A.M. Hafeesul haq ( Varipathanchenai )
((( இஸ்லாத்தை நிந்தித்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவர்))) என்று பல பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் மிகவும் காரசாரமாக எழுதப்பட்டு வருகின்றது.... இதை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும் . காரணம் இதுவே இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அடித்தளமாகிவிடும் .
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியதன் நோக்கம் :-
-------------------------------------------------------------------
முஸ்லிம்கள் வாழ்வது இஸ்லாத்திற்காக அவர்களின் உயிர் மூச்சு இஸ்லாம். அந்த இஸ்லாம் மாற்று மதத்தால் அவமதிக்கப்பட்டால் இலங்கை முஸ்லிம்களால் ஒரு போதும் ஜீரனிக்க முடியாது . மூவின மக்கள் வாழும் இலங்கையில் ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் அவர்களின் மதத்தைப் பின்பற்றும் பூரண சுதந்திரம் உள்ளது .
இப்படி இருக்கையில் அன்மைக் காலங்களில் ஒரு சில பெளத்த பேரினவாதிகளால் இலங்கை முஸ்லிம் பெரிதும் அவமதிக்கப்பட்டு வருகின்றார்கள் . இதனை ஜீரனிக்க முடியாமல்தான் மஹிந்தவின் ஆட்சியை அழித்து நல்லாட்டிக்கான ஒரு கூட்டாசியைத் தோற்றுவிக்க 95%மான முஸ்லிம் ஆதரவு வளங்கினார்கள் . கடந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கான காரணம் பெளத்த பேரினவாதத்திற்கு அவை ஆதரவு வழங்கியமை .
இப்போது உருவாக்கப்பட்ட நல்லாட்சியிலும் பெளத்த பேரினவாதிகளின் கைகள் மேலோங்கி உள்ளது. எமது முஸ்லிம் தலைவர்கள் கூட பாராளுமன்றத்தில் தட்டிக் கேட்காமல் மெளனியாக இருக்கின்றார்கள் . இப்படி நல்லாட்ச்சி அரசு சட்ட நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பெளத்த பேரினவாதிகளுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டே இருப்பார்களேயானால் முஸ்லிம் சமூகம் வெறுப்படைந்து தங்களது இருப்பைப் பாதுகாக்க வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ....... அப்போது எங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் வெறுப்புடன் #முதலாவதாக கொல்லுவது முஸ்லிம் தலைவர்களாக இருக்கும் எங்களைத்தான் என்றுதான் கூறுகின்றார்.
மேலும் இலங்கையில் ISIS பயங்கரவாதிகள் இருப்பதாக கூறுகின்றார்கள் உண்மையில் ISIS பயங்கரவாதிகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றே அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்துகிறார் .
இதை மேலோட்டமாக விளங்கிவிட்டு எமது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள்
(( #இஸ்லாத்தை நிந்தித்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவர் ))) என்று காரசாரமாக தலைப்பிட்டு பெளத்த மற்றும் முஸ்லிம் இனவாதத்தை மேலோங்கச் செய்யும் செயற்பாட்டைத் தூண்டி வருகின்றது . இது போதாமைக்கு இவருடன் இருக்கும் பகைமையைக் எப்போது வெளிப்படுத்துவது என்று எதிர் பார்த்து இருந்த ஒரு சில மாற்றுக் கட்சியின் ஆர்வலர்கள் இவரைப் பற்றி இருந்த நல்ல கருத்துகளை உடைத்து நச்சுக் கருத்துகளையும் பரப்பியும் வருகின்றார்கள் . எனவே இவற்றை விளங்கி நாங்கள் ஊடகங்களில் பதிவிட வேண்டும் .
கூறிப்பு :- எப்படி பெதுபல சேனாவால் மஹிந்த அரசு தோற்றுப்போனதோ அதேபோல் அமைச்சர் விஜேதாசவினால் தற்போது நிலை கொண்டிருக்கும் கூட்டாட்டச்சி தகர்த்தெறியும் அபாயம் உள்ளது .இதை கூட்டடாட்ச்சி கரிசினை கொள்வது காலத்திற்குப் பொருத்தமானது என்று நினைக்கிறேன் .
No comments:
Post a Comment