01) அறிமுகம் ( ISIS :- Islamic state iraq and sham)
#)ஆரம்பம் :- 2014
#) நாடு :- சிரியா, ஈராக் .
#) தலைவர் :- அபூபக்கர் அல் பக்தாதி
#) கொள்கை:- இஸ்லாத்திற்கு முறனானது
#) படைப்பலம் :- 50.000- 200.000 படையினர் .
ஒவ்வொரு காலத்திலும் எமது முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு விதமான பிரச்சினையை எதிர்நோக்கிக் கொண்டே வருகின்றது . அந்தவகையில் பல்லின சமுகங்களைக் கொண்ட இலங்கையில் ISIS என்ற வடிவில் பிரச்சனை உருப் பெருக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 21ம் திகதி இடம்பெற்ற பிரபல நட்சத்திர ஹோட்டல்கள்மீதும் , மதஸ்தலங்கள்மீதும் நடத்தப்பட்ட கொடூர குண்டுத்தாக்குதல் முஸ்லிம் சமுகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலை இஸ்லாமிய வாதிகள் என்று பெயர்தாங்கிய ஓர் போலி அமைப்பு உரிமை கோறியுள்ளது என்கின்றபோது அதைவிட சோகமாக உள்ளது.
உண்மையில் ISIS என்ற அமைப்பு இஸ்லாமியவாதிகளல்ல இவர்கள் பயங்கரவாதிகள். இவர்கள் சிரியாவின் விடிவுக்காகப் போராடிய பலம் குறைந்த குழுக்களில் ஒன்று . இவர்கள் இஸ்லாமிய போபோராட்ட வழிமுறைகளைப் பிழையாக விழங்கிய தீவிர சிந்தனை கொண்டோர்கள். இன்று ஊடகங்களில் ஒரு சுன்னா இராணுவ இயக்கம் எனவும் , மத்திய கிழக்கில் கிலாபத்தை நிறுவுவதற்குப் போராடுகின்ற அமைப்பு எனவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றார்கள்.
இவர்கள் சிரியாவின் போர்க் களத்திலிருந்து திடீரென ஈராக்கிய நகரங்களைக் கைப்பற்றியது உலகக் கவனத்தையே ஈர்த்தது . இவர்களின் திடீர் தோற்றமும் வேகமான வளர்ச்சியையும் பார்க்கும்போது இவர்களுக்குப் பக்கபலமாக மிகப்பெரும் சக்தியொன்று இருப்பதாக உலக இஸ்லாமியர்களுக்கிடையில் பல சந்தேகங்கள் எழுந்தது.
சுன்னா முஸ்லிம்கள் என்று தங்களை அடையாளம் காட்டிய இவர்களின்
செயற்பாட்டினால் பக்தாதிலும் , அன்பர் மாகாணத்திலும் வாழும் சுன்னா முஸ்லிம்கள்கூட பெரும் பதட்டமடைந்து
அதிகமானோர் ஈராக்கை விட்டு வெளிப்பிரதேசங்களுக்கு செல்ல ஆரம்பித்த்தனர். எனவே இவர்களின் செயற்பாடு ஈராக்கில் வாழ்ந்த சுன்னா முஸ்லிம்களுக்கும் பாரிய அச்சுர்த்தலாக அமைந்தது.
02) இதன் தோற்றம்
ISIS பற்றி பலரிடம் பல கருத்துக்கள் இருந்தாலும் இதனுடை ஆரம்பம் எப்போது என்பதில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. உண்மையில் ISIS என்ற தீவிர சிந்தனையின் உருவாக்கம் 1980 களிலேயேஆரம்பமாகிவிட்டது.1980 களில் முஸ்லிம் நாடுகளை ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பிரிட்டிஷ் , போத்துகல் ஒல்லாது போன்ற நாடுகள் தனது காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்தது (Colonialism) இதனால் முஸ்லிம் நாடுகளில் மேற்கு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்தோடு முஸ்லிம்களின் சில உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டது . இதனால் கவலை கொண்ட முஸ்லிம்கள் எங்களின் மதச் சுதந்திரத்தை ஐரோப்பிய சக்திகளிடமிருந்து மீட்க்க வேண்டும் என்று ஈராக் லிபியா எகிப்து அல்ஜீரியா போன்ற நாடுகளில் சிரிய சிரிய குழுக்கல் தோன்றியது. அவ்வாறு தோன்றிய ஒரு சிறிய இயக்கம் ஈராக்கிலும் தோன்றியது .
1980 களில் ((ஸலபியா அல் ஜிஹாதியா )) என்ற ஒரு சிந்தனை தோன்றுகிறது இதை துறை சார்ந்த அறிஞர்கள் 1980 களில் தோன்றிய வரம்பு மீறிய ஆயுதக் குழுக்கள் என்று கூறுவார்கள். இவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்றால் நீண்ட காலமாக இஸ்லாமிய அமைப்புகள் மக்களை சீர்திருத்தம் செய்வதில் எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை இந்த வழிமுறையில் எமது இஸ்லாமிய இயக்கம் தொடர்ந்து பயனித்தால் முஸ்லிம் சமூகம் பாரிய வீழ்ச்சியை நோக்கி வண்ணம் செல்லும் என்று எண்ணி நாங்கள் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்றால் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் அப்போதுதான் எமது இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் தலை தூக்கலாம் என்று எண்ணி அங்கு இருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிராக போராடுதல் வன்முறையைப் பயன்படுத்தல் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
சில நாடுகளில் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செயதார்கள். சில நாடுகளில் பிழையான கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்கு குண்டுகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினார்கள். இப்படி பயங்கரவாத வன்முறை வழியினூடக இஸ்லாத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இப்படியான பிழையான வழிகளைக் கையான்டார்கள்.
இப்படி சலபிஸம் சிந்தனை கொண்ட தீவிரவாதக் குழுக்களில் ஒன்று ஈராக்கிலும் உருவானது. ஈராக்கில் உருவானதில் முன்னணியில் இருப்பது அல் கைதாவாகும் இப்படியான ஒரு ஜிஹாதிய குழு ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அங்கு இருக்கும் வாலிபர்கள், சதாம் ஹுஸைனின் படையில் இருந்து பிரிந்து வந்தவர்கள் 8 வருட ஈரானியப் போரில் கசப்பு உணர்வுடன் இருந்தவர்கள் இப்படி வித்தியாசமான மனக் கசப்பு கொண்டவர்கள் சேர்ந்து ஜமாஅதுத் தெளஹீத் வல் ஜிஹாத் என்ற போராட்டக் குழு ஒன்றை அபூ முஸ்ஃப் அஸ்ஸர்காவி என்பவர் 2004 ஈராக்கில் உருவாக்கினார்.
இவர் அல் கைதாவின் அதே சிந்தனையை உஸாமா பின்லேடனிடம் பைஅத் உருவாக்கினார். இந்தக் குழுவில் சிரியவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அபூ முஹம்மத் அல் கோலானி என்ற மாணவர் சேர்ந்து கொள்கின்றார். இவர் ஈராக்கில் #அபூ முஸ்ஃப் அஸ்ஸர்காவி இன் தலைமையில் போராடுகின்றார். இவரின் திறமையின் காரணமாக #ஜமாஅதுத் தெளஹீத் வல் ஜிஹாத் என்ற அமைப்பில் முன்னணிக்கு வந்தார். பின்னர் ஈராக்கில் இருக்கும் #மவ்சில் என்ற பகுதிக்கு தலைவராக இருந்தார்.
2006 இல் அபூ முஸ்ஃப் அஸ்ஸர்காவி ஒரு தாக்குதலில் மரணிக்கின்றார். பின்னர் தலைமைக்கு அபூ உமர் அல் பக்தாதி என்பவர் வருகின்றார் அவரும் மரணிக்கின்றார் பின்னர் அபூ ஹம்ஸா அல் முஹாஜிர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் சிரியவிலும் அரபுப் புரட்சி வந்தது அப்போது சிரியாவைச் சேர்ந்த அபூ முஹம்மத் அல் கோலானி அதே அமைப்பை சிரியாவிலும் ஒரு கிழையை உருவாக்க அனுமதி கோறி 2012 இல் சிரியாவில் ஜபஹதுன் நுஸ்றா லிஅஹ்லிஷ் ஷாம் ( ஷாம் மக்களை பாதுகாக்கும் முன்னணி ) என்ற ஒரு படையை உருவாக்குகின்றார் . கடுமையாகப் போராடினார் . இவர் அதே நேரம் அல்கைதாவின் சிந்தனையில்தான் போராடுகின்றார் இப்போது இருக்கும் ஐமன் லவாகிரிக்கு பைஅத் செய்தும் இருந்தார் .
இந்த சந்தர்ப்பத்தில் ஈராக்கில் இருக்கும் ஜமாஅதுத் தெளஹீத் வல் ஜிஹாத் என்ற போராட்டக் குழுக்கு அபூபக்கர் அல்பக்தாதி என்ற யூத தரகர் தலைமைப் பொறுப்பை பெறுகின்றான். தலைமைப் பொறுப்பை பெற்றவுடன் அபூ முஹம்மத் அல் கோலானியிடம் கூறுகின்றார் நாங்கள் ஜபஹதுன் நுஸ்றா லிஅஹ்லிஷ் ஷாம் என்றும் தவ்லா இஸ்லாமிய என்றும் பெயர் வைத்திருக்கத் தேவை இல்லை நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து தவ்லா இஸ்லாமிய ஈராக் வஷாம் ( ISIS :- Islamic state iraq and sham) என்று தனியான பெயரில் போராடுவோம் என்றார் .
இது அபூ முஹம்மத் அல் கோலானிக்கு பிடிக்கவில்லை காரணம் அபூபக்கர் அல்பக்தாதியின் தீவிப்போக்கும் அவரின் தீவிரமான பாச்சலும் பிழையக விளங்கியது . அபூபக்கர் அல்பக்தாதி எப்படிப் பேசினார் என்றால் ((( நாங்கள் மாத்திரம்தான் உண்மையான போராளிகள் நாங்கள் சொல்வதற்கு எதிராக போராடும் குழு இருந்தால் அவர்கள் காபிர்கள் ))) நாங்கள் போராடும் தொனியில்தான் அவர்கள் போராட வேண்டும் எங்களோடு அவர்கள் இணையாவிட்டால் நாங்கள் அவர்களைக் கொன்றுவிடுவோம் என்ற தொனியில் வந்தார்கள் அப்போது அபூ முஹம்மத் அல் கோலானி சொன்னார் எனக்கு முடியாது அது பிழை என்றார் அப்போதுதான் அபூபக்கர் அல்பக்தாதி இவருக்கு எதிராகப் போர் தொடுக்கின்றார்.
இது 2014 இன் பிறகு இடம் பெறுகின்றது .
எப்படி மாறினார் என்றால் அபூபக்கர் அல்பக்தாதி சிரியாவின் அரச படைக்கு எதிராகப் போராடாமல் பஷாருக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு எதிராகப் போராடினார் . இப்படி போராட்டம் தோங்கிய போது சிரியாவின் போர் இஸ்த்தம்பிதம் அடைந்தது. அப்போது சிரியாவில் உண்மைக்கு உண்மையாகப் போராடும் அஹ்ராருஷ் ஷாம் எனற இயக்கம் முன்னணி தலைவர்கள் கலந்துரையாடல் செயவதற்கு மிகவும் பாதுகாப்பான இடத்தில் ( சுரங்கத்தில் ஒன்று கூடிய போது இந்த ISIS தீவிரப் போக்கு கொண்டவர்கள் ஊடுருவி பெரியதோர் தாக்குதலை மேற் கொண்டார்கள். இதில் முன்னணியில் இருந்த தலைவர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டார்கள். உண்மையில் நாட்டின் சுநத்திரத்துக்காகப் போராடிய ஒரு குழு ISIS இன் தீவிரத் தன்மையால் அழிந்து விட்டது. இன்நிகழ்வு 2014 september 9 ம் திகதி இடம்பெற்றது.
இப்படி இவர்களின் இஸ்லாத்திற்கு முறனான தாக்குதல்கள் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத நாடுகளில் தொடர்ந்து கொண்டும் வருகின்றது. தற்போது ஈராக்கின் மெளசூல் நகரம் மாத்திரமே இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தத் தீவிர மதப்போக்கு சிந்தனை கொண்ட ISIS பயங்கரவாதிகளை வேரோடு பிடுங்கி எறிவதற்கு வளர்ந்துவரும் முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம் அல்லாத நாடுகளும் இனைந்து செயற்பட்டு வருகின்றது.
03 இலங்கை முஸ்லிம் என்றவகையில்
எமது பொறுப்புக்கள் என்ன ?
* ISIS அமைப்பானது அது ஓர் இஸ்லாமிய அமைப்பல என்பதனை நாம் உணர்ந்து மாற்றுமதத்தவர்களுக்கு உணரத்தவேண்டும்.
* இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்காத வகையில் முஸ்லிம்களாகிய நாங்கள் நடந்துகொள்ளல் வேண்டும்.
*பல்லின சமுகங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
* இலங்கை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு முஸ்லிம் சமுகம் முழுமையாக கட்டுப்படுதல் வேண்டும்.
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
பிரதம ஆசிரியர் தலைவாசல் சஞ்சிகை.