Friday, November 4, 2016

அம்பாறை மாவட்டத்தில் விருச்சமடையும் பெளத்த இனவாதம் .

A.M.Hafeesul haq
Varipathanchenai

இன்று இலங்கையைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தின் அம்மாறை மாவட்டதிலையே  அதிகமான முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றார்கள். இவற்றைப் சகித்துக் கொள்ள முடியாத பெளத்த இனவாதிகள் சர்வதேச ரீதியிலும் தேசியரீதியிலும் அரசியல் முன்னெடுப்புக்களையும் இனவாதக் கருத்துக்களையும் மேற்கொண்டுவருவதை எம்மால் அவதானிக்க முடியும் . இன்று  கிழக்கு மாகாணம் மூன்று  நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட முறை முற்றிலும் இனவாதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவை .

இது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு  செல்வதைக் குறைப்பதற்கான முதலாவது இனவாதமாகும்.  1978 ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியால்  விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது . இது ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில்  கிழக்கு மாகாணம் அம்பாறை ,  மட்டக்களப்பு ,  திருமலை என்று  மூன்று நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது .

அதேபோல் திருமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி ,  மூதூர் தேர்தல்தொகுதி,  #சேருவலை தேர்தல்தொகுதி, என்று மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டமை. மேலும்   மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி , கல்குடா தேர்தல் தொகுதி , பட்டிருப்பு தேர்தல் தொகுதி என்று மூன்று தொகுதிகளாப் பிரிக்கப்பட்டமை. அத்துடன்  அம்பாறை மாவட்டத்தில் , அம்பாறைத்தேர்தல் தொகுதி , சம்மாந்துறை தேர்தல் தொகுதி, கல்முனை தேர்தல் தொகுதி, பொத்துவில் தேர்தல் தொகுதி என்று நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டமை.

இதில் #அம்பாறையை நிர்வாக மாவட்டமாக எடுக்கப்பட்டமையும்  அதில் கட்டியாக வாழ்ந்த முஸ்லிம்களின் விகிதாசாரத்தைக் கலைத்து சிங்களவர்களையும் உள்வாங்க வேண்டும் என்பதற்காக #அம்பாறை தேர்தல் தொகுதியை உருவாக்கியமையும்  இனவாதத்தின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுகின்றது . அதேபோல் திருமலை மாவட்த்தில் உருவாக்கப்பட்ட #சேருவலை தேர்தல் தொகுதி இதுவும் சிங்களவர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை  உள்வாங்கும் இனவாதத்  திட்டமாகும்

☞ கடந்த 2015 இல் அம்மாறை மாவட்டத்தில் தெரிவான் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் .

முஸ்லிம்கள்
==============
1 ) பைசல்காசிம்
2) எச். எம். எம். ஹரீஸ்
3) மன்ஸூர்

பெளத்தர்கள்
================
1) தயா கமகே
2) சிராணி
3) திஸ்ஸ நாயகா

தமிழர்
===========

1) கோடிஸ்வரன்

☞ முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் 3 முஸ்லிம்களும் 3 பெளத்தர்களும் ஒரு தமிழரும்  பாராளுமன்றத்திற்குத் தெரிவானது எப்படியான  ஒரு திட்டம் ?  இதுதான் கிழக்கு  முஸ்லிம்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில்  ஜே . ஆர். ஜவர்த்னா செய்த முதலாவது இனவாதம்.

அதேபோல் இன்று வடமாகாணத்தில் 5 நிறுவாக மாவட்டங்கள்  உள்ளது இதில்  மூன்று அரசாங்க அதிபர்கள் தமிழர்கள் மற்ற இரண்டும்  பொத்தர்கள் .  ஆனால் கிழக்கு மாகாணத்தில் மூன்று சிர்வாக மாவட்டங்கள் உள்ளது அதில் இரண்டு பெளத்தர்கள் ஒரு தமிழர் அரசாங்க அதிபராக உள்ளனர். முஸ்லிம்கள்  282,746 (43.63%) இருக்கும் அம்பாரை மாவட்டத்தில் கூட ஒரு #முஸ்லிம் அரசாங்க அதிபர் இல்லை !  அங்கு மேலதிக அரசாங்க அதிபராக இருக்கும் அஷ்ஷேக் அமீர் ( நளீமி) யைக்கூட இடம்மற்றுவதற்கு பல முன்னெடுப்புக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் .

இப்படியான  இனவாத செயற்பாடை  விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த ஆட்சியில் அம்மாறை மாவட்டத்தில்  பெளத்த அரசியல் வாதிகளால் அபிவிருத்தி என்ற பெயரிலும் ,பதுகாப்பு என்ற பெயரிலும் பொத்துவிலில் இருந்து - இறக்காமம் வரைக்கும்  புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால் புத்தர் சிலை வைக்கப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்கள் பெளதம் அல்லாதவர்கள். 

அதேபோல் இறக்காமப் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் தென் கிழக்கில் இருக்கும் முதலாவது முஸ்லிம் மழமை வாய்ந்த கிராமம் . இத்தக் கிராமத்தினூடாகவே பெளத்தர்களின் தீகவாபி விகாரைக்குச் செல்லும் பாதை  இருப்பதனால்  இங்கு புத்தர் சிலைகளை வைப்பதற்கும் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு பல முறைகள் முயற்சி செய்தார்கள். அதில் முதல் கட்டம்தான் இறக்காமம் மணிக்க மடுவையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை .

எனவே இறக்காமப் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரத்தைப் பொருத்தமட்டில் இவை  பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இனவாத செயற்றாடு என்பது உறுதியாகின்றது.

எனவே அம்மாறை மாவட்ட முஸ்லிம்கள் என்றவகையில் இது குறித்து நாங்கள்  சற்று நிதானமாகவும் விழிப்புடனும் செயற்பட வேண்டும்.

#இதற்கு_தீர்வு_உள்ளதா ??

நிச்சயமாக இதற்கு தீர்வு பெற முடியும் . ஆனால் நாங்கள் அதிகம் பாடுபட வேண்டியுள்ளது .

1) எமது மாவட்டத்தில்  விகிதாசார தேர்தல் முறைமையூடாக  முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .

2) இந்த விகிதாசார தேர்தல் முறைமைனூடக கிழக்கு முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை மக்களுக்கும் எமது அரசியல் கட்சிகளுக்கும் சுட்டிக் காட்ட வேண்டும் .

3) எமது மாகாணத்தில் கரைந்து பிரிந்து காணப்படுகின்ற முஸ்லிம் கட்சிகளை ஒன்றுமைப் படுத்தி இந்தப் பிரச்சினையை இனங் காட்டி . இதனூடக அரசுக்கு நிபந்தனையுடனான சில கோறிக்கைகளை முன் வைக்க வேண்டும் .

Eg:- இப்போது தழிழ் கட்சிகள் வைத்ததைப் போன்று .

இவ்வாறு முஸ்லிம்கள் , முஸ்லிம்களின் கட்சிகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அம்பறை மாவட்ட முஸ்லிம்களுக்கான தனியான (( முஸ்லிம்  #அரசாங்க_அதிபர் , அதிகமான #முஸ்லிம்_பாராளுமன்ற உறுப்பினர் )  என்று நாம் பெற முடியும் .

குறிப்பாக இது சாதாரண வேலைத் திட்டமல்ல பாரியதோர் வேலைத்திட்டம் . இதை அரசியலினூடாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் .

No comments:

Post a Comment