மனிதாவிமானமற்ற மனிதர்கள்
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை இடம்பெறும் வரும் உள்நாட்டுப் போரினால் சுமார் 2,50,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக உள்நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது .
பஷார் அல் அஸாத்தின் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி மாலிக்கியின் அரசங்கமும் , ரஷ்யாவின் அதிபர் புட்டினும் , லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது . வேடிக்கை என்ன வென்றால் ஈரான் 150 கோடி சுன்னி முஸ்லிம்களை ஷீஆக்களாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது .
இன்று சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 15 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் துர்க்கி , கனடா , ஜேர்மன் , பிரான்ஸ் போன்ற நாடுகளில் அகதிகளாக அடிப்படை வசதி இன்றி சொந்தங்களை இழந்தும் வாழ்கிறார்கள்
.இன்று சிரியா isis அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும் . சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும் , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து அழிக்கப்பட்டு வருகின்றது .
இன்று நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.% சதவீதம் அழிந்து போய்விட்டன நாளுக்கு நாள் போதிய அடிப்படை வசதி இன்றியும் போதிய மருத்வ வசதி இன்றியும் மற்றும் ரஷ்யா , பஸார் அல் அஸாத்தின் தாக்குதல்களாலும் உயிர் இளப்போர் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது .
.ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் ) வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment