Thursday, December 10, 2015

இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் இறைமைக்கு ஒரு போதும் சவாலாக இருந்ததில்லை

ஹபீஸுல் ஹக்

கடந்த காலங்களில் பெளத்த இனவாதிகளால் முஸ்லிம்கள் இலங்கையின் இறைமைக்கு சவாலாக இருக்கின்றார்கள் அவர்கள் வெளிநாட்டுகளுக்கு எமது இரகசியங்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள் எனறு பிழையான புரிதல்களை பெளத்த மக்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள் இன்னும் பிரச்சாரம் செய்துகொண்டும் வருகின்றார்கள் .

இலங்கை முஸ்லிம் என்ற வகையில் அவர்கள் ஒருபோதும் இலங்கையின் இறைமைக்கு ஒரு போதும் அச்சுறுத்தலாக அமைய மாட்டார்கள் . இலங்கையின் வளர்ச்சிக்கு இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பெரியது .  கடந்த காலங்களில் முஸ்லிம்கள் இலங்கையைத்  காலணித்துவப்படுத்திய  ஒல்லாந்தர்கள் போத்துகேயர்கள் ஆங்கிலேயர்கள்  போன்ற கொடிய மிருகங்களிடமிருந்து    இலங்கையைப்பாதுகாக்க தனது உய்ரை உடமைகளை உறவுகளை அர்பனித்தார்கள் .

அதுமாத்திரமல்ல இலங்கையின் பாதுகாப்புப் படையில் நாட்டுக்காக   முதலாவதாக உயிர்த்தியாகம் செய்தவரும் ஒரு முஸ்லிம்தான் .கி.பி. 1518  இல் போத்துகேயரின் குடியேற்றமாக இலங்கை காணப்பட்டபோது பராக்கிரமபாகு முஸ்லிம்களுடைய உதவியில்தான் எதிர்த்துப் போராடினான் . இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பை

இதையும் நாங்கள் மறக்கக்கூடாது இலங்கைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் யார் என்று பார்த்தாலும் அதுவும் எமது முஸ்லிம்கள்தான் இப்படித்தான் இலங்கை முஸ்லிம்கள் இருந்தார்கள் இருந்துகொண்டு இருக்கின்றார்கள் இருந்து கொண்டு இருப்பார்கள் .

எனவே இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும்  இலங்கையின் இறைமைக்கு  அச்சுறுத்தலாக இருக்கவும்மில்லை அச்சுறுத்தலாகவும் இருக்க மாட்டார்கள் .

Hafeesul Haq ( Fathih )
Varipathanchenai

No comments:

Post a Comment