சிரியா மனித வரலாற்றில் மிகவும் பழமை வாய்ந்த பிரதேசம் . ஷாம் பிரதேசத்தின் ஒரு பகுதி . பல்வேறு ஆட்சியில் இருந்த ஒரு நாடு .
சிரியா மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும் . இது வடக்கில் துர்கியும் , கிழக்கில் ஈராக்கும் , மேற்கில் லெபனானும் , மத்திய தரைக் கடலும் , தெற்கில் பலஸ்தீன் மற்றும் ஜோர்தானும் எல்லை நாடுகளாக விளங்குகின்றது .
185 ,180 சதுர கி. மீ . பரப்பைக் கொண்ட சிரியா மத்திய தரைக் கடலோரதின் சிறிய பகுதியையும் , மத்திய தரைக் கடலிலுள்ள எர்வத் என்ற தீவையும் , கோலான் குன்றுகளையும் கொண்டுள்ளது . மேலும் இது 0.06 % நீர் வளத்தையும் கொண்டுள்ளது .
சிரியாவின் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை
ஏறத்தாள கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது. அங்கே உலகின் முதல் கால்நடை வளர்ப்பு விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.நியோலிதிக் காலப்பகுதியில் அங்கு முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது .
சிரியாவின் உத்தியோக பூர்வ மொழியாக அரபு , ஆங்கிலம் , பிரெஞ்சு , குர்தி . போன்ற மொழிகளில் உள்ளது . இதன் தலைநகர் டமஸ்கஸ் இது உலகின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும் .
2005 ஜூலை மாதத்தில் சனத்தொகை கணக்கீட்டின் படி 19.043.00 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது . அதன் மொத்த தேசிய உற்பத்தி $71.74 பி வும் அதன் தலா வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 5.348 ( 10 ) வீதம் கொண்டுள்ளது .
சிரியாவின் மக்கள் தொகையில் 74% பெரும்பாண்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் களையும் , 16 % ஷீஆ முஸ்லிம்களையும் , 10 % கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது .
பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிரியா 1941 இல் மக்கள் ஆணையின் பிரகாரம் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது . 1963 இல் இருந்து 1970 வரைக்கும்
சிரியாவின் பாசட் கட்சி நாட்டை ஆண்டு வந்தது . பின்னர் 1970 இருந்து தற்போதைய சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் குடும்ப ஆட்சி ஆரம்பமாகியது . அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 45 வருடங்கள் 16 % வீதம் கொண்ட ஷீஆக்கள் 76 % வீதம் கொண்ட சுன்னி முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள் .
அடக்கி ஆழப்பட்ட மக்கள் கொந்தழித்தெழுந்தபோது அது 2011ஆம் ஆண்டு
உள்நாட்டு போராக மாறியது .
இந்நாட்டின் அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை உக்கிரமடைந்து வருகின்றது
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.
பஷார் அல் அஸாத்தின் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி மாலிக்கியின் அரசங்கமும் , ரஷ்யாவின் அதிபர் புட்டினும் , லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது . வேடிக்கை என்ன வென்றால் ஈரான் 150 கோடி சுன்னி முஸ்லிம்களை ஷீஆக்களாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது .
இன்று சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 15 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் துர்க்கி , கனடா , ஜேர்மன் , பிரான்ஸ் போன்ற நாடுகளில் அகதிகளாக அடிப்படை வசதி இன்றி சொந்தங்களை இழந்தும் வாழ்கிறார்கள் .
இன்று சிரியா isis அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும் . சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும் , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து அழிக்கப்பட்டு வருகின்றது
இன்று நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.% சதவீதம் அழிந்து போய்விட்டன.
இதுதான் இன்றை சிரியாவின் நிலை !
இதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் .
அஷ் ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் ) வரிப்பத்தான்சேனை
பணிப்பாளர்
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம் இறக்காமம்.
No comments:
Post a Comment