பொதுவாகச் சொல்வார்கள் ஒரு சமூகத்தின் கல்வி எழுச்சி அந்த சமூகத்தில் உள்ள கல்விமான்களை ஊக்குவிப்பதில் தங்கியுள்ளது. இது கலைத்துறையாக இருந்தாலும் சரி , வர்த்தகத்துறையாக இருந்தாலும் சரி , விஞ்ஞனத்த துறையாக இருந்தாலும் சரி பொறியியல் துறையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்லாமியத் துறையாக இருந்தாலும் சரி
அந்த வகையில் எமது வரிப்பத்தான்சேனை கிராமம் கல்வியலாளர்களை கெளரவிப்பதில் பாரிய பின்னடைவில் இருந்தது. எந்ததளவு என்றால் எமது ஊரில் முதல் பட்டதாரிகளைக் கூட கெளவிப்பதற்கு சரியான தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது.
இப்படி இருந்த எமதூரை கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எதிர்வருகின்ற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் எமதூர் ஆர்வலர்களால் ஒரு கருத்து விதைக்கப்பட்டது. இதை வரிப்பத்தான்சேனையில் இருக்கும் அனைத்து சமூக நிறுவனம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்திற்கினங்க Gaffad என்ற ஒரு பொதுப் பெயரில் உருவாக்கப்பட்டு வெளிநாட்டுகளிலும் , உள்நாடுகளிலும் பணிபுரியும் வரிப்பத்தான்சேனை உறவுகளினாலும் வரிப்பத்தான்சேனையில் இருக்கும் சமூக நிறுவனங்களினாலும் சமூக ஆர்வலர்களினாலும் பணம் சேர்க்கப்பட்டு நேற்று மாலை 3.30 pm அளவில் ( 2017/04/21) வரிப்பத்தான்சேனை அல் அஷ்ரப் ஞாபகர்த்த மைதானத்தில் மிகவும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது . அல் ஹம்துலில்லாஹ் .
இதன் தலைவர் , செயலாளர் , இதன் உறுப்பினர்கள் , இதன் ஆலோசனை சபை உறுப்பினர்கள் இதற்காக பண உதவி செய்த உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை புரியும் வரிப்பத்தான்சேனை உள்ளங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் அனைவருக்கும் எனது ஊர் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல் இது போன்ற விழாக்கள் இன்னும் நடத்தப்ப வேண்டும் ... பல ஆளுமைகளையும் துறை சார்ந்தவர்களையும் ஒன்றிணைந்து வாழ்த்த வேண்டும் அப்போதுதான் எமதூரின் கல்வியில் பாரிய மாற்றம் ஏற்படும் என்று கேட்டவனாய் ...
இப்படிக்கு
ஊர் ஆர்வலர்
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
No comments:
Post a Comment