Wednesday, December 21, 2016

ஒரு விவசாயின் நிஜமான வாழ்க்கை

எனது கிராமத்து வாழ்கையின் அத்திவாரமே விவசாயம் . இன்று எனது வயலைப் பார்வையிடப் போன போது  .....

உண்மையில் பொறுறோர்கள் தனது பிள்ளைகளை எப்படி கண்ணுக்குள் வைத்து வளக்கின்றார்களோ அதேபோன்று ஒரு விவசாயி இந்த வேளாமைகளை கண்ணும் கருத்துமாக வளர்க்கின்றான்  . ஒரு விவசாயி காலையில் தனது மனைவி மக்களின் முகத்தில் முழிப்பதைவிட வேளாமையின் முகத்திலேதான் அதிகம்  முழிக்கின்றான். 

☞ இது விவசாயிகளாக நாங்கள் கற்றுக் கொண்ட பாடம் .

உங்கள் சகோதரன் ஹபீஸுல் ஹக்

Tuesday, December 20, 2016

துருக்கி இஸ்ரேல் உறவுகளின் பின்னணி என்ன ?

பொதுவாக ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் நிச்சயமாக சர்வதேச உறஉறவுகளைக்  கடைப்பிடித்தேதீர வேண்டும் . அப்போதுதான் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திகள் விச்தரிக்கப்படும் மேலும் அந்நாடு  முன்னேற்றமும்  காணும்.

எனவே இஸ்ரேல் துருக்கி உறவுகளைப்  பொறுத்தவரை இரண்டு விதமான உறவுகளை  உள்ளடக்கியுள்ளது. ஒன்று காஸாவுக்கு உதவும் நோக்குடன் அமைந்த உறவு . இதுவே மிகவும் பிரதானமான காரணம் . இரண்டாவது துருக்கியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கி அமைந்த உறவு .

கடந்த 2010 ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் விதித்திருந்த முற்றுகையை தகர்க்கும் நோக்கில் உதவி பொருட்களுடன் காஸாவை நோக்கி சென்ற துருக்கிய கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றம் அடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் சுமார்  10 துருக்கிய பலஸ்தீன் சமூக ஆர்வலர்கள்  கொல்லப்பட்டனர். பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட   சட்டமூலம் அமலுக்கு வந்து 25 நாட்களில், இஸ்ரேல் 20 மில்லியன் நஷ்டஈடு  வழங்குவதோடு, காஸா மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட காஸா மக்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான  உடன்பாட்டுக்கு துருக்கி விடுத்த மூன்று நிபந்தனைகளில் ஒன்றின்படி இஸ்ரேல் ஏற்கனவே மேற்படி சம்பவத்திற்கு மன்னிப் கேட்டுக்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் துருகியின்  மாவி மர்மரா கப்பல் மீதான இஸ்ரேலின் உயிர்ப்பலி கொண்ட தாக்குதலுக்கு அது 20 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தமது நிபந்தனைகள் ஏற்கப்பட்ட நிலையில் இடம்பெறும் இந்த உடன்படிக்கை துருக்கிக்கு மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகும் என்று துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

என்றாலும் துருக்கியின் மற்றுமொரு நிபந்தனையான காஸா  மீதான முற்றுகையை அகற்ற இஸ்ரேல் இணங்கவில்லை . எனினும் ஏட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கையின்படி துருக்கிற்கு இஸ்ரேலினால்   காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் ஏனைய இராணுவ உற்பத்தியற்ற உதவிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவமனை போன்ற உட்கட்டமைப்பு வேலைகளை செய்யவும் துருக்கிக்கு அனுமதி அளித்தது .  அதேபோன்று காஸாவின் குடிநீர் மற்றும் மின்சக்தி விநியோகத்தில் நீடிக்கும் சிக்கலை சரி செய்யவும் இந்த உடன்படிக்கையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரமே துருகி  கடந்த வருடம் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொதிகள் அடங்கிய மூன்று கப்பல்களை காஸாவுக்கு அனுப்பி வைத்தது . அதேபோல் பலஸ்தீனில் இஸ்ரேலினால் உடைக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களையும் மீண்டும் கட்டித்தருவதாக துருக்கிய பொறீயியலாளர் தூதுக் குழு வாக்கு கொடுத்தது . எனவே துருக்கி மற்றும் இஸ்ரேல் உறவுகளின்  மிகவும் பிரதானமான நோக்கம் கஸாவுக்கான பொருளாதார உதவிகளை வழங்கல் . 

இந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில்தான் இஸ்ரேலில்  ஹைபா காட்டுத்தீ ஏற்பட்ட போது துருக்கி உதவுவதற்கு முன்வந்தது. இதை அறியாத சிலர் துருகிய ஜனாதிபதி அர்துகான் பாவம் செய்துவிட்டார் . இஸ்ரேலுக்கு உதவுவத்கு துருகிய தீ அனைப்பு விமானங்களை அனுப்பியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பொட்ட எழுத்தில் "அர்துகானின் வண்டவாங்கள் என்று " தார்மாராக அபத்தமான முறையில் விமர்சனம் செய்து வருகின்றார்கள் .
கவலை என்னவென்றால் இதுபற்றி அறிவுப் பின்னணி இல்லாதவர்கள் கூட மிகவும் அபத்தமான முறையில் சமூக வலைத்தளத்தில்  விமர்சனம் செய்து வருகின்றார்கள் .

இன்று எமது முஸ்லிம் நாடுகளான எகிப்து இஸ்ரேல் உறவுகள் , சவூதி அமெரிக்கா உறவுகள் , சிரியா ஈரான் உறவுகள் , துபாய் அமெரிக்கா உறவுகள் பற்றி பலராலும் பலவிதமாக பேசப்பட்ட போது இவர்கள் பேசவில்லை வாய் மூடி மெளனியாக இருந்துவிட்டு  இப்போது துருக்கி இஸ்ரேல் வழிகெட்ட உறவு என்று ஸடேட்மென்ட் விடுகின்றார்கள் . எனவே முஸ்லிம் சமூகம் என்றவகையில் எழுதப்படும் விமர்சனங்களை தக்லீத் தனமாக நம்பிபிடாமல் இதுபற்றி பிரசித்தி பெற்றவர்களிடம் தீர விசாரணை செய்து கொள்ளவது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது .

கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல்ஹக் ( பாதிஹி )
Varipathanchenai

Monday, December 19, 2016

நோர்வே மருத்துவரான மாத்ஸ் கில்பட்டால் எழுதப்பட்ட காஸாவில் ஒரு இரவு

2016/12/19. நோர்வே மருத்துவரான மாத்ஸ் கில்பட்டால்  எழுதப்பட்ட  " காஸாவில்  இரவு"  NIGHT IN GAZA என்ற புத்தகம்  . இவர் இதில் காஸாவில் இஸ்ரேல் செய்த  கடைசி யுத்தம்  மற்றும் கஸாவின் களநிலவரங்கள் பற்றியும் எழுதியுள்ளார்

By :- Hafeesul haq

Sunday, December 18, 2016

இலங்கையில் சிரியர்களுக்காக தங்களது ஆதரவை வழங்கிய முதலாவது கல்வி நிறுவனம் அத்பால் எகடமி

2016/12/18.  சிரியாவில் பஷார் அல் அஸத்  மற்றும் அவனது கூட்டுப்படையான ரஷ்யா ஈரான் போன்ற நாடுகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து  இன்று வரிப்பத்தான்சேனை அத்பால் எகடமி  மாணவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர் .

வரிப்பத்தான்சேனையில் வளர்ந்து வரும் இக் கல்வி நிறுவனத்தில் சுமாராக  170 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மேலும் 13 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் இதில் சிரியாவின் தற்காலப்போக்கு சம்பந்தமாக ஒரு விரிவுரை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது .

இந்த ஏற்பாடைப் பொறுத்தவரை இலங்கையில் சிரியர்களுக்காக தங்களது ஆதரவை வழங்கிய முதலாவது கல்வி நிறுவனம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். காரணம் வேறு எந்த கல்வி நிறுவனமும் இப்படியான ஒரு ஏற்பாடை முன்னெடுக்கவிலை. முன்னெடுத்ததாகவும் காணவும் இல்லை .  கவலை என்னவென்றால் எமது அகில இலங்கை ஜம்இயதுல் உலமாகூட இந்த விடையத்தில் கை கட்டி மெளனியக இருக்கின்றது .  அந்தவகையில் வரிப்பத்தான்சேனை அத்தால் எகடமி அதிபருக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் அதன் மாணவர்களுக்கும் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கும் எனது பிரார்த்தனைகள் .

உங்கள் கல்விப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.......

By :- Hafeesul haq
Vatipathanchenai

Wednesday, December 14, 2016

அலப்போ.... அள்ளி வீசுகிறது உம்மத்தின் ஷஹீத்களை...

அலப்போ....
அள்ளி  வீசுகிறது உம்மத்தின் ஷஹீத்களை
உருகிவடிகிறது ஈமானும்
கூடவே....

அழுகிறேன் அளவில்லாமல்
முடியவில்லை
மூடிக்கிக் கொள்ள

ஆளே இல்லாமல்
போனாலும்
அலப்போ
அதிரவைத்து  ஈமானை

உண்ண உணவு மூணு நேரமிங்கு
உறங்க கூட முடியல
அங்கே
அதனாலோ முழுசாவே உறங்குகின்றனர்
ஷஹீத்களாக.....

இருள் சூழும் சிரியாவுக்காய்
வெளிச்சத்தில் வாழும்
நாம் இறைஞ்சுவோம் வாரீர்....

பயங்கர மனிதக்கொலை
பயனற்ற மனிதநேயம்
பகிரங்க தாக்குதல்
பகிர்ந்து கொள்கிறோம்
புகைப்படங்களை
இதுவா நம்  பலம்???

சிசுக்கள்
நசுங்கிப்போக
சிரியமங்கைகள் கசங்கிப்போக
சீரியலில்
நாசமாகிறது நம்
உறவுகள் இங்கு

இந்த வரிகளை கூட வார்க்க முடியவில்லை என்னால்
நடுங்குகின்றன கரங்கள்
அல்லாஹ்  அல்லாஹ் என்று கத்துகின்றது இதழ்கள்
கன்னத்தை நனைக்கும் கண்ணீர் துளிகளை
துடைக்க முடியவில்லை
கண்முன்னே
சிரிய உறவுகளின்
சிவந்த முகங்கள். ...

இலங்கையின் ஈமானுள்ள ஆளுமைகளே
இனியும் ஏன் மெளனம்
இன்றோடு முடிச்சுகள்
அவிழ்த்துவிட்டு

குத்பாக்கள் ஒதுக்கப்படட்டும்
ஒதுங்கிப் போகும் அந்த உம்மத்துக்காய்...

ஓலமிட தேவையுமில்லை
கோஷமிட அவசியமுமில்லை
அறிவூட்டுங்கள்
உம்மத்தை
அநாதரவாய அங்கே
அழுத்தங்கோடு
அநாதையாக
பெண்கள். ..

அநியாயமாய்
சிறைபிடித்து
வேட்டையாடப்படுகின்றனர்
நம் சிரியா வின் பாத்திமாக்கள்.....


அந்த பூமி செந்நீரில்  அமிழும் என்றால்
நம்
ஈமான் கொதித்தெழ வேண்டும்
பிஞ்சுக்களின் 
அலறலுக்கு முடிவுகாண..

இங்கே
இன்னும்
இல்லை காதுக்கெட்டிய
தூரத்திலாவது பிரார்த்தனைகள்...
இப்பொழுதும்
முஸ்லிம் எனும் லேபல் பூண்ட பலர்
மும்முரமாக சினிசிட்டி வாசலிலும்
கேப்ஸி மேசைகளிலும்...
பியுப்டி செலூன்களிலும்
பிசியாய்....

அலப்போ வில் குண்டு வெடித்தால்
கரைந்து போகிறேன் நான்
பலரோடு இது பற்றி பேசும் போது கலைந்து போகின்றனர்
அடுக்களைக்குள். ..

ஓடியாடி மண்ணில் விளையாட வேண்டிய
சிரியாவின் சிட்டுக்கள்
ஓய்ந்து போய்
மண்ணுக்கள்
விதையாகிப் போனதே...

மீசையுள்ள ஈமானே
மீறி வா உன் ஆசைகளை
துஆ எனும் பாசறையில்
பயிற்சிபெறுவோம்
நாமும் தயார்
ஹிஜாப்களோடு....
வாருங்கள் கைகோர்ப்போம்...

இவள்
*நதா அக்ரம்*
*எஹலியகொடை*
*பேராதனை வளாகத்திலிருந்து*
*14/12/2016*
*@7.47pm*


Varipathanchenai news 

Saturday, December 10, 2016

தவறாகப் புரியப்படும் இராஜாங்க அமைச்சர் எம்.எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ்வின் கூற்று .

A.M. Hafeesul haq ( Varipathanchenai )

((( இஸ்லாத்தை  நிந்தித்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவர்)))  என்று பல  பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும்  மிகவும் காரசாரமாக எழுதப்பட்டு வருகின்றது.... இதை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும் . காரணம் இதுவே இலங்கையில்  இனப்பிரச்சினைக்கு அடித்தளமாகிவிடும் .

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியதன் நோக்கம் :-
-------------------------------------------------------------------
முஸ்லிம்கள் வாழ்வது இஸ்லாத்திற்காக அவர்களின் உயிர் மூச்சு இஸ்லாம்.  அந்த இஸ்லாம் மாற்று மதத்தால் அவமதிக்கப்பட்டால் இலங்கை முஸ்லிம்களால்  ஒரு போதும்  ஜீரனிக்க முடியாது . மூவின மக்கள் வாழும் இலங்கையில் ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் அவர்களின் மதத்தைப் பின்பற்றும் பூரண சுதந்திரம் உள்ளது .

இப்படி இருக்கையில் அன்மைக் காலங்களில் ஒரு சில பெளத்த பேரினவாதிகளால் இலங்கை முஸ்லிம் பெரிதும் அவமதிக்கப்பட்டு வருகின்றார்கள்  . இதனை ஜீரனிக்க முடியாமல்தான் மஹிந்தவின் ஆட்சியை அழித்து நல்லாட்டிக்கான ஒரு கூட்டாசியைத் தோற்றுவிக்க 95%மான முஸ்லிம் ஆதரவு வளங்கினார்கள் . கடந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கான காரணம் பெளத்த பேரினவாதத்திற்கு அவை  ஆதரவு வழங்கியமை .

இப்போது உருவாக்கப்பட்ட நல்லாட்சியிலும்  பெளத்த பேரினவாதிகளின் கைகள் மேலோங்கி உள்ளது. எமது  முஸ்லிம் தலைவர்கள் கூட பாராளுமன்றத்தில் தட்டிக் கேட்காமல் மெளனியாக இருக்கின்றார்கள் . இப்படி நல்லாட்ச்சி  அரசு   சட்ட நடவடிக்கை  எடுக்காமல் தொடர்ந்து பெளத்த பேரினவாதிகளுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டே இருப்பார்களேயானால்   முஸ்லிம் சமூகம் வெறுப்படைந்து  தங்களது இருப்பைப் பாதுகாக்க வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ....... அப்போது எங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.   அவர்கள் வெறுப்புடன்  #முதலாவதாக கொல்லுவது  முஸ்லிம் தலைவர்களாக இருக்கும் எங்களைத்தான் என்றுதான் கூறுகின்றார்.

மேலும் இலங்கையில்  ISIS பயங்கரவாதிகள் இருப்பதாக கூறுகின்றார்கள் உண்மையில் ISIS பயங்கரவாதிகளுக்கும் இலங்கை  முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றே அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்துகிறார்  .

இதை மேலோட்டமாக விளங்கிவிட்டு எமது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள்
(( #இஸ்லாத்தை நிந்தித்தால் முஸ்லிம்கள்  ஆயுதம் ஏந்துவர் ))) என்று காரசாரமாக தலைப்பிட்டு  பெளத்த மற்றும் முஸ்லிம் இனவாதத்தை மேலோங்கச் செய்யும் செயற்பாட்டைத் தூண்டி வருகின்றது . இது போதாமைக்கு  இவருடன் இருக்கும் பகைமையைக் எப்போது வெளிப்படுத்துவது என்று எதிர் பார்த்து இருந்த ஒரு சில மாற்றுக் கட்சியின் ஆர்வலர்கள் இவரைப் பற்றி இருந்த நல்ல கருத்துகளை உடைத்து நச்சுக் கருத்துகளையும் பரப்பியும் வருகின்றார்கள் .  எனவே இவற்றை  விளங்கி நாங்கள் ஊடகங்களில் பதிவிட வேண்டும் .

கூறிப்பு :- எப்படி பெதுபல சேனாவால்  மஹிந்த அரசு தோற்றுப்போனதோ அதேபோல்  அமைச்சர் விஜேதாசவினால்  தற்போது நிலை கொண்டிருக்கும் கூட்டாட்டச்சி தகர்த்தெறியும் அபாயம் உள்ளது .இதை கூட்டடாட்ச்சி கரிசினை கொள்வது காலத்திற்குப் பொருத்தமானது என்று நினைக்கிறேன் .

Thursday, December 8, 2016

ஒரு ரோஹிங்கியப் பெண்ணின் சோகக் கண்ணீர்.

A.M. Hafeesul haq ( Varipathanchenai )

இதை நான் எழுதுகின்ற போது எனது கண்கூட கலங்கிவிட்டது... எனது உணர்வுகளும்  பொங்கி மேல் எழுந்தது ... ஸுப்ஹானல்லாஹ் .

இன்று மியன்மாரில் அர்கான் பிரதேசத்தில்  ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் அரசினாலும் , இனவாதிகளாலும்  நடத்தப்பட்டுவரும்  இனவாதத் தாக்குதல்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

இது ஒரு பெண்ணின் நிஜமான கண்ணீர்

 நாங்கள் சாதாரண குடும்பத்தில் உள்ளவர்கள் . எனது கணவர் மத்ரசாவில் ஹதீஸ் பாடத்தில் விரிவுரை செய்கின்றவர். எனது கணவரரின் உழைப்பினூடாகவே நாங்கள் குடும்ப நடத்தி வந்தோம் . இப்போது எனது கணவர் இல்லை .  எனது கணவரை இந்த இனவாத மிருகங்கள் அறுத்துக் கொண்டு விட்டார்கள் .

அதேபோல் எனது ஐந்து வயது  அன்பு மகனான  முஹம்மத் றபீக் இந்த கொடூர மிருகங்கள் என்னுடைய கண்ணுக்கு முன்னால் எரித்து விட்டார்கள் . அவனை அந்த கொடூர மிருகங்கள் எரிக்கும் போது அம்மா .... அம்மா....அம்மா... எரியிதுமா ...என்ட மேல் அலத்துதுமா என்று சத்தமிட்டு அழுதான் .  என்னை அந்த கொடூர மிருகங்கள் மரத்தடியில் கட்டி வைத்துவிட்டார்கள். எனது மகனை நான் எனது கண்ணுக்குள் வைத்து வளர்த்து வந்தேன் . இப்போது  எனது அன்பு மகனையும் , எனது கணவரையும் இழந்து நடு காட்டில் ஒழித்து கொண்டு உணவு இல்லாமல் உடை இல்லாமல் வீடு இல்லாமல் உணர்வு இல்லாத ஜடம் போன்று இருக்கின்றேன் . தொழுவதற்கும் கூட பள்ளிகள் இல்லை இப்போது நாங்கள் வயல் நிலங்களிலும்  மரத்தடியில்தான் தொழுது வருகின்றோம் . 

2016 ஆண்டின்  பின் மியன்மார் அரசும் இனவாதக் கும்பலும் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்தி கரிப்பில்
சுமார் ஐந்து கிராமங்களில் 2000 திற்கும் மேட்பட்ட  வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது . 250 க்கும் மேற்பட்ட அப்பாவி பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் . மேலும் 50 கற்பினிப் பெண்களின் குழந்தைகளை கருவிலையே கொன்றுள்ளார்கள். சுமார் 1000 த்திற்கும் அதிகமானோர் எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் கொல்லப்பட்டுள்ளார்கள் .

இதுதான் அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்களின் சோகக் கண்ணீர் . இவர்களின் சோகத்தில் நாங்களும் கலந்து கொண்டு இறைவனிடம் பிரார்திப்போம் .

தயவு செய்து மற்றவர்களுக்கு எத்திவையுங்கள்

Tuesday, December 6, 2016

தவறாகப் புரியப்பட்ட இஹ்வானிய சிந்தனையும் , ஜமாலுத்தீன் ஆப்கானி (ரஹ்) அவர்களும் .

Hafeesul haq ( Varipathanchenai

☞( சகோதரர் நெளபர் முஹம்மத்  எழுதிய கட்டுரைக்கான  மறுப்பு )

இவர் முஸ்லிம் உலகினதும் இந்தியாவினதும் விடுதலைக்காக உழைத்த மாமனிதர். இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு சிலரால்   இவர் ஷீஆ என்று காரசாமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றார். இது அபத்தமான பபோலி குற்றச்சாட்டு .

ஜமாலுத்தீன் ஆப்கானி ( ரஹ்) அவர்கள் பற்றி சுருக்க அறிமுகம்
-------------------------------------------------------------------

19 நூற்றாண்டில் முஸ்லிம் நாடுகளில்  இந்தியாவும் பிரித்தானியரினதும், ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும்
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்த ஆக்கிரமிப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஐரோப்பியர் தம் ஆளுகையின் கீழிலிருந்த நாடுகளின் மக்களை அடிமைகளாக நடத்தினர். அந்நாடுகளின் வளங்களைச் சுரண்டி ஏப்பமிட்டனர். அவற்றைத் தங்கதங்களுடைய  நாடுகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
ஐரோப்பியரின் இந்த அநியாயத்திற்கும் அபகரிப் புக்கும் பகற் கொள்ளைக்கும் எதிராக சிந்தித்தவர்கள், குரல் கொடுத்தவர்கள் செயற்பட்டவர்கள் போரடியவர்கள் மிகக் கடுமையாகவும்  கொடூரமான முறையிலும் அவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாணத்திலுள்ள காபூல் மாவட்டத்தின் அஸதாபாத் என்ற பிரதேசத்தில் 1838 ஆம் ஆண்டில் ஜமாலுத்தீன் ஆப்கானி பிறந்தார். இவர் தம் ஆரம்பக் கல்வியை உள்ளூரிலேயே பெற்றுக் கொண்டார். என்றாலும் அவர் 18 வயதை அடையும் வரையும் ஆப்கானிஸ்தானிலும், ஈரானிலும் அன்று வாழ்ந்த முக்கிய இமாம்களிடமும், ஆலிம்களிடமும் கல்வியைப் பெற்றுக்கொண்டார்.
இதன் பயனாக குர்ஆனிய கலை, பிக்ஹு, அரபு இலக்கியம், தஸ்ஸவ்ப் கணிதம், தர்க்கவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அவர் ஒரே சமயத்தில் கற்றுத் தேர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சமயக் கல்வியை மேலும் கற்பதற்காக 18 வயதை அடைந்ததும் (1856) இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு பிரித்தானியரின் ஆக்கிரமிப் பினால் இந்தியர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அவர் நேரில் அவதானித்தார். இந்நிலைமையையிட்டு அவர் பெரிதும் மனவேதனை அடைந்தார்.
அந்த வேதனைகளின் வெளிப்பாடாக ஒருநாள் இந்தியர்களைப் பார்த்து உங்களது மில்லியன் கணக்கான மக்கள் ஈக்களாக இருந்திருந்தால் கூட ஆங்கிலேயரின் செவி வழிகளிலேனும் நுழைந்து அவர்களது செவிப்பறைகளைத் துளைத்திருக்கலாம். ஆனால் நிலைமை அவ்வாறு கூட இல்லையே!’ என்று குறிப்பிட்டார் . இவர்
இதேவேளை இந்தியா வுக்கு சமயக் கல்வி கற்பதற் காக வருகை தந்திருந்த ஆப்கானியை பிரித்தானிய உளவாளிகள் அவதானிக்கத் தொடங்கினர். அதனால் ஒரு சந்தர்ப்பத்தில் இவர் ஒரு ரஷ்ய முகவராக இரு க்கலாம் என இந்தியாவுக் கான பிரித்தானியப் பிரதி நிதிகளிடம் அவர்கள் கூறினர். அப்போது பிரித்தானியப் பிரதிநிதிகள், இவர் மத்திய ஆசியப் பிராந்திய மக்களைப் போன்று உடை அணிகின்றார். அரபு, பாரசீகம், துருக்கி ஆகிய மொழிகளில் நன்கு பரிச்சயம்  பெற்றிருந்ததார் .

இந்தியாவில் சுமார் ஒரு வருட காலம் சமயக் கல் வியைக் கற்ற ஆப்கானி 1857ஆம் ஆண்டில் இந்தியா விலிருந்து  ஹஜ் கடமையை நிறைவேற்று வதற்காக மக்காவுக்குப் பயணமானார். அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டு  தாயகம் திரும்பினார்.
அங்கு ஆட்சியாளராக அமீர் தோஸ்ட் முஹம்மத் கான் இருந்தார். அவர் ஆப்கானிக்கு அவரது அவையில் முக்கிய பதவியொன்றை வழங்கினார். அப்பதவியைக் கொண்டு அவர் சமூக அறிவியல் மேம்பாட்டுக்காக உழைத்தார்.
என்றாலும் முஹம்மத் கானின் வபாத்தைத் தொடர்ந்து அவுஸ்ஸலாம் 1866ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் ஆப்கானிக்குப் பிரதமர் பதவி வழங்கினார். என்றாலும் அங்கு அதிகாரச் சண்டை தலை தூக்கியது. அதனைச் சமாதான வழி களில் தீர்த்து வைப்பதற்கு ஆப்கானி முயற்சி செய்தார். அம்முயற்சிகள் பலனளிக்காததால், அதிகாரச் சண்டையில் வெறுப்படைந்து 1869 ஆம் ஆண்டில் ஹஜ் செய்யச் செல்வ தாகக் கூறி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் மரியாதையாகவும் கண்ணியமாகவும் அவர் நடத்தப் பட்டார். என்றாலும் இந்திய அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடுவதை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தடை செய்தனர். அத்தோடு இந்திய முஸ்லிம் தலைவர்களைச் சந்திப் பதற்கும் ஆப்கானிக்கு இடமளிக்கப் படவில்லை. இந்தக் கட்டுண்ட நிலையில் வெறுப்படைந்த அவர் ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் எகிப்துக்குப் பயணமானார். அச்சமயத்தில் எகிப்தும் பிரித்தானியரின் ஆளுமைக்கே உள்ளாகி இருந்தது. இவர் கெய்ரோவில் வீடொன்றில்  தங்கி இருந்தார். அங்கிருந்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கடி
பல்கலைக்கழக விரிவுரையாளர்களை யும் , மாணவர்களையும் அவர் சந்தித்து வந்தார். அதேநேரம் தாம் தங்கியிருந்த வீட்டிற்கு  தம்மைச் சந்திக்க வந்தவர்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபடுவதன் அவசியம் குறித்து அவர் சொற்பொழிவு களையும் நிகழ்த்தினார்.  அல் – குர்ஆன் மற்றும்
ஸு ன்னாவின் அடிப்படையிலிருந்து முஸ்லிம்கள் தூர மாகியதே அவர்களது வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம் என்றும்  அதனால் இஸ்லாமிய வாழ்வுக்குத் திரும்புதலே முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கும், சுபீட்சத்திற்கும் சரியான தீர்வாக இருக்கும் என்றும்
அதேநேரம் இஸலாமிய எழுச்சி என்பது தனியே ஆன்மீக ரீதியாக மாத்திரமல்லாமல்  சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஏற்படவேண்டும். அதுவே முழுமை யானதாக இருக்கும். அதனால் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த செயற்பாடு மிக மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.

இவரது கருத்துகளால் அதிகமானோர்  ஆகரோஷிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்  இளைஞர்களாவர்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் ஆப்கானி (ரஹ்) அவர்களுக்கும், முஹம்மத் அப்துஹுவுக்கு மிடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. ஆப்கானியின் கருத்துக்களின் பால் முஹம்மத் அப்துஹு பெரிதும் ஈர்க்கப்பட்டார். அதனால் அவர் ஆப்கானியின் மாணவரானார்.
இதேவேளை ஆப்கானியின் செயற்பாடு களை அவதானித்து வந்த பிரித்தானிய உளவாளிகள்  அவரை எகிப்திலிருந்து வெளியேற்றுமாறு பிரித்தானியாவின் எகிப்துக்கான ஆளுநர் தெளபீக் பாஷாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதற்கேற்ப அவர் 1870 ஆம் ஆண்டில் எகிப்திலிருந்து வெளியாகி துருக்கியின் ஸ்தான்புலுக்குப் பயணமானார். அங்கு துருக்கிய ஆட்சியாளர் அப்துல் ஹமீத், கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் இவருக்கு மகத்தான வரவேற்பை அளித்தனர்.

அத்தோடு இவருக்கு கல்வி ஆணைக் குழு உறுப்பினர் பதவியும்  பள்ளிவாசல் இமாம் பதவியும் வழங்கப் பட்டன. ஆப்கானி எப்போதும் தமது கருத்துக்களை ஒளிவுமறைவின்றி முன்வைக்கக் கூடியவராக இருந்தார். அவரது கருத்துக்கள் அறிவியல் எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கின. அதனால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதே நிலைமைதான் துருக்கியிலும் ஏற்பட்டது.
இதன் விளைவாக துருக்கியின் ஷெய்குல் இஸ்லாத்திற்கு ஆப்கானி மீது பொறாமை ஏற்பட்டது. அது எதிர்ப்புணர் வாக வெளிப்பட்டது. அவரை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் துருக்கியின் தாருல் புறூன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஆப்கானி சிறப்புச் சொற்பொழி வொன்றை நிகழ்த்தினார். இச்சொற்பொழி வில் அவர் பயன்படுத்திய சில சொற்களு க்கு வேண்டுமென்றே திரித்து விளக்க மளிக்கப்பட்டது. என்றாலும் ஆப்கானி அவற்றுக்கும் பத்திரிகைகள் வாயிலாகத் தெளிவாக பதிலளித்தார்.

ஆயினும் நாட்டின் பாதுகாப்பு, ஒழுங்கு, அமைதி என்பவற்றைக் காரணம் காட்டி ஆப்கானி 1871 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி துருக்கியிலிருந்து வெளியேற் றப்பட்டார். அங்கிருந்து அவர் மீண்டும் எகிப்துக்கே திரும்பினார். இதனை அறிந்ததும் அறிவுத்தாகம் கொண்டவர்கள் அவரை அணுகி கற்கத் தொடங்கினார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரித்தானிய காலனி யாதிக்கத்திற்கு எதிரான உணர்வை ஆப்கானி மாணவர்கள் மத்தியில் விதைக் கின்றார் என்று குற்றம் சாட்டி அவர் அப்போதைய எகிப்துக்கான பிரித்தானிய ஆளுநர் கதீவ் இஸ்மாயிலின் உத்தரவின் பேரில் இந்தியாவின் ஹைதராபாத்துக்கு நாடு கடத்தப்பட்டார். இங்கிருந்த சமயமே அவர் ‘சடவாதத்திற்கு ஓர் மறுப்பு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
இதேவேளையில் எகிப்தில் ஒராபிபாஷா தலைமையில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இளைஞர் கிளர்ச்சி வெடித்தது. அக்கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்படும் வரையும் ஆப்கானி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டதும் அதனை முன்னின்று மேற்கொண்ட ஒராபிபாஷா இலங்கைக்கும், முஹம்மது அப்துஹு பிரான்ஸ¤க்கும் பிரித்தானிய ஆக்கிரமிப் பாளர்களால் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தடுப்புக் காவலிலி ருந்து விடுதலையான ஆப்கானி நேரே லண்டனுக்குப் பயணமானார். அங்கு சிறிது காலம் தங்கியிருந்து விட்டு பாரிஸக்குச் சென்றார். இவர் பாரிஸில் தங்கி இருந்த சமயம்தான் முஹம்மது அப்துஹுவும் நாடு கடத்தப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். அங்கு இருவரும் ஒன்றிணைந்து ஐரோப்பிய ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக முஸ்லிம் உலகை ஒன்றிணைத்தல்  கிலாபத்தைப் பாதுகாத்தல் என்ற இரு நோக்கங்களையும் அடிப்படையாக வைத்து அல்-அர்வதுல் வுஸ்கா என்ற பெயரில் பத்திரிகையொன்றை வெளியிட்டனர்.

இப்பத்திரிகையின் முதலாவது இதழ் 1884ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி வெளி யானது. இப்பத்திரிகையின் நோக்கத்தையும் இலக்கையும் அறிந்துகொண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அதன் விற்பனையை எகிப்திலும், இந்தியாவிலும் தடை செய்தனர். அத்தடையையும் மீறி அதனை வாங்கிப் படித்தவர்கள் கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் காரணத்தினால் இப்பத்திரிகை 18 இதழ்களுடன் நின்று போனது. ஆகவே ஆப்கானி பாரிஸிலிரு ந்து ரஷ்யாவுக்குப் பயணமானார்.
பிரித்தானியா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் சதிகளையும், சூழ்ச்சிகளையும் அவர் ரஷ்ய மொழியில் பகிரங்கப்படுத்தினார். ரஷ்யப் பத்திரிகை களிலும் எழுதினார். என்றாலும் சூடான் நாட்டு விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகளுடன் பேசுவதற்காக 1892 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் பிரித்தானியாவு க்கு வந்தார். சூடான் விவகாரம் தொடர்பாக வும் அவர் மேற்கொண்ட பேச்சுக்களும் பலனளிக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் துருக்கி மன்னர் அப்துல் ஹமீத், துருக்கியில் வந்து தங்குமாறு ஆப்கானிக்கு 1892 ஆம் ஆண்டில் எழுத்து மூலம் அழைப்பு விடுத்தார். ஆப்கானியின் சிந்தனை துருக்கியின் மேம்பாட்டுக்கும், சுபீட்சத்திற் கும் வித்திடும் என்பதே இந்த அழைப்பின் பிரதான பின்னணி.அந்த வகையில் மன்னரின் அழைப்பை ஏற்று துருக்கிக்குச் சென்ற ஆப்கானி மன்னருடன் இணைந்து உலக முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்ட மொன்றை வகுத்தார். அத்திட்டத்தின் அடிப்படையிலான முதலாவது கூட்டம் ஸ்தான்பூலில் நடைபெற்றது. என்றாலும் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற முன்னரே அவர் 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா…

அன்னாரின் ஜனாஸா ஸ்தான்பூலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. என்றாலும் 1944 ஆம் ஆண்டில் ஆப்கானிய அரசு விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப அன்னாரது ஜனாஸா அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு காபூல் பல்கலைக்கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆகவே ஆழ்ந்த உறக்கத்திலிருந்த முஸ்லிம் உலகை விழிப்படையச் செய்ய வும், மேற்குலகின் ஆக்கிரமிப்பிலிருந்து அதன் விடுதலைக்காகவும், முஸ்லிம் உலக ஐக்கியத்திற்காகவும், இஸ்லாமிய சிந்தனைப் புனர்நிர்மாணத்திற்கும் இரவு – பகலாக தன் இறுதி மூச்சுவரை உழைத்தவர் என்ற பெருமை ஜமாலுத்தீன் ஆப்கானி (ரஹ்) அவர்களையே சாரும்.
இதற்காக அவர் தன் சிந்தனை, எழுத்து, பேச்சு ஆகிய ஆற்றல்களையும் முழுமை யாக பயன்படுத்தினார்.

இதை அறியாத எமது Face book  முப்திகள் இவர்  ஒரு ஷீஆ ஆசிரியரிடம்  படித்தார் ஆகவே இவரும் இவர் சார்ந்த இஹ்வானுல் முஸ்லிம் என்ற இயக்கமும் வழிகெட்ட  ஷீஆக்கள் என்று அபத்தமான முறையில்  பத்வா வளங்குவது தமது மோட்டுத்தனத்தைக் காட்டும்  .  கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பெளத்த விரிவுரையாளரிடம் ஒரு முஸ்லிம் ஒருவர் படித்தால் அவன் பெளத்தனாக முடியாது . இதைப் பாரபக்கும் போது வேடிக்கையாக உள்ளது  . அது போதாமைக்கு விமர்சனம் செய்யப்பட்ட அறிஞர் யார் என்றே தெரியாது அவர்கள்கூட ஷீஆ பட்ட கொடுக்கிறார்கள் . ஸுப்ஹானல்லாஹ் !

இறைவன் திருமறையில் கூறுகின்றான்  " ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று
  ﴿ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺇِﻥْ ﺟَﺎﺀَﻛُﻢْ.. ﺇِﻥْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻓَﺎﺳِﻖٌ ﺑِﻨَﺒَﺄٍ ﻓَﺘَﺒَﻴَّﻨُﻮﺍ )
இப்படியான அறிவுத்தரம் உள்ள அறிஞர்களை விமர்சனம் செய்வதற்கு முன் நாங்கள் இது பற்றி தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் . சகோதரர் நெளபர்  கூறினார் என்றால் சரியாகத்தான் இருக்கும் என்று தக்லீத் என்ற மோட்டுத்தனமாக இருக்காமல் சற்று அவர் எழுதிய புத்தகங்களையும் , அவர் பற்றி வந்த கட்டுரைகளையும் வாசித்து விமர்சனம்  செய்ய  வேண்டும் .

எனவே சகோதரர் நெளபர் நீங்கள் எந்த நோக்கத்திற்கு எழுதினீர்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் நீங்கள் பதிவிட்ட ஆக்கமும்  சொன்ன விதமும் சுமத்தப்பட்ட குற்றமும் அபத்தமானது. எனவும் இது போன்ற பதிவுகளை நீங்கள் தவிர்ப்பது காலத்திற்குப் பொருத்தமானது .

குறிப்பு :- சமூக வலைத்தளத்தில் நாங்கள்  பதிவிடும் பதிவுகளை அனைவரும் வாசிப்பார்கள்.  எனவே நாங்கள் பிழையான பதிவுகளை இட்டு அவர்களையும் சிந்தனைக் குழப்பத்திற்கு திசை திருப்பி நரகத்தின்பல் கொண்டு செல்லாமல் சீரான தூய்மையான அகீதாவின்பால் கொண்டு செல்ல முயற்சிப்போம்  இது எனது உபதேசம் .

இறைவன்
அன்னாரின் தவறு களையும், குறைகளையும், பிழைகளையும்  மன்னித்து அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை வழங்குவானாக........

மேலதிக தகவலுக்கு  இவற்றையும் வாசிக்க முடியும்
http://www.almaktabah.net/vb/archive/index.php/t-108431.html