நபிஸல் அவர்களின் வின்னுலக யாத்திரைப் பயணத்திற்கு பிரதான காரணமாக இருந்தது இரண்டு நிகழ்வுகள்
01) தனது சிறிய தந்தை அபூதாலிபின் மரணம்.
02) தனது மனைவி கதீஜா நாயகின் மரணம்.
இவர்கள் தனது தஃவாவுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் . நபிஸல் அவர்களுக்கு மக்கத்துக் குறைஷிகள்மூலம் ஒரு பிரச்சினை வரும்போது இவர்கள் அந்தப் பிரச்சினையை முறையடிக்கும்
செல்வாக்கினை குறைஷிகள் மத்தியில் பெற்றிருந்தனர். இப்படி செல்வாக்கின் மூலமாகவும் அரவனைப்பின் மூலமாகவும் தன்னைப் பாதுகாத்த உறவுகள் தன்னை விட்டு பிரிந்த போது நபிஸல் அவர்கள் மிகவும் கவலைப் பட்டார்கள்.
இவர்கள் இருவரின் மரணத்தின் பிற்பாடு அச்சமுகம் தொடர்ந்தும் துன்பங்களைக் கொடுத்தார்கள். தாயிப் நகர மக்களாவது தனது அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் தாயிபை நோக்கி பயணமானார்கள் . அவர்களும் நபிஸல் அவர்களைப் புறக்கணித்தார்கள். எந்தளவுக்கு என்றால் மக்கத்துக் குறைஷிகள் கொடுக்காத நோவினைகளைக் கொடுத்தார்கள். கல் நெஞ்சம் கொண்ட அம்மக்கள் நபிஸல் அவர்களை அடித்து துன்புறுத்தினார்கள்.
இப்னு இஸ்ஹாக் ( ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரின் வாழ்நாளில் கொடுக்க முடியாத வேதனைகளைக் குறைஷிகள் நபிஸல் அவர்களுக்குக் கொடுத்து வந்தனர். ஒரு முறை குறைஷிக் காபிர்களில் ஒரவன் நபி ஸல் அவர்களின் தலையில் மண்ணை வாரி இறைத்தான் . வீட்டுக்குள் நுழைந்த நபியவர்களின் தலையில் மண் இருப்பதைக் கண்ட நபிஸல் அவர்களின் மகளாரின் ஒருவர் அழுதவராக அதனை அகற்றினார். " எனது அருமை மகளே ! அழாதே ! நிச்சயமாக அல்லாஹ் உன் தந்தையைப் பாதுகாப்பான். அபூதாலிப் மரணிக்கும்வரை நான் அதிகம் வெறுக்கும் ஒன்றை குறைஷிகள் எனக்கு செய்ததில்லை என்று நபிஸல் அவர்கள் கூறினார்கள் ( இப்னு ஹிஷாம் )
No comments:
Post a Comment