Tuesday, November 24, 2015

பலஸ்தீன் தேசம்

இஸ்ரேலின் 60 ஆண்டு கால ஆக்கிரமிப்பால்  காஸா எரித்துகொண்டிருக்கின்றது .

==============================
A.M. Hafeesul Haq

450 மில்லியன் அறபுகளின் வாசப்படியை  4 மில்லியன் யூதர்களைக் கொண்ட இஸ்ரேல் 60 ஆண்டுகளாக நடத்தி வரும் ஆக்கிரமிப்பும் செய்யும் கொடுமைகளையும் பார்க்கின்ற போது இரத்தம் கொதித்தெழுகின்றது .

கடந்த 2008 டிசம்பர் முதல் - 2009  ஜனவரி வரை சுமார் 22  நாட்கள் இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான விமானத் தாக்குதலால் 1300   பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள் . இன்னும் 6500 பேர் காயப்பட்டார்கள் . அவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களுமே

இன்று காஸாவிலுள்ள 1.6 மில்லியன் மக்களில் 80% மானோர் எவ்வித உதவியுமின்றி சர்வதேச உதவி நிறுவனங்களில் தங்கியுள்ளார்கள் .
   ஐ.நா. வின் பணிப்பாளர் ஜோன் கிங்கின் கருத்துப்படி

அங்கு மருத்துவப் பொருள் இல்லை . பத்திரிகைகள் இல்லை . இறந்தவர்களின் உடலைப் போரத்துவதற்காக துணிகளும் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்கு உண்பதற்கு உணவும் இல்லை . இந்த நிலையை என்னால் வர்ணிக்க முடியாது என்கிறார் .

இன்றும் அதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது  இந்த நிலையை நாங்கள் ஊடகங்களினூடாக உலகுக்கு வெளிக்காட்ட வேண்டும் .  இது காஸா மக்களின் பிரச்சனை மாத்திரமல்ல முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை இதை நாங்கள் எத்திவைக்காமல் வேறு யார் எத்திவைப்பது ?

எனவே எமது சமூகத்திற்கு இஸ்ரேல் செய்கின்ற கொடுமைகளை ஊடகங்களினூடாக காட்டுவோம் அதற்கு சிறந்த கூலியை எமக்கு இறைவன் தருவான் .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment