மத்திய காலத்தில் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த மருத்துவ மேதை இப்னுஸஹ்ல்
================================
இவைரை மேற்குலகு மறந்தாலும் முஸ்லிம்களாகி நாங்கள் மறக்கக்கூடாது .
மத்திய காலத்தில் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த மருத்துவ மாமேதைகளுல் இவரும் ஒருத்தர் .
இவருடைய முழுப் பெயர் அபுல் அலி இப்னு ஸஹ்ல் இப்னு ரப்பான் அல் தபரீ . அப்பாஸியக் காலத்தில் கலீபா அல் முதவக்கில் ( 847 861 ) ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தார் . இவர் ஸஹ்ல் அத் தபரி என்னும் பெயர் கொண்ட பாரசீக யூதரொருவரின் மகனாவார் .
இவர் பிற்காலத்தில் புகழ்பெற்றிருந்த அல் ராஸீ போன்ற மருத்துவர்களை உருவாக்கியவர் . இவர் எழுதிய பிர்தெளஸுல் ஹிக்மா ( அறிவின் சுவர்க்கம் ) என்னும் இந்நூல் மருத்துவத் துறையில் மட்டுமன்றி வானியல் , மொழியியல் ,தத்துவம் , விலங்கியல் போன்ற ஏனைய துறைகளைப்பற்றியும் விபரிக்கின்றது .ஹிந்து ஆதாரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்நூலின் இறுதியில் இந்திய மருத்துவம் பற்றிய சுருக்கக் குறிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது .
இந்த நூல் பிற்காலத்தில் பெரும் மருத்துவ வானியல் அறிஞர்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது .
அபுல் அலி இப்னு ஸஹ்ல் இப்னு ரப்பான் அல் தபரீ இவரை சொல்வதற்கு மேற்குலகு மற்ந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூடாது .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை
01) The outline of History ..H.G Wells ...(..p.627 )
02) Science in History ..J.D Bernal (p.201)
03) The Arabs in History .. Bernad Lewis ( p.137)