Thursday, November 5, 2015

அழிக்கப்படும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

இலங்கையில் முஸ்லிம்களின்  பள்ளிவாசல்கள் மற்றும் நகரப்  பொது இடங்கள் புனர்நிர்மானம் செய்வதால் ஏற்படும் விளைவு என்ன ?

கடந்த ஆண்டுகளாக இலங்கை பெளத்த இனவாதிகள் சொன்ன ஒரு கருத்து என்னவென்றால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு என்பது கிடையாது அவர்கள் வரத்தகத்திற்காக வந்த ஒரு குழுவினர் என்று ஊடகங்களில் காரசாரமாகப் பேசினார்கள் .

ஆனால் இதை அனைத்து ஊடகங்கள் அரசாங்கத்தின்  சில மதச்சார்புள்ள அரசியல்வாதிகள் ஏன் பெளத்தர்கள்கூட இந்தக் கருத்துக்கு ஆதரித்தார்கள் . ((
இதில் வேடிக்கை என்னவென்றால் எமது முஸ்லிம் சில அரசியல்வாதிகள் அவர்களின் வார்த்தைக்கு பல்ழித்தார்கள் )) 

இந்த இனவாதிகளின் கருத்துக்கு பாதில் கொடுப்பதில் எமது முஸ்லிம் புத்திஜீவிகள் பதில் கொடுப்பதில் மிகவும் தாமதமானார்கள் ஆதாரம் தெரியாமல் தள்ளாடினார்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன ?

நாங்கள் இலங்கையில் வாழ்ந்துள்ளோம் என்பதற்கான அடையாளத்தை நகர அபிவிருத்தி என்ற பெயரிலும் பள்ளிவாசல் புனர்நிர்மானம் என்ற பெயரிலும் எமது வரலாற்றுத் தடையத்தை அழித்துவிட்டேம் .

எனவே இனியாவது எமது வரலாற்றுத் தடையங்களைப் பாதுகாக்க முயற்சிப்போம் . அப்போதுதான் நாங்கள் இலங்கை முஸ்லிம் பூர்வீகக் குடிகள் என்று தலை நிமிந்து சொல்லலாம் .

இதை முடியுமானால் எமது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவையுங்கள் இறைவன் அருள்புரிவான்

ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் )
Varipathanchenai

No comments:

Post a Comment