Tuesday, November 29, 2016

November 29: International Day of Solidarity with the Palestinian People.

நவம்பர் 29 - பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் சர்வதேச தினம்.

நேற்று மாலை கொழும்பு 07 இலுள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில்  பலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவினால் பலஸ்தீன் ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவதற்கான ஒருநிகழ்வு இலங்கைக்கான பலஸ்தீன் தூதரகத்தாலும் , இலங்கை பலஸ்தீன் நட்புறவு சங்கத்தினாலும்  ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்  எனக்கு கலந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது .

இதில் பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவர்   அமைச்சர் ராஜித்த சேனாரத்ணவும் மற்றும் பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க அவர்களும் , மூத்த ஊடகவியலாளருமான  மஹிந்த ஹடக அவர்களும் உரையாற்றினார்கள்

பலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் செய்துள்ள அடாவெடிகள் , அதன்  ஏற்பட்ட வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் , இலங்கை பலஸ்தீன் உறவுகள் , மற்றும் பலஸ்தீனுக்கான முழு ஆதரவை இலங்கை அரசு வழங்கும் எனவு வலியுறுத்தப்பட்டது . 

அல்லஹம்துலில்லாஹ்
இதில் அரசியல் பிரமுவர்களையும் , பிரபல ஊடகவிலாளர்களையும்  சந்தித்துப் சேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் எட்டியது .

Hafeesul haq
Varipathanchenai

Sunday, November 27, 2016

பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

A.M. Hafeesul haq ( Fathihi )

( 2016/ 11/28. ) மியன்மாரில் முஸ்லிம்களுக்கு இனவாதிகளும், அவ்வரசாங்கமும் செய்யும் இனவாத அடக்குமுறைகளைக் கண்டித்து நேற்று மலேசியாவில் ஆர்ப்பாட்டம் .

மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது. ஆனால், குடியுரிமையை மறுக்கும்
இராணுவச்சர்வதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள்.மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது. அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள்.

01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக்குடிகள் )
02) பஷுஷ் ( சீனா, தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா, பங்களாதேஷ் பூர்வீகத்தினர் )

இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்களல்ல என்று 1956 அரசாங்கம் மறுத்தது. இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்தது. இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச்செயல்கள் ஆரம்பித்தது.

1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்களை தீவிரமடைந்தது. இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர். அதே போல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று கூட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாகவுள்ளது.

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன்று பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை. உடுப்பதற்கு உடையில்லை. வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள். கற்பணிப் பொண்கள், வயோதிபர்கள், கடலில் தத்தழித்துக் கொண்டு உயிரை விடுகின்றார்கள்.

இது தான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை.பிராதிப்போம் ஒன்றாக .

Saturday, November 26, 2016

துருக்கி இஸ்ரேல் உறவுகள் .

நேற்று இஸ்ரேலின் இடம்பெற்ற ஹைபா தீயினால் இஸ்ரேலின் பல பிரதேசங்கள் கருகி வந்தது . இதில் எமது ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனும் உள்ளடங்கிருந்தது . இந்த தீயை அணைப்பதற்காக பல நாடுகள் தனது தீ அணைப்பு விமானங்களை அனுப்பிவைத்தது .  இதில் ஸைப்ரஸ் , ரஷ்யா , துருக்கி, இத்தாலி  போன்ற பல நாடுகள் உள்ளடங்கு கின்றது . கவலை என்னவென்றால் எமது Face book முப்திகள்  அர்துகான் இஸ்ரேலுக்கு தீயை அணைப்பதற்கான விமானத்தை வழங்கிய போது அர்துகானின்  வண்டவாளம் , அவரின் அரைவேக்காட்டுத்தனம் என்றெல்லாம் மோட்டுத்தனமாக பதிவிட்டு வருகின்றார்கள் .

வேடிக்கை என்னவென்றால் சென்ற வருடம் சவூதி - இஸ்ரேல் உறவு வெளிப்பட்ட போது  சிலர் சொன்னார்கள் அது சவூதி அரசின் ராஜாந்திர அரசியல் உறவு அதை நாம் குறை கூறக் கூடாது என்றார்கள் . இப்போது துருக்கி -இஸ்ரேல் உறவு என்ற போது வாயில் கைவைத்து அஸ்தக்பிருல்லாஹ் என்று நுணி நாக்கு மூக்கில் படும் வரை விமர்சனம் செய்கின்றார்கள்.

ஒன்றை நாங்கள் விளங்க வேண்டும் மற்றவர்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக நாங்களும் கூறாமல் அதை யதார்த்தத்தையும் அதன் பின்னணியையும் அறிந்து எழுத வேண்டும் .

இஸ்ரேல் - துருக்கி உறவின் பின்னணி என்னவென்றால் அது காஸாவின் பொருளாதார உதவிக்கான உறவு . இதன் அடிப்படையில்தான் துருக்கியில் இருந்து காஸாவுக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உதவிக் கப்பல் .

அதேபோல் இஸ்ரேல் துருக்கிக்கு மத்தியில் வேறு சில வர்த்தக உறவுகளும் இருக்கின்றது . இது ஒரு போதும் துருக்கிக்கும் அவர்களின் மார்கத்திற்கும் பாதகத்தை  ஏற்படுத்தாது . இன்றைய கால கட்டத்தில் நாடுகளுக்கிடையிலான உறவுகள் இல்லாமல் ஒரு போதும் சர்வதேச வர்த்தகம் மேற்கொள்ள முடியாது .  இதே உறவுகளை இஸ்ரேல் - எகிப்தது , இஸ்ரேல் - சவூதி , இஸ்ரேல் -சிரியா என்று பல முஸ்லிம் நாடுகள் வைத்துள்ளது. ஒன்றை நாம் விளங்க வேண்டும் துருக்கி மதச்சார்பற்ற நாடாக இருந்து இப்போதுதான் அது மாற்றமடைந்து வருகின்றது. இதில் நாங்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று வீனான விமர்சனம் செய்வது எங்களின் மோட்டுத்தனத்தைக் காட்டும் .

எனவே தேவையற்ற  விமர்சனங்களை விட்டுவிட்டு சமூகத்திற்கு பலனுள்ள பதிவுகளையிட்டு சுவர்க்கத்தின் பங்குதாரர்களாக மாறுவதற்கு முயற்சிப்போம் .

Hafeesul haq
Varipathanchenai

Thursday, November 24, 2016

பட்டு நூலினால் எழுதப்பட்ட முதலாவது அல்குர்ஆன் .

அஸர்பைஜான் நாட்டைச் சேர்ந்த " தூன்ஸாலா முஹம்மது ஸாதாஹ்" என்ற  கலைஞ்சரினால் உருவாக்கப்பட்ட  பட்டு நூலினாலினாலான  உலகின் முதலாவது அல் குர்ஆன்.

Hafeesul haq
varipathanchenai

Wednesday, November 23, 2016

முஸ்லிம் தனியார் சட்டத்தின் வரலாறு

1770க்கு முன்னர் காணப்பட்டது கோவையாகத் தொகுக்கப்படாத பண்பாட்டுச் சட்டமாகும்
1770 பட்டேவியாவிலிருந்து கொண்டுவரப் பட்ட திருமணம், மற்றும் மரபுரிமை குறித்த சட்டக்கோவை.
1806 முகம்மதியக் கோவை
1852 – 1852ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினூடாக முழு நாட்டுக்கும் விஸ்தரிக்கப்பட்ட முகமதியக் கோவை.
1888  முஸ்லிம் திருமணங்கள் பதிவு.
1925  மன்னர் எதிர் மிஸ்கின் உம்மா – வர லாற்றுத் திருப்புமுனை வழக்கு.
1926 முஸ்லிம் சமூகத்தின் முதன்மைச் சிறப்பு மிக்க அங்கத்தவர்களின் அழுத்தம் காரணமாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அக்பர் குழு.
1929 முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துக் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை.
1931 முஸ்லிம் மரணசாதனமற்ற பின்னுரிமை மற்றும் வக்பு கட்டளைச் சட்டம்.
1937 1929ஆம் ஆண்டின் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துக் கட்டளைச் சட்டம் நடைமுறைக்கு வருதல்.
1951-1951 ஆண்டின் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம்.
1956 திருமண மற்றும் விவாகரத்து ஆணைக்குழு. (அரசாங்கம்)
1973  பாரூக் குழு விதப்புரைகள் (சுயாதீன)
1984-1986 முஸ்லிம் தனியாள் சட்டச் சீர் திருத்தங்கள் குழு (நீதியரசர் வணசுந்தர – அரசாங்கம்)
1990-1992 முஸ்லிம் தனியாள் சட்டச் சீர்திருத்தக் குழு (கலாநிதி சஹாப்தீன் – அரசாங்கம்)
2008 முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்த சுயாதீனக் குழு  (ICMLR)
2009 நீதியமைச்சினால் நியமிக்கபட்ட 17 அங்கத்தவர் கொண்ட அமைச்சரவைக் குழு (நீதியரசர் மர்ஃசூப்)

Sunday, November 20, 2016

அல்ஹம்துலில்லாஹ்

Institute of Planning Management Development நிறுவனத்தினால்  8 நாள்  Planning பயிற்சி நெறி நடத்தப்பட்டுவந்து . இந்தப் பயிற்சி நெறிக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு இன்று கொளும்பு ஹெவலோக் சிடியில் இடம்பெற்றது .   இதில் மார்க்க அறிஞர்கள் , பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புத்திஜீவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். இதில் எனக்கும் ஒர் சந்தர்ப்பம் கிடைத்தது .

இந்த Planning கோசில் பயிற்றுவிப்பாளராக Consultant இஸ்மாயீல் அஸீஸ் phd ( in reading ) கலந்து கொண்டார் . இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டும் . மேலும் இந்த  பயிற்சி நெறியை ஏற்பாடு செய்த  IPMD நிறுவனத்திற்கு இறைவன் அருள்புரிய வேண்டும். 

Thinking win-win means being creative and finding ways for BOTH you and the other party to succeed when trying to reasolve a conflict .

Sunday, November 13, 2016

இறக்காம முஸ்லிம்கள் பெளத்தர்களுடன் வைத்துள்ள உறவை சீர் குழைக்க சில இனவாத துறவிகள் முயற்சி .

இறக்காமப் பிரதேசத்தைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்று .  இங்கு முஸ்லிம்கள் பெரும் பான்மையாகவும், பெளதர்கள் மற்றும் தமிழர்கள் சிறுபான்மையாகவும்  சக வாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

கடந்த 2013 ம்  ஆண்டின் இறக்காமப் பிரதேசத்தின் சனத்தொகை  கணக்கெடுப்பின் படி 15,476 முஸ்லிம்களும்,  997 பெளதர்களும் 346 தமிழர்களும்  இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் .   இறக்காமப் பிரதேசத்தில்  இறக்காமம் , வரிப்பத்தான்சேனை , வட்டுச்சேனை கிராமம் , குடுவில் , அமிரலி புரம் , நல்லதண்ணி மலை , மஜீட்புரம், சேகு ஒலி  புரம், அரபா நகர் , ஹுசைனியா புரம்,   10 A கிராமம் , சபா நகர் , 11A கிராமம் , முகைதீன் கிராமம் , ஜபல் நகர் , மதீனா புரம்  என்று சுமாராக  16 கிராமங்களில்  முஸ்லிம்கள் செறிவாகவும் கல்மடு , மலையடி , இலுக்குச்சேனை , நியுகுண போன்ற 4 கிராமங்களில் பெளதர்கள் செறிவாகவும் மாணிக்கமடு கிராமத்தில்  தமிழர்கள் செறிவாகவும் வாழ்ந்து வருகின்றார்கள் . 

இங்கு இவர்களுக்கு மத்தியில் இருக்கும்  வர்தக உறவும் , மதங்களுக்கிடையிலான உறவும்  மிகவும் பழமைவாய்ந்தது .  தீக்கவாப்பி விகாரைக்கு   பொறுப்பாக இருந்த ஒரு பெளத்த மதகுரு இறந்தமைக்காக இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் நிறுவக உறுப்பினர்கள் அவருடைய சடங்கில் கலந்து கொண்டு இரங்கள் உரை செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது .

அதேபோல் 1990 களில் முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகர் M.HM அஷ்ரப் அவர்களால்  இலுக்குச்சேனை , நியுகுண என்ற பெளத்த கிராமங்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டதாகவும்    இறக்காம பிரதேசவாசிகளால்  இலுக்குச் சேனையில் ஒரு பெளத்த கோயிலுக்கு ஒலிபெருக்கிகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வரலாற்றுகள் உறுதிப்படுத்துகின்றது.  இப்படி ஒத்தாசையாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்துவரும் இறக்காம முஸ்லிம்களுக்கு   மத்தியில் இனவாதத்தை கிழறும் நோக்குடனும் இறக்காமப் பிரதேசத்தில்  பெளத்த கூடியேற்றத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கிலும்  ஒரு சில பெளத்த  அரசியல்  இனவாதிகளாலும் ,   திட்டமிட்டப் பட்டு வருகின்றது .

கடந்த 2016 /10/ 29 ம் அன்று சனிக்கிழமை  காலை 10 மணிக்கு அம்பாறை வித்தியானந்த விரிவனாதிபதி கிரிந்திவெல சோம ரத்ன தேரர் , வித்தியானந்த பிரிவான மஹிந்த ஹிமி தேரர் மற்றும் கல்முனை #ரண்முத்துகல சங்கரத்ன தேரர்களின் தலைமையில் இறக்காமம் 7 ம் பிரிவான மாணிக்க மடுவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் இறக்காமப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இவர்களின் பின்னணியில் இருப்போர்கள் இன்று தேசியரீதியில் முஸ்லிம்களை எதிர்த்து கோஷம் இடும் இனவாதக் கும்பல் என்பது குறிப்பிடத் தக்கது .

இவ்வளவு ஆண்டுகாலமும் இறக்காமப் பிரதேச முஸ்லிம்கள் இறக்காமத்தில் இருக்கும் பெளத்தமக்களுடன்   முறண்பாடவும் இல்லை முறண்படப் போவதுமில்லை ஆனால்  இறக்காமப் பிரதேசத்தில் வெளியில் இருந்து சிலை கொண்டு வந்தவர்கள்தான் எங்களுக்கு மத்தியில்  பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றார்கள் என்று மனதாற கவலையுடன் கூறுகின்றார்கள். ஒருவாரத்தினுல் இதற்கு சரியான முடிவுகளை  அரசு அறிவிக்கும்  என்ற முடிவையும்  காணவுமில்லை செய்திகளை அரசிடம் எடுத்துச் சென்ற எமது முஸ்லிம் பிரதிநிகளையும் காணவில்லை . இப்படி இருக்கின்றது இறக்காமப் பிரதேசத்தின் நிலை

இதனை கட்டாயம்  எமது  அரசு பொருட்படுத்த வேண்டும் .

Hafeesul haq
varipathanchenai

Tuesday, November 8, 2016

Dear brothers and sisters , Assalamu alikum warhmathullahi wabrakathuhu .

I have been writing about Palestine issue and Arab_Revolution through this website. Palestine issue is one that has strong connection with our belief. So I request you all to help me to continue my humble effort.

நான் இன்று   பலஸ்தீன் பிரச்சினை மற்றும் அரபுப் புரட்சி சம்பந்தமாக கீழ் வருகின்ற  இணையத் தளங்களில் தொடராக எழுதி வருகின்றேன் . காரணம் பலஸ்தீன் விவகாரம் என்பது எமது அகீதா சார்ந்த விடையாம்  என்பதனால் .  இதை நாங்கள்  கட்டாயம் எமது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும் .   எனவே நான் உங்களிடம் வினையமாக வேண்டிக் கொள்வது இதை எமது முஸ்லிம்  சமூகத்திற்கு எத்தி வையுங்கள் .

கீழ் வருகின்ற  இணையத்தளங்களூடாக எனது ஆக்கங்களை உங்களால் வாசிக்க முடியும் .

*வன்னி எக்ஸ்பிரஸ் நீயூஸ் .
(Vanni express News  )

*மல்வானை நீயூஸ்
( malwana News )

*)அநுராதபுர செய்திகள்
(Anuradhapura News )

*) www.ceylon24.com

*கருங்கொடி மீடியா

*kandy matro news .com

*கல்குடாநேஷன்
( Kalkudahnation.com )

* அக்கறைப்பத்து நீயூஸ்
( Akkaraipattu news .com )

*எங்கள் தேசம் .
Engal Thesam news .com

*slmcvelichcham .com

*Shoora News

*Srilnka muslims.com

*Varipathanchenai blogspot.com

*  வரிப்பத்தான்சேனை news

*பலஸ்தீனை நோக்கி

எனது இணையத்தளமான .
*hafeesu blogspot.com
*புது யுகம் படைப்போம்
*எனது முகநூல் ( Hafeesul haq )

மற்றும் பத்திரிகையாக .

எங்கள் தேசம் பத்திரிகை .
(இதநூடாக தொடர்ந்து எழுத ஆரம்பித்துள்ளேன் . )

* தளம் சஞ்சிகை

* நிஜம் சஞ்சிகை

#எனது வட்சப் குறூப் ( What'sup grub )
*பலஸ்தீனை நேக்கி
* அறிவுலகம்
*வரிப்பத்தான்சேனை

இவ்வாறான இணையத்தளங்களூடாக  தொடராக எழுதி வருகின்றேன் . எனவே நான் உங்களுளுடை ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் .

எனது திறமையை எனக்கு இனங்காட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக !
(ஆமீன் ) jzakllah.

Hafeesul haq
student of fathih institute of srilanka .
( வரிப்பத்தான்சேனை )


Friday, November 4, 2016

அம்பாறை மாவட்டத்தில் விருச்சமடையும் பெளத்த இனவாதம் .

A.M.Hafeesul haq
Varipathanchenai

இன்று இலங்கையைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தின் அம்மாறை மாவட்டதிலையே  அதிகமான முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றார்கள். இவற்றைப் சகித்துக் கொள்ள முடியாத பெளத்த இனவாதிகள் சர்வதேச ரீதியிலும் தேசியரீதியிலும் அரசியல் முன்னெடுப்புக்களையும் இனவாதக் கருத்துக்களையும் மேற்கொண்டுவருவதை எம்மால் அவதானிக்க முடியும் . இன்று  கிழக்கு மாகாணம் மூன்று  நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட முறை முற்றிலும் இனவாதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவை .

இது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு  செல்வதைக் குறைப்பதற்கான முதலாவது இனவாதமாகும்.  1978 ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியால்  விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது . இது ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில்  கிழக்கு மாகாணம் அம்பாறை ,  மட்டக்களப்பு ,  திருமலை என்று  மூன்று நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது .

அதேபோல் திருமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி ,  மூதூர் தேர்தல்தொகுதி,  #சேருவலை தேர்தல்தொகுதி, என்று மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டமை. மேலும்   மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி , கல்குடா தேர்தல் தொகுதி , பட்டிருப்பு தேர்தல் தொகுதி என்று மூன்று தொகுதிகளாப் பிரிக்கப்பட்டமை. அத்துடன்  அம்பாறை மாவட்டத்தில் , அம்பாறைத்தேர்தல் தொகுதி , சம்மாந்துறை தேர்தல் தொகுதி, கல்முனை தேர்தல் தொகுதி, பொத்துவில் தேர்தல் தொகுதி என்று நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டமை.

இதில் #அம்பாறையை நிர்வாக மாவட்டமாக எடுக்கப்பட்டமையும்  அதில் கட்டியாக வாழ்ந்த முஸ்லிம்களின் விகிதாசாரத்தைக் கலைத்து சிங்களவர்களையும் உள்வாங்க வேண்டும் என்பதற்காக #அம்பாறை தேர்தல் தொகுதியை உருவாக்கியமையும்  இனவாதத்தின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுகின்றது . அதேபோல் திருமலை மாவட்த்தில் உருவாக்கப்பட்ட #சேருவலை தேர்தல் தொகுதி இதுவும் சிங்களவர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை  உள்வாங்கும் இனவாதத்  திட்டமாகும்

☞ கடந்த 2015 இல் அம்மாறை மாவட்டத்தில் தெரிவான் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் .

முஸ்லிம்கள்
==============
1 ) பைசல்காசிம்
2) எச். எம். எம். ஹரீஸ்
3) மன்ஸூர்

பெளத்தர்கள்
================
1) தயா கமகே
2) சிராணி
3) திஸ்ஸ நாயகா

தமிழர்
===========

1) கோடிஸ்வரன்

☞ முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் 3 முஸ்லிம்களும் 3 பெளத்தர்களும் ஒரு தமிழரும்  பாராளுமன்றத்திற்குத் தெரிவானது எப்படியான  ஒரு திட்டம் ?  இதுதான் கிழக்கு  முஸ்லிம்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில்  ஜே . ஆர். ஜவர்த்னா செய்த முதலாவது இனவாதம்.

அதேபோல் இன்று வடமாகாணத்தில் 5 நிறுவாக மாவட்டங்கள்  உள்ளது இதில்  மூன்று அரசாங்க அதிபர்கள் தமிழர்கள் மற்ற இரண்டும்  பொத்தர்கள் .  ஆனால் கிழக்கு மாகாணத்தில் மூன்று சிர்வாக மாவட்டங்கள் உள்ளது அதில் இரண்டு பெளத்தர்கள் ஒரு தமிழர் அரசாங்க அதிபராக உள்ளனர். முஸ்லிம்கள்  282,746 (43.63%) இருக்கும் அம்பாரை மாவட்டத்தில் கூட ஒரு #முஸ்லிம் அரசாங்க அதிபர் இல்லை !  அங்கு மேலதிக அரசாங்க அதிபராக இருக்கும் அஷ்ஷேக் அமீர் ( நளீமி) யைக்கூட இடம்மற்றுவதற்கு பல முன்னெடுப்புக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் .

இப்படியான  இனவாத செயற்பாடை  விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த ஆட்சியில் அம்மாறை மாவட்டத்தில்  பெளத்த அரசியல் வாதிகளால் அபிவிருத்தி என்ற பெயரிலும் ,பதுகாப்பு என்ற பெயரிலும் பொத்துவிலில் இருந்து - இறக்காமம் வரைக்கும்  புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால் புத்தர் சிலை வைக்கப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்கள் பெளதம் அல்லாதவர்கள். 

அதேபோல் இறக்காமப் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் தென் கிழக்கில் இருக்கும் முதலாவது முஸ்லிம் மழமை வாய்ந்த கிராமம் . இத்தக் கிராமத்தினூடாகவே பெளத்தர்களின் தீகவாபி விகாரைக்குச் செல்லும் பாதை  இருப்பதனால்  இங்கு புத்தர் சிலைகளை வைப்பதற்கும் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு பல முறைகள் முயற்சி செய்தார்கள். அதில் முதல் கட்டம்தான் இறக்காமம் மணிக்க மடுவையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை .

எனவே இறக்காமப் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரத்தைப் பொருத்தமட்டில் இவை  பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இனவாத செயற்றாடு என்பது உறுதியாகின்றது.

எனவே அம்மாறை மாவட்ட முஸ்லிம்கள் என்றவகையில் இது குறித்து நாங்கள்  சற்று நிதானமாகவும் விழிப்புடனும் செயற்பட வேண்டும்.

#இதற்கு_தீர்வு_உள்ளதா ??

நிச்சயமாக இதற்கு தீர்வு பெற முடியும் . ஆனால் நாங்கள் அதிகம் பாடுபட வேண்டியுள்ளது .

1) எமது மாவட்டத்தில்  விகிதாசார தேர்தல் முறைமையூடாக  முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .

2) இந்த விகிதாசார தேர்தல் முறைமைனூடக கிழக்கு முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை மக்களுக்கும் எமது அரசியல் கட்சிகளுக்கும் சுட்டிக் காட்ட வேண்டும் .

3) எமது மாகாணத்தில் கரைந்து பிரிந்து காணப்படுகின்ற முஸ்லிம் கட்சிகளை ஒன்றுமைப் படுத்தி இந்தப் பிரச்சினையை இனங் காட்டி . இதனூடக அரசுக்கு நிபந்தனையுடனான சில கோறிக்கைகளை முன் வைக்க வேண்டும் .

Eg:- இப்போது தழிழ் கட்சிகள் வைத்ததைப் போன்று .

இவ்வாறு முஸ்லிம்கள் , முஸ்லிம்களின் கட்சிகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அம்பறை மாவட்ட முஸ்லிம்களுக்கான தனியான (( முஸ்லிம்  #அரசாங்க_அதிபர் , அதிகமான #முஸ்லிம்_பாராளுமன்ற உறுப்பினர் )  என்று நாம் பெற முடியும் .

குறிப்பாக இது சாதாரண வேலைத் திட்டமல்ல பாரியதோர் வேலைத்திட்டம் . இதை அரசியலினூடாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் .