பலஸ்தீனப் போராட்டத்தின் சொந்தக் காரர் ... ஹமாஸ் என்ற இஸ்லாமிய விடுதலை இயக்கத்தை உருவாக்கிய உன்னத மனிதர் அஷ்ஷஹீத் அஹ்மத் யாஸீன்.
அஷ்ஷஹீத் அஹமத் யாஸீன் பலஸ்தீனிலுள்ள அஸ்கலான் என்ற நகரத்தில் ஜவ்ரா என்னும் கிராமத்தில் 1936. 06.28. அன்று பிறந்தார் . இவரது தந்தையின் பெயர் இஸ்மாயீல் . இவரது குடும்பம் நான்கு பேரைக் கொண்ட ஒரு சிறிய குடும்பமாகும். இவர் ஐந்து வயது இருக்கும் போது தனது தந்தையை இழந்து விட்டார் . இவருடைய தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து இவரது மூத்த சகோதரன் குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.
சிறுவயதில் கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வமுடைய இவர் தனது ஆரம்பக் கல்வியை அல் ஜவ்ரா ஆரம்ப பாடசாலையில் கற்றார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் ஆக்கிரமிப்பு அடக்கு முறைகள் தனது கிராமத்தில் அதிகரிக்க தனது சொந்தக் கிராமத்தையும் அதில் உள்ள சொத்துக்களையும் விட்டுவிட்டு அப்பிரதேச மக்கள் காஸா பிரதேசத்திற்கு குடிபெயர ஆரம்பித்தார்கள். இப்படி குடியெயர்ந்த பலஸ்தீன் ஜவ்ரா பிரதேச வாசிகள் காஸாவில் மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்கையக் கொண்டு சென்றார்கள். இப்படி கஷ்டப் பட்ட வர்களுள் அஹ்மத் யாஸீனின் குடும்பமும் ஒன்று .
தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக அஹ்மத் யாஸீன் கடைகளிலும் , கடல்தொழிலிலும் ஈடுபட்டு வந்தார் . இவ்வாறு இவர் கஷ்டப்பட்டாலும் தனது கல்வியை நிறுத்தவில்லை . அஹ்மத் யாஸீன் இமாம் ஷாபி பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது ஒரு நாள் மாலைப் பொழுதில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத சந்தர்ப்பத்தில் திடீரென தரையில் விழுந்தார் . அவரது கையும் காலும் அசைவற்றுக் காணப்பட்டார் . இதைக் கண்டு அச்சமடைந்த இவரது நண்பர்கள் வைத்தியசாலைக்கு இவரை எடுத்துச் சென்ற போது இவரைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் இவர் பக்கவாத நோயினால் ( பாரிசவாதம் ) பாதிக்கப்பட்டுள்ளார் என்வும் இவரின் நோயினைக் குணப்படுத்துவது கடினம் என்று கூறினார்கள் .
இதைக் கேட்ட அஹ்மத் யாஸீனின் குடும்பத்தினர் கடுமையாக கவலைப்பட்டார்கள். தான் பாரிசவாதத்தால் பாதிக்கப் பட்டுள்ளேன் என்ற கவலை அவரிடம் இல்லை . அதேபோல் அவரது கல்வியையும் விட்டுவிட விலை. அஹ்மத் யாஸீன் 1955 இல் தனது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார் .
No comments:
Post a Comment