Thursday, December 1, 2016

சிரியாவின் கிழக்கு அலப்போவில் இருந்து 30 ஆயிரம் சிரியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

-Hafeesul haq -( Varipathanchenai)

கடந்த இரண்டு வாரத்திற்குள்ளாலும் சிரியாவில் பஷார் மற்றும் ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதல்களினால் சிரியாவின் ஹல் பிரதேசம் மற்றும் அலப்போ நகரில் இருந்தும் சிரியர்கள் தொடர்ந்தும் புலம் பேர்ந்த வண்ணம் உள்ளனர் .

✍ கடந்தண்டு வாரத்தினுள் ரஷ்யா மற்றும் பஷார் நடத்திய தாக்குதல்

01 ☞ கடந்த 2016/11/26. அன்று சிரியா ஹல்ப் பிரதேசத்தில்  பஷார் அல் அஸதின் கூட்டுப்படை நடத்தி கொடூரமான விமானத்தாக்குதலினால் சுமாராக 500 பேர் ஷஹீதாக்கப்பட்டதுடன் மேலும் 1500 பேர் காயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது.

02 ☞ மேலும் கடந்த 2016/11/27. நேற்று காலை  சிரியாவின் ஹல்ப் பிரதேசத்தில் ரஷ்யா விமானம் நடத்திய கொடூரமான தாக்குதலினான் 46 க்கும் அதிகமானோர் ஷஹீதாக்கப்பட்டதுடன் மேலும் 300 பேர் படு காயமடைந்துள்ளனர் .   

03☞ மேலும் கடந்த 2016/11/30. சிரியாவில் இரண்டாவது நாளாகவும் சிரியார்களுக்கு எதிராக பஷாரின் கூட்டுப்படை நடத்திய கொடூர விமானத்தாக்குதல் . இதில் 49 பேருக்கும் அதிகமானோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்கள் . இது சிரியாவை விட்டு  புலம்பேர்ந்து கொண்டு சென்ற  அப்பாவி பொதுமக்கள்  என்பது குறிப்பிடத்தக்கது .

இதன் பிரகாரமே சிரியர்கள் தொடர்ந்தும் புலம்பேர்ந்த வண்ணம் உள்ளனர் .
சிரியாவுக்கான  ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்ரும் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆலோசகருமான Egeland கூறும்போது கடந்த வியாழக்கிழமை சிரியாவின்  அலெப்போ கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை  கடந்த சில நாட்களில்  27 ஆயிரம்க்கும் அதிகமான மக்கள்   மோதல்களில் இருந்து தப்புவதற்காக வேறு நாடுகளுக்கும் சிரியாவில் உள்நாடுகளுக்கும் புலம் பேர்ந்துள்ளதாகவும் அது தற்போது 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளாகவும் அவர் குறிப்பிட்டார் .

மேலும் அவர்  கூறுகையில் அலப்போவில் இருந்து  இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 400 ஆயிரம் மக்களை அடைந்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள்சபை சிரியாப்  போரை சமாதானத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் தற்போது அகதிகளாகப் புலம்பேர்ந்தவர்களையும் தற்போது முகாம்களில் கஷ்டத்துடன்  வாழ்வோருக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் மனிதாவிமான உதவிகளையு ஐக்கிய நாடுகள் சபை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதை  உங்களுக்குள் மாத்திரம் வைத்து புதைத்துவிடாமல் எமது மற்ற  சகோதரர்களுக்கும் எத்திவைத்து எமது சிரியா உடன் பிற்ப்புகளுக்காகப் பிரார்த்தனை புரியக் கூறுங்கள் . இதுதான் நாம் எமது சிரியா மக்களுக்குச் செய்கின்ற பெரும் உதவி .

No comments:

Post a Comment