நேற்று இஸ்ரேலின் இடம்பெற்ற ஹைபா தீயினால் இஸ்ரேலின் பல பிரதேசங்கள் கருகி வந்தது . இதில் எமது ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனும் உள்ளடங்கிருந்தது . இந்த தீயை அணைப்பதற்காக பல நாடுகள் தனது தீ அணைப்பு விமானங்களை அனுப்பிவைத்தது . இதில் ஸைப்ரஸ் , ரஷ்யா , துருக்கி, இத்தாலி போன்ற பல நாடுகள் உள்ளடங்கு கின்றது . கவலை என்னவென்றால் எமது Face book முப்திகள் அர்துகான் இஸ்ரேலுக்கு தீயை அணைப்பதற்கான விமானத்தை வழங்கிய போது அர்துகானின் வண்டவாளம் , அவரின் அரைவேக்காட்டுத்தனம் என்றெல்லாம் மோட்டுத்தனமாக பதிவிட்டு வருகின்றார்கள் .
வேடிக்கை என்னவென்றால் சென்ற வருடம் சவூதி - இஸ்ரேல் உறவு வெளிப்பட்ட போது சிலர் சொன்னார்கள் அது சவூதி அரசின் ராஜாந்திர அரசியல் உறவு அதை நாம் குறை கூறக் கூடாது என்றார்கள் . இப்போது துருக்கி -இஸ்ரேல் உறவு என்ற போது வாயில் கைவைத்து அஸ்தக்பிருல்லாஹ் என்று நுணி நாக்கு மூக்கில் படும் வரை விமர்சனம் செய்கின்றார்கள்.
ஒன்றை நாங்கள் விளங்க வேண்டும் மற்றவர்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக நாங்களும் கூறாமல் அதை யதார்த்தத்தையும் அதன் பின்னணியையும் அறிந்து எழுத வேண்டும் .
இஸ்ரேல் - துருக்கி உறவின் பின்னணி என்னவென்றால் அது காஸாவின் பொருளாதார உதவிக்கான உறவு . இதன் அடிப்படையில்தான் துருக்கியில் இருந்து காஸாவுக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உதவிக் கப்பல் .
அதேபோல் இஸ்ரேல் துருக்கிக்கு மத்தியில் வேறு சில வர்த்தக உறவுகளும் இருக்கின்றது . இது ஒரு போதும் துருக்கிக்கும் அவர்களின் மார்கத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தாது . இன்றைய கால கட்டத்தில் நாடுகளுக்கிடையிலான உறவுகள் இல்லாமல் ஒரு போதும் சர்வதேச வர்த்தகம் மேற்கொள்ள முடியாது . இதே உறவுகளை இஸ்ரேல் - எகிப்தது , இஸ்ரேல் - சவூதி , இஸ்ரேல் -சிரியா என்று பல முஸ்லிம் நாடுகள் வைத்துள்ளது. ஒன்றை நாம் விளங்க வேண்டும் துருக்கி மதச்சார்பற்ற நாடாக இருந்து இப்போதுதான் அது மாற்றமடைந்து வருகின்றது. இதில் நாங்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று வீனான விமர்சனம் செய்வது எங்களின் மோட்டுத்தனத்தைக் காட்டும் .
எனவே தேவையற்ற விமர்சனங்களை விட்டுவிட்டு சமூகத்திற்கு பலனுள்ள பதிவுகளையிட்டு சுவர்க்கத்தின் பங்குதாரர்களாக மாறுவதற்கு முயற்சிப்போம் .
Hafeesul haq
Varipathanchenai
No comments:
Post a Comment