பொதுவாக ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் நிச்சயமாக சர்வதேச உறஉறவுகளைக் கடைப்பிடித்தேதீர வேண்டும் . அப்போதுதான் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திகள் விச்தரிக்கப்படும் மேலும் அந்நாடு முன்னேற்றமும் காணும்.
எனவே இஸ்ரேல் துருக்கி உறவுகளைப் பொறுத்தவரை இரண்டு விதமான உறவுகளை உள்ளடக்கியுள்ளது. ஒன்று காஸாவுக்கு உதவும் நோக்குடன் அமைந்த உறவு . இதுவே மிகவும் பிரதானமான காரணம் . இரண்டாவது துருக்கியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கி அமைந்த உறவு .
கடந்த 2010 ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் விதித்திருந்த முற்றுகையை தகர்க்கும் நோக்கில் உதவி பொருட்களுடன் காஸாவை நோக்கி சென்ற துருக்கிய கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றம் அடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் சுமார் 10 துருக்கிய பலஸ்தீன் சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சட்டமூலம் அமலுக்கு வந்து 25 நாட்களில், இஸ்ரேல் 20 மில்லியன் நஷ்டஈடு வழங்குவதோடு, காஸா மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட காஸா மக்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான உடன்பாட்டுக்கு துருக்கி விடுத்த மூன்று நிபந்தனைகளில் ஒன்றின்படி இஸ்ரேல் ஏற்கனவே மேற்படி சம்பவத்திற்கு மன்னிப் கேட்டுக்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் துருகியின் மாவி மர்மரா கப்பல் மீதான இஸ்ரேலின் உயிர்ப்பலி கொண்ட தாக்குதலுக்கு அது 20 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தமது நிபந்தனைகள் ஏற்கப்பட்ட நிலையில் இடம்பெறும் இந்த உடன்படிக்கை துருக்கிக்கு மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகும் என்று துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
என்றாலும் துருக்கியின் மற்றுமொரு நிபந்தனையான காஸா மீதான முற்றுகையை அகற்ற இஸ்ரேல் இணங்கவில்லை . எனினும் ஏட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கையின்படி துருக்கிற்கு இஸ்ரேலினால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் ஏனைய இராணுவ உற்பத்தியற்ற உதவிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவமனை போன்ற உட்கட்டமைப்பு வேலைகளை செய்யவும் துருக்கிக்கு அனுமதி அளித்தது . அதேபோன்று காஸாவின் குடிநீர் மற்றும் மின்சக்தி விநியோகத்தில் நீடிக்கும் சிக்கலை சரி செய்யவும் இந்த உடன்படிக்கையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரமே துருகி கடந்த வருடம் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொதிகள் அடங்கிய மூன்று கப்பல்களை காஸாவுக்கு அனுப்பி வைத்தது . அதேபோல் பலஸ்தீனில் இஸ்ரேலினால் உடைக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களையும் மீண்டும் கட்டித்தருவதாக துருக்கிய பொறீயியலாளர் தூதுக் குழு வாக்கு கொடுத்தது . எனவே துருக்கி மற்றும் இஸ்ரேல் உறவுகளின் மிகவும் பிரதானமான நோக்கம் கஸாவுக்கான பொருளாதார உதவிகளை வழங்கல் .
இந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில்தான் இஸ்ரேலில் ஹைபா காட்டுத்தீ ஏற்பட்ட போது துருக்கி உதவுவதற்கு முன்வந்தது. இதை அறியாத சிலர் துருகிய ஜனாதிபதி அர்துகான் பாவம் செய்துவிட்டார் . இஸ்ரேலுக்கு உதவுவத்கு துருகிய தீ அனைப்பு விமானங்களை அனுப்பியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பொட்ட எழுத்தில் "அர்துகானின் வண்டவாங்கள் என்று " தார்மாராக அபத்தமான முறையில் விமர்சனம் செய்து வருகின்றார்கள் .
கவலை என்னவென்றால் இதுபற்றி அறிவுப் பின்னணி இல்லாதவர்கள் கூட மிகவும் அபத்தமான முறையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகின்றார்கள் .
இன்று எமது முஸ்லிம் நாடுகளான எகிப்து இஸ்ரேல் உறவுகள் , சவூதி அமெரிக்கா உறவுகள் , சிரியா ஈரான் உறவுகள் , துபாய் அமெரிக்கா உறவுகள் பற்றி பலராலும் பலவிதமாக பேசப்பட்ட போது இவர்கள் பேசவில்லை வாய் மூடி மெளனியாக இருந்துவிட்டு இப்போது துருக்கி இஸ்ரேல் வழிகெட்ட உறவு என்று ஸடேட்மென்ட் விடுகின்றார்கள் . எனவே முஸ்லிம் சமூகம் என்றவகையில் எழுதப்படும் விமர்சனங்களை தக்லீத் தனமாக நம்பிபிடாமல் இதுபற்றி பிரசித்தி பெற்றவர்களிடம் தீர விசாரணை செய்து கொள்ளவது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது .
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல்ஹக் ( பாதிஹி )
Varipathanchenai
No comments:
Post a Comment