.
கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தின் இயங்கு சக்தியாக
( Driving Forces ) முஸ்லிம்களின் வர்த்தகக் கம்பனிகள் காணப்பட்டது . முஸ்லிம்கள்தான் இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கி வந்தார்கள் . அதேபோல் எமது மூதாதையர்கள் இலங்கைக்கு வந்த நோக்கமும் வியாபாரமாகத்தான் இருந்தது .
இன்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்க முடியும் இலங்கையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார் ? என்றால் அது அரபியர்கள் என்பார்கள் . அந்த அளவு வணிகத்தில் பேர் பெற்றவர்களாக எமது மூதாதையர்கள் இருந்துள்ளார்கள் .
கீழத்தேயத்தில் உள்ள வாசனைத்திரவியங்கள் ( கராம்பு , ஏலம் , கடுகு கருவா ) மற்றும் யானைத்தந்தம் முத்து போன்ற வர்த்தகப் பொருட்களை ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்தார்கள் . இந்த வாசனைத் திரவியங்களைக் கைப்பற்றுவதற்கு இலங்கையில் போத்துக்கேயர் ( கி .பி .1505 ) லும் ஒல்லாந்தர் ( கி. பி. 1602 லும் ) பிரித்தானியர் ( கி. பி. 1796 ) லும் இலங்கைக்கு வந்தார்கள் .
இப்படிக் கொடிகட்டிப் பறந்த இலங்கை முஸ்லிம்கள் இப்போது எங்கோ இருக்கின்றார்கள் . தற்போது இலங்கையின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக வேற்று மதத்தவர்கள் மாறி வருகின்றார்கள் . 1990 களில் அரசாங்க மாணிக்கக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களே மாணிக்க வணிகத்தின் முன்னிலையில் இருந்தார்கள் .
19 ஆம் நூற்றாண்டில் நகரப் புறங்களில் மாணிக்கம் மற்றும் நகை வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் பெரும் செல்வாக்கினைப் பெற்றிருந்தார்கள் . ஆனால் இன்று அதில் வீழ்ச்சி கண்டுள்ளார்கள் . நகை வியாபாரமும் தற்போது தமிழர்களின் கையில் மாறியுள்ளது . அதேபோல் இலங்கையின் வேறு சில ஏற்றுமதிப் பொருளும் இன்று முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரின் மாறி வருகின்றது .
இலங்கையில் ஆடைக் கைத் தொழிலை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் இன்று ஆடைக் கைத்தொழிலும் எங்களை விட்டு கைநழுவி விட்டது . இன்று நகரப்புறங்களில் எமக்குப் பார்க்க முடியும் நகரப்புறங்களில் இருக்கின்ற பாரிய பிரமாண்டமான சாலைகள்கூட பிற மதத்தவரகளின் பெயர்களுடன் கம்பீரமாகக் காட்டியளிப்பதை எம்மால் பார்க்க முடியும் . இது தலைநகர் தவிர்ந்த பிற நகரங்களிலும்தான் .
நான் ஒரு கட்டுரை வாசித்தேன் அதில் இலங்கையில் 280 மக்கள் வரையறுக்கப்பட்ட மக்கள் கம்பனிகள் உள்ளன என்றும் அதில் 10 கம்பனிகள் கூட முஸ்லிம்களுக்கு உரித்தானதல்ல . இதைப் பார்கின்ற போது எமக்கு மிகவும் கவலைக்குரியது .
இன்று இலங்கை முஸ்லிம்கள் வனிகத்தில் திகைத்து இருக்கின்றார்கள் எம்மால் பார்க்க முடியும் பெட்டாவில் திரும்பும் இடமெல்லாம் எமது முஸ்லிம்கள்தான் என்று கம்பீரமாகப் பேசுகின்றோம் .
உண்மை அதுவல்ல பெட்டாவில் முஸ்லிம் வியாபாரிகள் திரும்பும் திசையில் இருக்கின்றார்கள்தான் நான் இல்லை என்று சொல் விலை ! அவர்கள் அனைவரும் செய்கின்ற வியாபாரம் சில்லறை வியாபாரம் செய்பவர்கள் .
நாங்கள் சில்லறை வியாபாரத்தில் இலாபம் எடுக்கின்றோம் ஆனால் பெரு வியாபாரத்தில் இருப்பவர்கள் வேற்று மதத்தவர்கள் .
இதுதான் எமது வனிகத்தின் கெதி !
எனவே சிந்திப்போம் !
Hafeesul Haq
varipathanchenai