இது இன்று பரவலாக பேசப்படும் விடையம் . இதை முடியுமானவர்கள் சிங்கள மொழிபெயர்ப்பு செய்து சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தவும் . please ..
-----+--------+-------+----------+-----------+----------
விலபெத்துவ வடமேல் மாகணத்திற்கும் , வடமத்திய மாகாணத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஒரு சரணாலையம் . இதை முஸ்லிம்கள் சட்ட விரோதமாக ஆக்கிமித்துள்ளதாக கூறி சிங்கள ஊடகங்கள் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது . இது திட்டமான பொய்யாகும் . 1994 ம் ஆண்டின் கணிப்பின்படி
இதன் பரப்பளவாக 1376660 ஹெக்டயரை கொண்டுள்ளது . ஆனால் 2013 இல் உத்தியோக பூர்வமாக வெளியிட்ட அறிக்கையின்படி 1633....
கிட்டத்தட்ட 30 ஹெக்டயர் அதிகரித்துள்ளது . காரணம் மக்களின் காணிகள் வில்பெத்துவ வனாந்திரத்துக்க
ு சொந்தமாக்கப்பட்டுள்ளது .
01) வில்பெத்துவ சரணாலையத்திற்கு சொந்தமாக்கப்பட்டது யாருடைய காணிகள் ?
பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் 1990 ல் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் 20.000 குடும்பங்கள் அந்தப்பிரதேசங்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடியமர்ந்தார்கள் . இதனால் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த அந்தப் பூமி அரசுடமையாக்கப்பட்டது . உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதும் அந்த மக்கள் அவர்களின் சொந்தக்காணிக்கு வந்தபோது அது அரசுடமையாக்கப்ப
ட்டிருப்பதை சிலர்விட்டுவிட்
டு சென்றார்கள் இன்னும் சிலர் அவர்களின் எல்லைகளை வரையறுத்தார்கள் . இது வில்பெத்துவ வனப்பிற்கு சொந்தமானது அல்ல . இவர்களுக்கு அரசராங்க அனுமதியுடன் வாழ்ந்த சொந்தக் காணிகள் .
02) அப்படியானால் வில்பெத்துவ சரணாலையத்தில் குடியர்தப்பட்டவர்கள் யார் ?
இன்று வில்பெத்துவ சரணாலைய எல்லைகளில் மூன்று கிராமங்கள் உள்ளது . 01)காயக்குளி இது தமிழர்களுடையது .
02) சிஹக விஜயக் கிரமம் இதை '' கம்மானய '' என்று சொல்வார்கள் .
03) வில்பெத்து வடக்கில் முள்ளிக்குளம் என்ற பிரதேசத்தை '' நேவல் முஹாமுக்காக அரசு1000 ஏக்கரில் உள்ள காடுகளை அழித்து 3000 ஏக்கர்களில் 3000 சிங்கள குடும்பங்களை அரசு இரகசியமாக குடியமர்த்தி '' நாமல் கம '' என்று பெயரும் வைத்துள்ளது .
இந்தக்குடியேற்றங்களை சிங்கள , தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் முஸ்லிம்கள் வில்பெத்து சரணாலையத்தை ஆக்கிரமித்து காடுகளை அழிக்கின்றார்கள் என்று சொல்லி மீண்டும் ஒரு இனப்பிரச்சினையை கொண்டுவரப்பார்கின்றது .
இது முஸ்லிம் சட்டத்தர்னிகளால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு தொகுப்பு .
எனவே இந்த விடையம் சிங்கள , முஸ்லிம் , தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் . முடியுமானவர்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்து மக்களுக்கு இதை தெரியப்படுத்தவும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ்)
No comments:
Post a Comment