( இது திருமணத்தின் வகையல்ல விபச்சாரத்தின்வகை )
01) இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்று . ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி '' மகர் '' கொடுத்து மணந்து கொள்வார்கள் .
02) ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள் ! எனறு கூறி அனுப்பி விடுவார் . அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார் . அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார் . திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து வந்தனர் . இந்த திருமணத்தை '' நிகாஹுல் இஸ்திப்ழாஃ'' என்று அரபில் சொல்வார்கள் .
04) பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள் . அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவள் அனைவரையும் தன்னிடம் வரச்சொல்வாள் . அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள் . அவர்களிடம் அவள் '' நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே ! ( இப்போது ) எனக்கு குழந்தை பிறந்து விட்டது '' எனறு கூறிவிட்டு அதில் ஒருவரை நோக்கி .. இது உன் குழந்தையே '' என தான் விரும்பியவரின் பெயரைக் குறிப்பிடுவாள் . அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும் . அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் .
04) பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள் . தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள் . இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர் . இவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கொடியை நாட்டி வைத்திருப்பார்கள் . பலர் அங்கு வந்து போவார்கள் .
இதில் ஒரு பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள் . அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனிடம் அந்தக் குழந்தையை கொடுப்பார்கள் . அவரும் அதை மறுக்காமல் அதை ஏற்றுக்கொள்வார்ர் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ்)