Friday, May 26, 2017

இலங்கை சூழலில் பெறுமானங்களைக் கொண்ட அணுகு முறை தற்போது அவசியம்

அஷ்ஷெக் ஹபீஸுல் ஹக்  ( பாதிஹி )

விரிவுரையாளர் ஸலபி அரபுக்கல்லூரி

இலங்கை பெளத்தர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு  நாடு. பெளத்த மதத்தின் போதனைகள் பண்பாட்டுவியல் தத்துவம்ங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளவை. அவை பண்பாடு ரீதியான போதனைகளூடாக தனி நபர்களை சமூகத்தையும் வழிப்படுத்துகின்றது. எனவே இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் இஸ்லாமிய சிந்தனைகளை அறிமுகம் செய்யும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுறையே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

காரணம் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் நாடுகளை இரண்டாகப் பிரிப்பார்கள் . இஸ்லாமிய நாடுகள் ( தாருல் இஸ்லாம் )   அடுத்தது போராட்ட நாடுகள் ( தாருல் ஹர்ப் )  என்று ஆனால் நவீன கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவார்கள் தாருல் ஹர்ப் என்ற பிரையோகம் பொருத்தமற்றது அதற்கு தஃவா செய்யப்படக் கூடிய நாடுகள் ( தாருத் தஃவா )  என்ற பிரையோகமே பொருத்தமானது என்கின்றார்கள். இது ஒருவகையில் பொருத்தமும் கூட

இலங்கையில் பல சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாடு கடந்த 2011ம்  ஆண்டு நடத்தப்பட்ட சணத்தொகைக் கணக்கின் படி  பெளத்தர்கள் ( Buddhism :- 70.2%)
தமிழர்கள் ( Hinduism :- 12.6%)
முஸ்லிம்கள் ( Muslim :- 9.7%) ஆனால் தற்போது முஸ்லிம்களின் சணத்தொகை சற்று அதிகரித்துள்ளது
கிறிஸ்தவர்கள் ( Christianity :- 7.4%)
ஏனைய மதம் ( Other/None  0.1%) போன்றோர்கள் ஒன்றறக் கலந்து வாழ்கிறார்கள். இவர்களில் 80% மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றிய சிந்தனைகள் தெளிவு படுத்தப்படவில்லை. இவர்கள் இஸ்லாத்தைப் படிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.  இவர்களில் 3/4   பங்கினர் இஸ்லாத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர் . 

இன்று இலங்கை சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தூறல்களும், கோஷங்களும் , தாக்குதல்களும் அதிகரிப்பதற்கான காரணம் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பிழையான புரிந்துணர்வு. இஸ்லாம் இலகுவான மார்க்கம் . அது கால சூழ்நிலைக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது . அதேபோல் மனித இயலாபுடன் ஒத்துச் செல்லக் கூடியது. ஆனால் கவலை என்னவென்றால் முஸ்லிம்களின் கடினப் போகும் இறுக்கமான செயற்பாடும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பிழையான மனப்பதிவுகளை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அனஸ் பின் மாலிக் ( றழி ) அவர்கள் கூறுகின்றார்கள் " நாங்கள் ஒரு நாள் நபிஸல் அவர்களுடன் மஸ்ஜிதுந் நபவியில் அமர்ந்து இருந்தோம் . அப்போது அங்கு ஒரு காட்டுப்புற அறபி வந்தார். வந்தவர் மஸ்ஜிதுந் நபவியின் ஒரு மூலையில் சென்று தனது ஆடைகளை உயர்த்தி சிறுநீர் கழித்தார் . இதைக் கண்ட ஸஹாபாக்கள் அவரை அதட்டினார்கள் . அப்போது நபிஸல் அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து அவரை அச்சுறுத்தாதீர்கள் . அவரை விட்டு விடுங்கள். சிறநீர் கழித்து முடியும்வரை பொறுமையாக இருந்த நபிஸல் அவர்கள் அம்மனிதர் சிறுநீர் கழித்தபின் அவரை அழைத்து நீங்கள் சிறுநீர் கழித்த இடம் புனிதமான இடம் . மஸ்ஜித்கள் சிறுநீர் கழிப்பதற்கோ அல்லது அழுக்காக்குவதற்கோ உரிய இடமல்ல மாறாக அல்லாஹ்வை ஞாபகமூட்டம் இடம் என்று பக்குவமாகச் சொன்னார்கள் .. இப்படி உபதேசம் செய்துவிட்டு ஒரு ஸஹாபியை அழைத்து ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுவந்து ஊற்றி அவ்விடத்தை கழுவி விடுமாறு பணித்தார்கள் .

பின்னர் ஸஹாபாக்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள் " நிச்சயமாக நீங்கள் இலகுபடுத்துகின்றவர்களாகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள். மாறாக கஷ்டப்பபடுத்துகின்றவர்களாகவோ வெறுப்பூட்டப்படுகின்றவர்களாகவோ அனுப்பப்படவில்லை"  என்று கூறினார்கள் .

இப்படித்தான் நபிஸல் அவர்கள் மற்ற மனிதர்களுடன் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு அணுகினார்கள் இது முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் சரி இப்படி பெறுமானங்களுடனாக நாங்கள் இலங்கை மக்களிடத்தில் அணுகின்ற போதும் ... இலங்கையில் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் சரியான புரிந்துணர்வு ஏற்படும் வய்ப்புகள் அதிகம் உள்ளது. முயற்சிப்போம் ....

No comments:

Post a Comment