Monday, September 14, 2015

நூஹ்(நபி) அவர்களின் தஃவாப் பயணம் .

இவர்  சுமேரிய மக்களுக்கு  950 வருடங்கள்  இஸ்லாத்தை எத்திவைத்தார் . ஆனால் அவர்கள் சிலைகளை வணங்குவதில் பிடிவாதமாக இருந்தார்கள் .எந்த அளவு என்றால்  தன் மனைவி பிழைகள் கூட அவருடைய தஃவாவை ஏற்றுக்கொள்ள வில்லை . இது எவ்வளவு பெரிய சோதனை .இவர்களை திருத்துவது என்பது கடினம் என்ற ஒரு நிலை வந்தது . உடனே இறைவன் அவருக்கு ஒரு கப்பலைக் கட்டும்மாறு ஏவினான். அவர் கப்பலை கட்டிய போது அவர்கள் பரிகாசம் செய்தார்கள் .

பின்னர் அந்தக் கப்பலில் பறவைகள் . மிருகம்களில் ஒரு சோடியையும்  இறவனையும் தூதரையும் ஈமான் கொண்டவர்களையும் எறும்புபடி கட்டளை இட்டான் .இதில் மனைவி பிள்ளை கூட ஏறுவதற்கு மறுத்துவிட்டார்கள். தனது மகனிடத்தில் சொன்னார் வெள்ளத்தில் நீயும் அழிந்து விடுவாய் என்னுடன் சேர்ந்துகொள் என்றார் .அதற்கு அவன் என்னை  காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும்  என்றான். பின்னர் வெள்ளம் அந்த சமூகத்தை அழித்து விட்டது .

கப்பல் ஜுதி மலையை சென்றடைந்தது. இவை துர்க்கி நாட்டில் எல்லை மாவட்டமான போத்தான்னில் அர்ராத் என்ற மலையில் உள்ளது . இந்த மலைதான் ஜுதிமலை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை .

No comments:

Post a Comment