Saturday, December 12, 2015

யூததேசம் உருவான வரலாறு

இன்று யூதர்கள் பலஸ்தீனின் பூர்வீக குடிகள் நாங்கள்தான்  எங்களுடைய வரலாறு 400 வருடங்கள் பழமை வாய்ந்து என்று சொல்லி பலஸ்தீன் பூர்வீக குடி மக்களை மனித நேயமின்றி கொன்று குவிக்கின்றார்கள் .

ஆனால் உண்மை அதுவல்ல ! பலஸ்தீனின் பூர்வீக குடிகள் கன்னானியர்கள்தான் இவர்கள் சுமார் 4000  வருடங்கள் பழமை வாய்ந்தவர்கள் .  இவர்களை யூதர்கள்  கி.மு. 13 ஆம் நூற்றாண்டில் தாக்கி விரட்டிவிட்டு பலவந்தமாக பலஸ்தீனை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் . எவ்வாறென்றால்  அமெரிக்காவில் செவ்விந்தியர்களை ( Red Indians ) அடியோடு அழித்துவிட்டு ஆங்கிலேயர்கள் எப்படி  குடியேறினார்களோ அதேபோல் பலஸ்தீனில் இஸ்ரேலியர்கள் குடியமர்ந்தார்கள் .

அதன் பின்னர் கி.மு. 8 நூற்றாண்டில் பலஸ்தீன் மீது அசீரியர்கள் படையெடுத்தார்கள் . அங்கு இருந்த இஸ்ரவேலர்களை முற்றிலுமாக அழித்து அந்நாட்டைவிட்டு அடித்து துரத்திவிட்டு வேறு இனங்களை குடியமர்த்தினார்கள் அப்படி குடியமர்த்தப்பட்டவர்கள்தான் அரபு இனத்தவர்கள் . பின்னர் யூதர்களால் அடித்து விரட்டப்பட்ட கன்னானியர்களும் அரபு இனத்துடன் சேர்ந்து குடியமர்ந்தார்கள் .

அதன் பிறகு கி.பி. 6 ஆம்  நூற்றாண்டில் பாபிலோனியா சக்கரவத்தியான பஃக்து நஸர் ( Nebukath Neser ) தென் பலஸ்தீனை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கு வசித்த யூதர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு இறைத்தூதர்  ஸுலைமான் (அலை) கட்டிய பைதுல் முகத்தஸை அழிந்து சின்னாபின்னமாக்கினார் . அதேபோல்  ( Temple of Solomon ) ஹைகலுஸ் ஸுலைமான் என்ற வழிபாடுத் தளத்தையும் அழித்தார் .

விரட்டப்பட்ட சில   யூதர்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்து ஈரானியர்களின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீனில்  குடியேறினார்கள் . பின்னர் மறுபடியும் Temple of Solomon ) ஹைகலுஸ் ஸுலைமானை நிறுவினார்கள் .

ஆனால் இந்த மறு குடியேற்றம் 3/4 நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்க விலை . கி.பி. 70 இல் யூதர்கள் ரோமப் பேரசை எதிர்த்து யுத்தம் செய்தார்கள் . அதில் ரோமர்களால் பைத்துல் முகத்தஸ் நகரம் மற்றும் (Temple of Solomon ) ஹைகலுஸ் ஸுலைமான் முற்றிலும் சின்னாபின்னாமாக்கப்பட்டது .

பின்னர் கி.பி. 135 இல் யூதர்கள் மேற்கொண்ட கிளர்ச்சியை அடக்க வந்த ரோமப்படை பலஸ்தீன் நாட்டில் இருந்து யூதர்களை விரட்டி அடித்தது .இதன் பிறகு தென் பலஸ்தீனிலும் குடியேறினார்கள் . ஏற்கெனவே வடக்கு பலஸ்தீனில் 8 நூற்றாண்டுகள் குடியமந்துவிட்டு தென் பலஸ்தீனுக் மாறினார்கள் .
இஸ்லாத்தின் வருகைக்கு முன் பைதுல் முகத்தஸில் ( பலஸ்தீனில் ) அராபியர்களே காணப்பட்டார்கள் .

பின்னர் யூதர்கள் ஐரோப்பாவில் சபிக்கப்பட்ட இனமாகக் கருதப்பட்டார்கள் . இங்கிலாந்தில் 1290  ஆண்டு முதலாம் எட்வர்ட் யூதர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற  ஒர் அரசாணையை வெளிட்டான் . அதன் பின்னர்  1302  இல்  பிரான்ஸ் நாட்டை விட்டு யூதர்கள் யாவரும் வெளியேற வேண்டுமென நாட்டு மன்னர் பிலிப் கூறினார் . இப்படி 1498 இல் 12 ஆம் லூயிஸ் மன்னன் போன்று பல ஆட்சியாளர்கள் விரட்டியடித்தார்கள்

பின்னர் எங்களுடைய தேசம் எமக்கு வேண்டும் நாங்கள் அதை பலஸ்தீனர்களிடமிருந்து ஆக்கிரமிக்க வேண்டும் என்று சொல்லி 1880  ஆண்டு மேற்கு ஐரோப்பாவில் வசித்துவந்த யூத குடும்பங்களை ஒன்றன்பின் ஒன்றாக பலஸ்தீனில் குடியேற்றினார்கள் . அதன் பிறகு புகழ் பெற்ற யூதர்களின் தலைவனான (( தியோடர் ஹெர்ஸல் )) என்பவன் 1897  இல் (Zionist  3) Organization அல்லது ZO ) ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான் இதற்கு கேடிக்கணக்கான பணத்தை தானமாக யூதர்கள் அளித்தார்கள் . இதன் நோக்கம் பலஸ்தீனை மறுபடியும் கைப்பற்ற வேண்டும் மீண்டும் அங்கு ஹைகலுஸ் ஸுலைமானை நிறுவ வேண்டும்

1880 ஆண்டிலிருந்து 1917 வரைக்கும் சுமார் 37 ஆண்டுகள்  பலஸ்தீன் பிரிட்டினின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது . பிரிட்டினின் நட்பைப் பெற்றுக் கொண்ட யூதர்கள் உலகத்தில் பரந்து வாழ்ந்த யூதர்களை 37 ஆண்டுகளுக்குள் ஒன்று திரட்டினார்கள்  . அதேபோல் பிரிட்டினின் உதவியோடு  8.000   அரபியர்களின் விவசாய பூமிகள் பறிக்கப்பட்டது . 5.000 ஹெக்டேர் அரசாங்க உத்தரவின் பிரகாரம் பறிக்கப்பட்டது . இப்படியாக பலஸ்தீனர்கள் உடமைகளை இழ்தார்கள் .

1922  இல் 82.000 அளவு இருந்த யூதர்கள் 1939  இல் 4 அரை இலட்சமாக பெருகி இருந்தார்கள் . பின்னர் அவர்களின் திட்டத்திற்கேற்பவும் பிரிட்டன் அரசாங்கத்தின் தாராளத்திற்கேற்பவும் எமது அரபு நாட்டு தலைவர்களின் அணுசர்னையுடன் 1917 ஆண்டு முதல் 1947 வரை சுமார் 30 ஆண்டு கலத்தில் யூதர்களின் இரண்டாவது திட்டமான யூத நாட்டை உருவாக்கும் திட்டம் நிறைவேறியது .

அன்றிலிருந்து இன்றுவரையும் இஸ்ரேலின் காஸாமீதான நில ஆக்கிமிப்பாலும்  பொருளாதார முற்றுகையாலும் பலஸ்தீனில் இருந்து  3.503.323  வெளிநாட்டுகளில் தங்கி வாழ்கிறார்கள் . 1.6 மில்லியன் மக்களைக் கொண்ட காஸாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்களாலும் பொருளாதார முற்றுகையைலும் 1000 த்திற்கு அதிகமான சிறுவர்கள் , இளைஞர்கள் பெண்கள் , வயோதிபர்கள் கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் .

எனவே பலஸ்தீன் பூமி என்பது யூதர்களின் பூமியல்ல அது  முஸ்லிம்களாகிய எங்களின்  பூர்வீக பூமி இதை யாருக்கும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம் .

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

பிரதம ஆசிரியர் 

தலைவாசல் சஞ்சிகை

No comments:

Post a Comment