Friday, November 20, 2015

10ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மருத்துவர் அலி இப்னு அப்பாஸ்

10ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மருத்துவர் அலி இப்னு அப்பாஸ்

மயிர்த்துளைக் குழாயின் அமைப்பு , தொழிற்பாடு , குழந்தை பிரசவமாகும் விதம் என்பவற்றை ஆராய்ந்து விளக்கமளித்த முதல் மருத்துவர் அலி இப்னு அப்பாஸ் .

10 நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த மருத்துவ மேதைகளுல் இவரும் ஒருத்தர் . இவர் பாரசீக தென்மேற்கில் அஹ்வாஸ் என்ற கிராமத்தில் பிறந்தார் .

இவரின் முழுப் பெயர் அலி இப்னு அப்பாஸ் அல் மஜூஸி என்பதாகும் . அல் மஜூஸி என்பதற்கான காரணம் இவருடைய தந்தை மஜூஸியப் பரம்பரையாக இருந்தார் அதனால்தான் அலி இப்னு அப்பாஸ் அல் மஜூஸி என்று அழைக்கிறார்கள் .

இவரைப் பற்றி Dr. Lecleric  (லெக்லெரிக் ) என்பவர் எழுதுகையில் அலி இப்னு அப்பாஸ் 10 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் .

இவர் புவையித் சுல்தான்களுள் ஒருவரான ((( ஆதுத் தெளலான - (975-982)  )))  ஆதரவில் வாழ்ந்த இவர் மயிர்த்துளைக் குழாயின் அமைப்பு , தொழிற்பாடு , குழந்தை பிரசவமாகும் விதம் என்பவற்றை ஆராய்ந்து விளக்கமளித்த முதல் மருத்துவர் .

இவர் எழுதிய நூல் '' காமில் ஸனாஆ ( பூரணத்துவம் வாய்ந்த மருத்துவ நூல் )   கிதாபுல் மலிக் என்ற பெயராலும் அழைக்ப்பட்ட இன்நூல் சுல்தான் ஆதுத் தெளலாவுக்காக எழுதப்பட்டது .  இந்த நூல் இமாம் ராஸியின் நூலான , அல் ஹாவியை விடவும் அமைப்பில்  சிறந்த இன்நூல்  20 சொற்பொழிவுகளைக் கொண்டது . இதில் முதல்10  சொற்பொழிவுகள்  மருத்துவக் கோட்பாடுகள் பற்றியும் , அடுத்த 10 சொற்பொழிவுகள் மருத்துவச் செயல் முறைகளைப்பற்றியும் கூறுகின்றது .

இந்த நூல்கள் இன்றும் போற்றப்படுகின்றது இன்நூல் 11 நூற்றாண்டின் கடைசி பகுதியில் கொன்ஸ்தந்தைன் எனபவரால் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது .

பின்னர் பாட நூலாக இருந்து அலி இப்னு ஸீனாவின் நூலான கானுன் என்ற நூல் வந்ததும் செல்வாக்கை இழந்தது . தற்போது இந்த நூல் தனி தனி பகுதிகளாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது .

இன்னொரு விடையம் அக்காலத்தில் மருத்துவர்கள் குழந்தை தானாக உண்டாகும் இச்சை வழி முயற்சி ( voluntary effect ) யால்தான் பிரசவம் நிகழ்கிறது என்று என்று பல நூற்றாண்டு நம்பி வந்தார்கள் ஆனால் அலி இப்னு அப்பாஸ் இக்கருத்தை பிழை என்று கூறி ''' பிரசவ நேரத்தின்போது கருப்பைத் தசைகளில் ஏற்படும் எதிர் தாக்கம் ( reaction ) காரணாகவே குழந்தை பிறக்கின்றது என்று நிரூபித்துக் காட்டினார் .

கருப்பை மீது பிரசவ நேரத்தில் ஏனைய உறுப்புக்களால் செலுத்தப்படும் தாக்கத்தால் கருப்பைத் தசைகள் சக்தியை இழந்து சுருங்கி விரிந்து கொண்டே இருக்கும் . இந்த சமையத்தில் தாய் முக்குவதனாலும் சுவாசப்பைகள் கருப்பையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதனால் குழந்தை வெளியே தள்ளப்படுகின்றது என்று நவீன கால மருத்துவர்கள் கூறுகின்றார்கள் .

கருப்பையின்  இயக்கமே குழந்தை பிறப்பதற்குக் காரணம் என்பதை 10 நூற்றாண்டிற்கு முன்பே எமது முஸ்லிம் மருத்துவரான அலி இப்னு அப்பாஸ் நிரூபித்துக் காட்டிவிட்டார் .
இவர் 994  இல் மரணமடைந்தார்.

இதை எமது மேற்குலகிற்கும் எமது முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்துங்கள் .

இறைவன் உங்களுக்கு அருள் புரிவான் !!!

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment