தொடர் = 08
பெளதீகத் துறையில் சிறப்புற்று விளங்கிய இவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு மருந்துவ மேதையாவார் . அபூ மன்சூர் முவக்கப் இப்னு அலி அல் ஹராவி என்பதுவே இவரின் முழுப்பெயர். புகாராவை ஆட்சி செய்த இளவரசர் முதலாம் மன்சூர் இப்னு நூஹ் ( 961 - 976 ) என்பவரின் ஆட்சிக் காலத்தில் ஹிராத் எனும் நகரில் வாழ்ந்த இவர் ஒரு பார சீக முஸ்லிமாவார் . இவர் மருத்துவத்துறையைவிடவும் மருந்தியல் விஞ்ஞாத் ( Pharmacology ) துறையில் அதிகம் தன் கவனத்தை செலுத்தினார். முதன் முதலில் பாரசீக மொழியில் மருந்தியல் விஞ்ஞான நூல் ஒன்றை எழுதிய பொருமை இவரையே சாரும் .
இவர் எழுதிய மருத்துவ நூல்
* கிதாபுல் அப்னியா அன் ஹகாயிக் அல் அத்வியா ( மருந்துக்களுக்குரிய உண்மை இயல்புகளின் அடிப்படைகள் பற்றிய நூல்) . இது பாரசீக தொழில் எழுதப்பட்ட மிகப்பழைய உரைநடையைக் கொண்டுள்ள நூல்களில் இதுவும் ஒன்று . இது 968 ம் ஆண்டிற்கும் 977 ம் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது .இதை இவர் எழுதுவதற்காக தகவல்களையுமஆதாரங்களையும் தேடி பாரசீகம் இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வரலாறுகள் உணர்த்துகிறது.
கிரேக்க, சிரிய, அரேபிய , இந்திய மூலகங்களை ஒன்றிணைத்துள்ள இந்நூல் 585 மருந்துக்களைப் பற்றிய விளக்கங்கள் இதில் காணப்படுகிறது . இதில் 466 மருந்துக்கள் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை . 75 மருந்துக்கள் கனிப் பொருளில் இருந்து தயாரிக்கப்படுபவை . 44 மருந்துக்கள் மிருகங்களில் இருந்து தயாரிக்கப்பப்படுபவை.
அதுமாத்திரமல்ல இந்நூல் மருந்துக்கள் அவற்றின் தாக்கங்களுக்கேற்ப நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் இந்நூல் சோடியம் காபனேற்று பொட்டாசியம் காபனேற்று ஆகிய இரு உப்புக்களையும் வேறுபடுத்தித் தமது தமது நூல்களில் விளக்கியுள்ளார். மேலும் ஆசனிய வொட்சைட்டு , குப்ரிக் ஒட்சைட்டு, சிலிசிக்கமிலம் , போன்றவற்றை விளக்கியுள்ளார். செம்பு , ஈயச் சேர்வைகள் முதலியவற்றின் நஞ்சு விளைவுகளையும் , நீறாத சுண்ணாம்பின் மயிரகற்றும் தன்மை ( depilatory ) தன்மை , பரிசுச் சாந்தின் ( Plaster of paris ) அமைப்பு , அறுவை வைத்தியச் சிகிச்சைகளில் அதனைப் பயன்படுத்தல் போன்றவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் .
இப்படி பிரசித்தி பெற்ற இவர் மேற்குலகால் மறைக்கப்பட்டுவிட்டார் . எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இவரை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டுவோம்.
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
No comments:
Post a Comment