Tuesday, February 23, 2016

வில்பெத்துப் பிரச்சினை மீண்டும் ஒர் இனவாதத்தை தூண்டுவதற்கான ஊடகங்களினதும் , இனவாதிகளினதும் சதித்திட்டம் .

இது இன்று பரவலாக பேசப்படும் விடையம் . இதை முடியுமானவர்கள் சிங்கள மொழிபெயர்ப்பு செய்து சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தவும் . please ..

-----+--------+-------+----------+-----------+----------
விலபெத்துவ வடமேல் மாகணத்திற்கும் , வடமத்திய மாகாணத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஒரு சரணாலையம் . இதை முஸ்லிம்கள் சட்ட விரோதமாக ஆக்கிமித்துள்ளதாக கூறி சிங்கள ஊடகங்கள் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது . இது திட்டமான பொய்யாகும் . 1994 ம் ஆண்டின் கணிப்பின்படி
இதன் பரப்பளவாக 1376660 ஹெக்டயரை கொண்டுள்ளது . ஆனால் 2013 இல் உத்தியோக பூர்வமாக வெளியிட்ட அறிக்கையின்படி 1633....
கிட்டத்தட்ட 30 ஹெக்டயர் அதிகரித்துள்ளது . காரணம் மக்களின் காணிகள் வில்பெத்துவ வனாந்திரத்துக்க
ு சொந்தமாக்கப்பட்டுள்ளது .
01) வில்பெத்துவ சரணாலையத்திற்கு சொந்தமாக்கப்பட்டது யாருடைய காணிகள் ?
பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் 1990 ல் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் 20.000 குடும்பங்கள் அந்தப்பிரதேசங்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடியமர்ந்தார்கள் . இதனால் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த அந்தப் பூமி அரசுடமையாக்கப்பட்டது . உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதும் அந்த மக்கள் அவர்களின் சொந்தக்காணிக்கு வந்தபோது அது அரசுடமையாக்கப்ப
ட்டிருப்பதை சிலர்விட்டுவிட்
டு சென்றார்கள் இன்னும் சிலர் அவர்களின் எல்லைகளை வரையறுத்தார்கள் . இது வில்பெத்துவ வனப்பிற்கு சொந்தமானது அல்ல . இவர்களுக்கு அரசராங்க அனுமதியுடன் வாழ்ந்த சொந்தக் காணிகள் .
02) அப்படியானால் வில்பெத்துவ சரணாலையத்தில் குடியர்தப்பட்டவர்கள் யார் ?
இன்று வில்பெத்துவ சரணாலைய எல்லைகளில் மூன்று கிராமங்கள் உள்ளது . 01)காயக்குளி இது தமிழர்களுடையது .
02) சிஹக விஜயக் கிரமம் இதை '' கம்மானய '' என்று சொல்வார்கள் .
03) வில்பெத்து வடக்கில் முள்ளிக்குளம் என்ற பிரதேசத்தை '' நேவல் முஹாமுக்காக அரசு1000 ஏக்கரில் உள்ள காடுகளை அழித்து 3000 ஏக்கர்களில் 3000 சிங்கள குடும்பங்களை அரசு இரகசியமாக குடியமர்த்தி '' நாமல் கம '' என்று பெயரும் வைத்துள்ளது .
இந்தக்குடியேற்றங்களை சிங்கள , தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் முஸ்லிம்கள் வில்பெத்து சரணாலையத்தை ஆக்கிரமித்து காடுகளை அழிக்கின்றார்கள் என்று சொல்லி மீண்டும் ஒரு இனப்பிரச்சினையை கொண்டுவரப்பார்கின்றது .
இது முஸ்லிம் சட்டத்தர்னிகளால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு தொகுப்பு .
எனவே இந்த விடையம் சிங்கள , முஸ்லிம் , தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் . முடியுமானவர்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்து மக்களுக்கு இதை தெரியப்படுத்தவும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ்)

Thursday, February 18, 2016

சிரியாவில் விருட்சமடையும் பஷாரின் மனிதப் பேரவளம்

மனிதாவிமானமற்ற மனிதர்கள்
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு  முதல்  இன்று வரை  இடம்பெறும் வரும் உள்நாட்டுப் போரினால்  சுமார் 2,50,000 பேருக்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளதாகவும்  பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக உள்நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாகவும்  ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது .

பஷார் அல் அஸாத்தின் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி   மாலிக்கியின்  அரசங்கமும் , ரஷ்யாவின் அதிபர் புட்டினும் , லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும்  தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது   . வேடிக்கை என்ன வென்றால் ஈரான் 150 கோடி சுன்னி  முஸ்லிம்களை  ஷீஆக்களாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது .

இன்று சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 15 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும்  துர்க்கி , கனடா , ஜேர்மன் , பிரான்ஸ்  போன்ற  நாடுகளில் அகதிகளாக அடிப்படை வசதி இன்றி சொந்தங்களை இழந்தும்  வாழ்கிறார்கள்

.இன்று சிரியா isis  அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும் . சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும் , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து  அழிக்கப்பட்டு வருகின்றது .

இன்று  நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.%  சதவீதம் அழிந்து போய்விட்டன நாளுக்கு நாள் போதிய அடிப்படை வசதி இன்றியும் போதிய மருத்வ வசதி இன்றியும் மற்றும் ரஷ்யா , பஸார் அல் அஸாத்தின் தாக்குதல்களாலும்  உயிர் இளப்போர் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது .

.ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் ) வரிப்பத்தான்சேனை

அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்பு ஈராக்

.

01]  ஈராக் அறிமுகம்

தலைநகர் =  [பக்தாத் ]

பரப்பு = 438317 சதுர K.M.
[169235 சதுர மைல் ]

மக்கள் தொகை = 33.42  மில்லியன் [ 2013 ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ]

பிரதான சமையம் =   [இஸ்லாம் ]

பிரதான மொழி =  [அரபு மற்றும் குர்திஷ் மொழிகள் ] .

அங்கு இருக்கும் இனங்கள் =
அரேபியர்கள்  75-80% , குர்திஷ்கள் 15-20 % ,
கிறிஸ்தவர்கள் 0.8%
ஏனையோர்கள் 0.5%
[துருக் மோனியர்கள் ,அஸ்ரியர்கள் ]

[ஷீஆ முஸ்லிம்கள் 60-75%]
[சுன்னி முஸ்லிம்கள் 32-37% ]

பிரதான ஏற்றுமதி = சுத்திகரிக்கப்படாத எண்ணெய்கள் .

ஏனைய ஏற்றுமதிப் பொருட்கள் = [ விவசாயம் , கோதுமை , பேரீச்சம்பழம் , பார்லி , திராட்சை]  .

முக்கி நகரங்கள் = [கிர்குக் , இப்றீல் , பஸ்ரா , உம்முல் கஸ்ர் ]

வடக்கில் துருக்கியையும் ( 300 km ) கிழக்கில் ஈரானையும் ( 1458 km ) தெற்கில் குவைத்தையும் ( 240 km ) மற்றும் மேற்கில் சவூதி அரேபியாவையும் ( 814 km )  மேற்கில் ஜோர்தான் ( 81 km ) மற்றும் சிரியாவையும் ( 605 km ) எல்லைகளாகக் கொண்டுள்ளது .

ஈராக்கின் புனித நகரங்களாக அந்நஜாப் , காஸிமிய்யா ,  ஸமாரா, மற்றும் கர்பலா ஆகிய நகரங்கள்  ஷீஆக்களின் புனித நகரங்களாகக் கருதப்படுகின்றது . அலி ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் நஜாபிலும் ஹுஸைன் ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம்  கர்பலாவிலும் அமைந்துள்ளது . 

02) ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் பின்னணி  .
==============================

01) ஈராக்கின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றல் .

02) மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கான ஆதரவையும் பாதுகாப்பையும் திரட்டல்

03) மத்திய கிழக்கில் அமைந்துள்ள அரபு முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுறன்டல் .

04 )  அமெரிக்க ஜனாதிபதியக இருந்த புஷ்ஷின்  பதவியை தக்க வைத்வைத்துக் கொள்ளல்

05) உலகில் சக்தி வள நுகர்வில் அமெரிக்காவை தொடர்ந்தும் முன்னணியில் வைத்துக் கொள்ளல் .

இப்படியான நோக்கங்களுக்கமைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ்ஷும்  இஸ்ரேலாலும் கூட்டாக இணைந்து ஈராக்கில் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸையின் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி 2003 March 20 ல் ஈராக்கை ஆக்கிரமித்தது .

ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறி 2003 மார்ச் 20 ல் இருந்து 2007 ஜனவரி வரை சுமார் 4 ஆண்டுகள் ஆக்கிமித்தில் சுமார் 654.463  ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .இந்தத் தகவல்களை பக்தாதில் உள்ள முஸ்தன்சிரியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் John Hopkinson Bloomberg Medical College மும் இணைந்து மேற்கொண்ட கணிப்பீட்டறிக்கையில் வெளியிட்டுள்ளது .

அது போதாமல் ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள அபூ கரீப் என்ற சிறையில்வைத்து பல்லாயிரக் கணக்கான வர்களைக் கொன்று குவித்து விட்டு இன்று ஜனநாயகம் ஜனநாயகம் என்ற கூவித்திரிகின்றது .

03)  அமெரிக்கா ஆக்கிரமிப்பால் ஈராக் இழந்தது என்ன ?
==============================

01) ஈராக்கின் பொருளாதார வளம் அழிக்கப்பட்டுள்ளது
02) பெரும் மனித வளம் அழிக்கப்பட்டது
03) ஈராக்கின் பழமையான நாகரீகம் அழிந்துவிட்டது

04) முஸ்லிம் சமூகம் இழந்தது என்ன ?
==============================

ஈராக்கில் பெரும்பான்மை ஷீஆ சமூகத்தை ஆண்ட சுன்னி முஸ்லிம்கள் ஆட்சியை இளந்துவிட்டோம் .

Hafeesul haq ( fathih )
varipathanchenai