்கும் அந்தக் கொள்கை நீடிக்கின்றது. இதில் 60 %மான பாராளுமன்ற ஆசனங்கள் அவருடைய பாத் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. 40%மான ஆசனங்களுக்குத்தான் நாட்டில் தேர்தல் நடைபெறும் . அதில் ஊழல் நிறம்பியதாகவும் கானப்படும். அதேபோல் இவர் ஷீஆ முஸ்லிம்களில் பனு நூசைரி எனும் பிரிவைச் சேர்ந்தவர். இது ஷீஆக் கொள்கையில் மிகவும் கழிபட்ட கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு பஷாரின் 53 வருட குடும்ப ஆட்சியின் கொடுமைகளையும் ஊழல்களையும் சகிக்க முடியாத சிரியா மக்கள் பஷாரின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு எதிராக சிரியா மக்கள் கொந்தழிக்க ஆரம்பித்தார்கள் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 53 வருடங்கள் 16 % வீதம் கொண்ட ஷீஆக்கள் 76 % வீதம் கொண்ட சுன்னி முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்.
இப்படி அடக்கி ஆழப்பட்ட மக்கள் ஊழல் நிறைந்த பஷாரின் ஆட்சிக்கு எதிராக கொந்தழித்தெழுந்தபோது அது 2011 பெப்ரவரி 17 அன்று உள்நாட்டு போராக மாறியது .
அந்நாட்டின் அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை உக்கிரமடைந்து வருகின்றது
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 3 இலட்ச்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.
பஷார் அல் அஸாத்தின் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி மாலிக்கியின் அரசங்கமும் , ரஷ்யாவின் அதிபர் புட்டினும் , லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது . வேடிக்கை என்ன வென்றால் ஈரான் 150 கோடி சுன்னி முஸ்லிம்களை ஷீஆக்களாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது .
இன்று சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 15 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் துர்க்கி , கனடா , ஜேர்மன் , பிரான்ஸ் போன்ற நாடுகளில் அகதிகளாக அடிப்படை வசதி இன்றி சொந்தங்களை இழந்தும் வாழ்கிறார்கள் .
இன்று சிரியா isis அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும் . சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும் , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து அழிக்கப்பட்டு வருகின்றது
இன்று நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.% சதவீதம் அழிந்து போய்விட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான மனித உரிமை ஆணைக் குழுவின் புள்ளி விபரவியலின் கணிப்பின் படி "சிரியாவின் உள்நாட்டு யூத்தம் ஆரம்பமாகி 2014 வரைக்கும் ( 2011_ 2014 ) சுமார் இரண்டு இலச்சத்தி இருபதாயிரம் பேர் சிரியாவாசிகள் கொடுங் போலன் பஷார் அல் அஸாத்தால் ஷஹீதாக்கப்பட்டதாகவும் கடந்த 2014 இல் மாத்திரம் 76.000 பேர் கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்டதாகவும் அவை ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளது .
கடந்த 2015 ஆண்டு மாத்திரம் 4.3 மில்லியன் சிரியாவாசிகள் சிரியாவில் இருந்து தனது அயல் நாடுகளுக்குப் புலம் பேர்ந்ததாகவும் சிரியாவில் மாத்திரம் 13.2 மில்லியன் சிரியாவாசிகள் வெளிநாட்டு உதவிகளில் தங்கி இருப்பதாகவும் அவை ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளது . இது போதாமைக்கு 2.7 மில்லியன் சிரியா சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு தூரமாக்கப்பட்டுள்ளதாக இன்னும் சில அறிக்கைகள் சிரியா ஊடகங்களினால் வெளியாகியுள்ளது .
இன்னும் இரண்டு வருடங்களின் பின் சிரியா என்ற நாடு இருந்துள்ளதா என்று சொல்வது எம்மால் கடினமாக உள்ளது .
இதுதான் இன்றை சிரியாவின் நிலை
எனவே எமது சிரியா உடன் பிறப்புக்காகப் பிரார்திப்போம்.
இதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் .
ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை
ISIS உருவான வரலாறு http://hafeesu.blogspot.com/2016/07/isis.html
ReplyDeleteயார் இந்த ISIS ? http://hafeesu.blogspot.com/2015/07/isis.html
ISIS அமைப்பின் தீவிர செயற்பாட்டினால் இஸ்லாமிய உலகு எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினை என்ன ? http://hafeesu.blogspot.com/2016/01/isis.html
Hafeesul haq
varipathanchenai
2005 ஜூலை மாதத்தில் சனத்தொகை கணக்கீட்டின் படி 19.043.00 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது
ReplyDeletePlease confirm the Population of Syria in 2005