Tuesday, December 6, 2016

தவறாகப் புரியப்பட்ட இஹ்வானிய சிந்தனையும் , ஜமாலுத்தீன் ஆப்கானி (ரஹ்) அவர்களும் .

Hafeesul haq ( Varipathanchenai

☞( சகோதரர் நெளபர் முஹம்மத்  எழுதிய கட்டுரைக்கான  மறுப்பு )

இவர் முஸ்லிம் உலகினதும் இந்தியாவினதும் விடுதலைக்காக உழைத்த மாமனிதர். இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு சிலரால்   இவர் ஷீஆ என்று காரசாமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றார். இது அபத்தமான பபோலி குற்றச்சாட்டு .

ஜமாலுத்தீன் ஆப்கானி ( ரஹ்) அவர்கள் பற்றி சுருக்க அறிமுகம்
-------------------------------------------------------------------

19 நூற்றாண்டில் முஸ்லிம் நாடுகளில்  இந்தியாவும் பிரித்தானியரினதும், ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும்
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்த ஆக்கிரமிப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஐரோப்பியர் தம் ஆளுகையின் கீழிலிருந்த நாடுகளின் மக்களை அடிமைகளாக நடத்தினர். அந்நாடுகளின் வளங்களைச் சுரண்டி ஏப்பமிட்டனர். அவற்றைத் தங்கதங்களுடைய  நாடுகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
ஐரோப்பியரின் இந்த அநியாயத்திற்கும் அபகரிப் புக்கும் பகற் கொள்ளைக்கும் எதிராக சிந்தித்தவர்கள், குரல் கொடுத்தவர்கள் செயற்பட்டவர்கள் போரடியவர்கள் மிகக் கடுமையாகவும்  கொடூரமான முறையிலும் அவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாணத்திலுள்ள காபூல் மாவட்டத்தின் அஸதாபாத் என்ற பிரதேசத்தில் 1838 ஆம் ஆண்டில் ஜமாலுத்தீன் ஆப்கானி பிறந்தார். இவர் தம் ஆரம்பக் கல்வியை உள்ளூரிலேயே பெற்றுக் கொண்டார். என்றாலும் அவர் 18 வயதை அடையும் வரையும் ஆப்கானிஸ்தானிலும், ஈரானிலும் அன்று வாழ்ந்த முக்கிய இமாம்களிடமும், ஆலிம்களிடமும் கல்வியைப் பெற்றுக்கொண்டார்.
இதன் பயனாக குர்ஆனிய கலை, பிக்ஹு, அரபு இலக்கியம், தஸ்ஸவ்ப் கணிதம், தர்க்கவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அவர் ஒரே சமயத்தில் கற்றுத் தேர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சமயக் கல்வியை மேலும் கற்பதற்காக 18 வயதை அடைந்ததும் (1856) இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு பிரித்தானியரின் ஆக்கிரமிப் பினால் இந்தியர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அவர் நேரில் அவதானித்தார். இந்நிலைமையையிட்டு அவர் பெரிதும் மனவேதனை அடைந்தார்.
அந்த வேதனைகளின் வெளிப்பாடாக ஒருநாள் இந்தியர்களைப் பார்த்து உங்களது மில்லியன் கணக்கான மக்கள் ஈக்களாக இருந்திருந்தால் கூட ஆங்கிலேயரின் செவி வழிகளிலேனும் நுழைந்து அவர்களது செவிப்பறைகளைத் துளைத்திருக்கலாம். ஆனால் நிலைமை அவ்வாறு கூட இல்லையே!’ என்று குறிப்பிட்டார் . இவர்
இதேவேளை இந்தியா வுக்கு சமயக் கல்வி கற்பதற் காக வருகை தந்திருந்த ஆப்கானியை பிரித்தானிய உளவாளிகள் அவதானிக்கத் தொடங்கினர். அதனால் ஒரு சந்தர்ப்பத்தில் இவர் ஒரு ரஷ்ய முகவராக இரு க்கலாம் என இந்தியாவுக் கான பிரித்தானியப் பிரதி நிதிகளிடம் அவர்கள் கூறினர். அப்போது பிரித்தானியப் பிரதிநிதிகள், இவர் மத்திய ஆசியப் பிராந்திய மக்களைப் போன்று உடை அணிகின்றார். அரபு, பாரசீகம், துருக்கி ஆகிய மொழிகளில் நன்கு பரிச்சயம்  பெற்றிருந்ததார் .

இந்தியாவில் சுமார் ஒரு வருட காலம் சமயக் கல் வியைக் கற்ற ஆப்கானி 1857ஆம் ஆண்டில் இந்தியா விலிருந்து  ஹஜ் கடமையை நிறைவேற்று வதற்காக மக்காவுக்குப் பயணமானார். அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டு  தாயகம் திரும்பினார்.
அங்கு ஆட்சியாளராக அமீர் தோஸ்ட் முஹம்மத் கான் இருந்தார். அவர் ஆப்கானிக்கு அவரது அவையில் முக்கிய பதவியொன்றை வழங்கினார். அப்பதவியைக் கொண்டு அவர் சமூக அறிவியல் மேம்பாட்டுக்காக உழைத்தார்.
என்றாலும் முஹம்மத் கானின் வபாத்தைத் தொடர்ந்து அவுஸ்ஸலாம் 1866ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் ஆப்கானிக்குப் பிரதமர் பதவி வழங்கினார். என்றாலும் அங்கு அதிகாரச் சண்டை தலை தூக்கியது. அதனைச் சமாதான வழி களில் தீர்த்து வைப்பதற்கு ஆப்கானி முயற்சி செய்தார். அம்முயற்சிகள் பலனளிக்காததால், அதிகாரச் சண்டையில் வெறுப்படைந்து 1869 ஆம் ஆண்டில் ஹஜ் செய்யச் செல்வ தாகக் கூறி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் மரியாதையாகவும் கண்ணியமாகவும் அவர் நடத்தப் பட்டார். என்றாலும் இந்திய அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடுவதை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தடை செய்தனர். அத்தோடு இந்திய முஸ்லிம் தலைவர்களைச் சந்திப் பதற்கும் ஆப்கானிக்கு இடமளிக்கப் படவில்லை. இந்தக் கட்டுண்ட நிலையில் வெறுப்படைந்த அவர் ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் எகிப்துக்குப் பயணமானார். அச்சமயத்தில் எகிப்தும் பிரித்தானியரின் ஆளுமைக்கே உள்ளாகி இருந்தது. இவர் கெய்ரோவில் வீடொன்றில்  தங்கி இருந்தார். அங்கிருந்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கடி
பல்கலைக்கழக விரிவுரையாளர்களை யும் , மாணவர்களையும் அவர் சந்தித்து வந்தார். அதேநேரம் தாம் தங்கியிருந்த வீட்டிற்கு  தம்மைச் சந்திக்க வந்தவர்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபடுவதன் அவசியம் குறித்து அவர் சொற்பொழிவு களையும் நிகழ்த்தினார்.  அல் – குர்ஆன் மற்றும்
ஸு ன்னாவின் அடிப்படையிலிருந்து முஸ்லிம்கள் தூர மாகியதே அவர்களது வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம் என்றும்  அதனால் இஸ்லாமிய வாழ்வுக்குத் திரும்புதலே முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கும், சுபீட்சத்திற்கும் சரியான தீர்வாக இருக்கும் என்றும்
அதேநேரம் இஸலாமிய எழுச்சி என்பது தனியே ஆன்மீக ரீதியாக மாத்திரமல்லாமல்  சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஏற்படவேண்டும். அதுவே முழுமை யானதாக இருக்கும். அதனால் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த செயற்பாடு மிக மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.

இவரது கருத்துகளால் அதிகமானோர்  ஆகரோஷிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்  இளைஞர்களாவர்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் ஆப்கானி (ரஹ்) அவர்களுக்கும், முஹம்மத் அப்துஹுவுக்கு மிடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. ஆப்கானியின் கருத்துக்களின் பால் முஹம்மத் அப்துஹு பெரிதும் ஈர்க்கப்பட்டார். அதனால் அவர் ஆப்கானியின் மாணவரானார்.
இதேவேளை ஆப்கானியின் செயற்பாடு களை அவதானித்து வந்த பிரித்தானிய உளவாளிகள்  அவரை எகிப்திலிருந்து வெளியேற்றுமாறு பிரித்தானியாவின் எகிப்துக்கான ஆளுநர் தெளபீக் பாஷாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதற்கேற்ப அவர் 1870 ஆம் ஆண்டில் எகிப்திலிருந்து வெளியாகி துருக்கியின் ஸ்தான்புலுக்குப் பயணமானார். அங்கு துருக்கிய ஆட்சியாளர் அப்துல் ஹமீத், கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் இவருக்கு மகத்தான வரவேற்பை அளித்தனர்.

அத்தோடு இவருக்கு கல்வி ஆணைக் குழு உறுப்பினர் பதவியும்  பள்ளிவாசல் இமாம் பதவியும் வழங்கப் பட்டன. ஆப்கானி எப்போதும் தமது கருத்துக்களை ஒளிவுமறைவின்றி முன்வைக்கக் கூடியவராக இருந்தார். அவரது கருத்துக்கள் அறிவியல் எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கின. அதனால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதே நிலைமைதான் துருக்கியிலும் ஏற்பட்டது.
இதன் விளைவாக துருக்கியின் ஷெய்குல் இஸ்லாத்திற்கு ஆப்கானி மீது பொறாமை ஏற்பட்டது. அது எதிர்ப்புணர் வாக வெளிப்பட்டது. அவரை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் துருக்கியின் தாருல் புறூன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஆப்கானி சிறப்புச் சொற்பொழி வொன்றை நிகழ்த்தினார். இச்சொற்பொழி வில் அவர் பயன்படுத்திய சில சொற்களு க்கு வேண்டுமென்றே திரித்து விளக்க மளிக்கப்பட்டது. என்றாலும் ஆப்கானி அவற்றுக்கும் பத்திரிகைகள் வாயிலாகத் தெளிவாக பதிலளித்தார்.

ஆயினும் நாட்டின் பாதுகாப்பு, ஒழுங்கு, அமைதி என்பவற்றைக் காரணம் காட்டி ஆப்கானி 1871 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி துருக்கியிலிருந்து வெளியேற் றப்பட்டார். அங்கிருந்து அவர் மீண்டும் எகிப்துக்கே திரும்பினார். இதனை அறிந்ததும் அறிவுத்தாகம் கொண்டவர்கள் அவரை அணுகி கற்கத் தொடங்கினார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரித்தானிய காலனி யாதிக்கத்திற்கு எதிரான உணர்வை ஆப்கானி மாணவர்கள் மத்தியில் விதைக் கின்றார் என்று குற்றம் சாட்டி அவர் அப்போதைய எகிப்துக்கான பிரித்தானிய ஆளுநர் கதீவ் இஸ்மாயிலின் உத்தரவின் பேரில் இந்தியாவின் ஹைதராபாத்துக்கு நாடு கடத்தப்பட்டார். இங்கிருந்த சமயமே அவர் ‘சடவாதத்திற்கு ஓர் மறுப்பு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
இதேவேளையில் எகிப்தில் ஒராபிபாஷா தலைமையில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இளைஞர் கிளர்ச்சி வெடித்தது. அக்கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்படும் வரையும் ஆப்கானி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டதும் அதனை முன்னின்று மேற்கொண்ட ஒராபிபாஷா இலங்கைக்கும், முஹம்மது அப்துஹு பிரான்ஸ¤க்கும் பிரித்தானிய ஆக்கிரமிப் பாளர்களால் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தடுப்புக் காவலிலி ருந்து விடுதலையான ஆப்கானி நேரே லண்டனுக்குப் பயணமானார். அங்கு சிறிது காலம் தங்கியிருந்து விட்டு பாரிஸக்குச் சென்றார். இவர் பாரிஸில் தங்கி இருந்த சமயம்தான் முஹம்மது அப்துஹுவும் நாடு கடத்தப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். அங்கு இருவரும் ஒன்றிணைந்து ஐரோப்பிய ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக முஸ்லிம் உலகை ஒன்றிணைத்தல்  கிலாபத்தைப் பாதுகாத்தல் என்ற இரு நோக்கங்களையும் அடிப்படையாக வைத்து அல்-அர்வதுல் வுஸ்கா என்ற பெயரில் பத்திரிகையொன்றை வெளியிட்டனர்.

இப்பத்திரிகையின் முதலாவது இதழ் 1884ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி வெளி யானது. இப்பத்திரிகையின் நோக்கத்தையும் இலக்கையும் அறிந்துகொண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அதன் விற்பனையை எகிப்திலும், இந்தியாவிலும் தடை செய்தனர். அத்தடையையும் மீறி அதனை வாங்கிப் படித்தவர்கள் கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் காரணத்தினால் இப்பத்திரிகை 18 இதழ்களுடன் நின்று போனது. ஆகவே ஆப்கானி பாரிஸிலிரு ந்து ரஷ்யாவுக்குப் பயணமானார்.
பிரித்தானியா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் சதிகளையும், சூழ்ச்சிகளையும் அவர் ரஷ்ய மொழியில் பகிரங்கப்படுத்தினார். ரஷ்யப் பத்திரிகை களிலும் எழுதினார். என்றாலும் சூடான் நாட்டு விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகளுடன் பேசுவதற்காக 1892 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் பிரித்தானியாவு க்கு வந்தார். சூடான் விவகாரம் தொடர்பாக வும் அவர் மேற்கொண்ட பேச்சுக்களும் பலனளிக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் துருக்கி மன்னர் அப்துல் ஹமீத், துருக்கியில் வந்து தங்குமாறு ஆப்கானிக்கு 1892 ஆம் ஆண்டில் எழுத்து மூலம் அழைப்பு விடுத்தார். ஆப்கானியின் சிந்தனை துருக்கியின் மேம்பாட்டுக்கும், சுபீட்சத்திற் கும் வித்திடும் என்பதே இந்த அழைப்பின் பிரதான பின்னணி.அந்த வகையில் மன்னரின் அழைப்பை ஏற்று துருக்கிக்குச் சென்ற ஆப்கானி மன்னருடன் இணைந்து உலக முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்ட மொன்றை வகுத்தார். அத்திட்டத்தின் அடிப்படையிலான முதலாவது கூட்டம் ஸ்தான்பூலில் நடைபெற்றது. என்றாலும் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற முன்னரே அவர் 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா…

அன்னாரின் ஜனாஸா ஸ்தான்பூலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. என்றாலும் 1944 ஆம் ஆண்டில் ஆப்கானிய அரசு விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப அன்னாரது ஜனாஸா அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு காபூல் பல்கலைக்கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆகவே ஆழ்ந்த உறக்கத்திலிருந்த முஸ்லிம் உலகை விழிப்படையச் செய்ய வும், மேற்குலகின் ஆக்கிரமிப்பிலிருந்து அதன் விடுதலைக்காகவும், முஸ்லிம் உலக ஐக்கியத்திற்காகவும், இஸ்லாமிய சிந்தனைப் புனர்நிர்மாணத்திற்கும் இரவு – பகலாக தன் இறுதி மூச்சுவரை உழைத்தவர் என்ற பெருமை ஜமாலுத்தீன் ஆப்கானி (ரஹ்) அவர்களையே சாரும்.
இதற்காக அவர் தன் சிந்தனை, எழுத்து, பேச்சு ஆகிய ஆற்றல்களையும் முழுமை யாக பயன்படுத்தினார்.

இதை அறியாத எமது Face book  முப்திகள் இவர்  ஒரு ஷீஆ ஆசிரியரிடம்  படித்தார் ஆகவே இவரும் இவர் சார்ந்த இஹ்வானுல் முஸ்லிம் என்ற இயக்கமும் வழிகெட்ட  ஷீஆக்கள் என்று அபத்தமான முறையில்  பத்வா வளங்குவது தமது மோட்டுத்தனத்தைக் காட்டும்  .  கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பெளத்த விரிவுரையாளரிடம் ஒரு முஸ்லிம் ஒருவர் படித்தால் அவன் பெளத்தனாக முடியாது . இதைப் பாரபக்கும் போது வேடிக்கையாக உள்ளது  . அது போதாமைக்கு விமர்சனம் செய்யப்பட்ட அறிஞர் யார் என்றே தெரியாது அவர்கள்கூட ஷீஆ பட்ட கொடுக்கிறார்கள் . ஸுப்ஹானல்லாஹ் !

இறைவன் திருமறையில் கூறுகின்றான்  " ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று
  ﴿ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺇِﻥْ ﺟَﺎﺀَﻛُﻢْ.. ﺇِﻥْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻓَﺎﺳِﻖٌ ﺑِﻨَﺒَﺄٍ ﻓَﺘَﺒَﻴَّﻨُﻮﺍ )
இப்படியான அறிவுத்தரம் உள்ள அறிஞர்களை விமர்சனம் செய்வதற்கு முன் நாங்கள் இது பற்றி தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் . சகோதரர் நெளபர்  கூறினார் என்றால் சரியாகத்தான் இருக்கும் என்று தக்லீத் என்ற மோட்டுத்தனமாக இருக்காமல் சற்று அவர் எழுதிய புத்தகங்களையும் , அவர் பற்றி வந்த கட்டுரைகளையும் வாசித்து விமர்சனம்  செய்ய  வேண்டும் .

எனவே சகோதரர் நெளபர் நீங்கள் எந்த நோக்கத்திற்கு எழுதினீர்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் நீங்கள் பதிவிட்ட ஆக்கமும்  சொன்ன விதமும் சுமத்தப்பட்ட குற்றமும் அபத்தமானது. எனவும் இது போன்ற பதிவுகளை நீங்கள் தவிர்ப்பது காலத்திற்குப் பொருத்தமானது .

குறிப்பு :- சமூக வலைத்தளத்தில் நாங்கள்  பதிவிடும் பதிவுகளை அனைவரும் வாசிப்பார்கள்.  எனவே நாங்கள் பிழையான பதிவுகளை இட்டு அவர்களையும் சிந்தனைக் குழப்பத்திற்கு திசை திருப்பி நரகத்தின்பல் கொண்டு செல்லாமல் சீரான தூய்மையான அகீதாவின்பால் கொண்டு செல்ல முயற்சிப்போம்  இது எனது உபதேசம் .

இறைவன்
அன்னாரின் தவறு களையும், குறைகளையும், பிழைகளையும்  மன்னித்து அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை வழங்குவானாக........

மேலதிக தகவலுக்கு  இவற்றையும் வாசிக்க முடியும்
http://www.almaktabah.net/vb/archive/index.php/t-108431.html

No comments:

Post a Comment