Thursday, January 7, 2016

தென்னிந்தியத் தொடர் நாடகங்கள் இலங்கை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் .


பொதுவாக ஊடகம் என்பது தகவல்களைப் பரிமாறுகின்ற சாதனமே ஊடகம் என்பார்கள் .

தென்னிந்திய ஊடகத்தைப் பொறுத்தவரை  ஆரம்பத்தில் நாட்டு நடப்புகள் , சமூதாய விழிப்புணர்வுத் தகவல்கள் , அரசியல் பிரச்சாரம் என்று இருந்த இந்திய ஊடகங்கள் இன்று சமூதாய சீரழிவுக்கு இட்டுச் செல்கின்ற அளவுக்கு மாறிவருகின்றது .

தொலைக்காட்சி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அதுவே சமூக சீர்கேட்டுக்கு ஆளாக மாறிவிட்டது . இன்று ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திரைப்படமாவது ஒளிபரப்பாத அலைவரிசேயே இல்லை ! காணவும் முடியாது .  எந்த அலைவரிசையில் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த அலைவரிசையை எமது சமூகம்  பார்ப்பதே  கிடையாது அந்த அளவு எமது சமூகம் பழகிவிட்டது . அதிலும் குறிப்பாக எமது முஸ்லிம் பெண்கள் அதைவிட வேகமாக இருக்கின்றார்கள் .  தென்னிந்திய நாடகங்களின் பாதிப்பால் முஸ்லிம் பெண்கள் சீரழிந்து வருகின்றார்கள் .

இது இந்தியாவில் சமூக சீர்கேட்டையும்  , கலாச்சார சீர்கேட்டையும் ஏற்படுத்தியது  மாத்திரமல்லாமல்  இலங்கையிலும் ஊடுருவ  ஆரம்பித்துள்ளது  .

இன்று எமக்குப் பார்க்க முடியும் எமது இலங்கைத் தொலைக்காட்சிகளில் அதிகமாகப் பாடல்கள் கேட்போர் யார் ?  எமது முஸ்லிம் பெண்களே  !

அதில் நடாத்தப்படுகின்ற நேரடி நிகழ்ச்சிகளில்  அவர்கள் call   எடுத்து எனது கணவன் என்து உம்மா , வாப்பா , எனது தங்கை  மற்றும் எனது  பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு நல்ல பாட்டுத்தாருங்கள் என்று கூச்சப்படாமல் பாடல் கேட்கின்றார்கள் . ஸுப்ஹானல்லாஹ  !

அண்மையில் நான் ஒரு சாப்பாடுக் கடைக்கு ( Hotel ) க்கு சாப்பிடுவதற்குச்   சென்றேன் அங்கு வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக தொலைக்காட்சி ( TV ) வைக்கப்பட்டுள்ளது . அதில் ஒரு நேரடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது . அதில் விரும்பிய நபர் call  எடுத்து பாடல் கேட்க முடியும் அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் அது .

அந்த நிகழ்ச்சியில் ஒரு முஸ்லிம் பெண் தொடர்பை மேற்கொண்டு தனது தாய் ஆயிஷா தனது கணவர் ஜஃபர் தனது சகோதரி ஆபிதா மற்றும் தனது பிள்ளைகாளான  அப்துல்லாஹ்  மற்றும் சதாம் போன்றோர்களுக்கு ஒரு புதிய பாடல் தாருங்கள் என்று கூச்சப்படாமல் கேட்டார் . ஸுப்ஹானல்லாஹ் !!!!!

எங்கே எமது இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளது என்று பார்த்தீர்களா ? இதுதான் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை .

தென்னிந்திய தொடர் நாடகங்கள் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன  ?
==============================

01) ஆடை அலங்காரத்தில் தாக்கம் .

முஸ்லிம்களுக்கென தனியான ஆடை அலங்காரங்களை இஸ்லாமிய ஷரிஆ  வரையறை செய்துள்ளது . ஆனால் இன்று  இஸ்லாமிய ஷரிஆ  வரையறையின்  எல்லையைத் தாண்டி விட்டது .

இன்று எமது பெண்களை  முட்டாள் ஆக்குவதற்காக இந்த நடிகை அணிந்த ஆடை அல்லது இந்த தொடர் நாடகங்களில்  நடிகைகள் போடுகின்ற ஆடையென்று பெயர் சூட்டி வியாபாத்திற்காக விற்பனை செய்கின்றார்கள் .  இதை அறியாத எமது முஸ்லிம் பெண்கள்  பெருநாள்களுக்காக ஆடைகளைத்  தெரிவு செய்கின்ற போது   கெளரவத்திற்காக  இவ்வாறான ஆடைகளை  அணிகின்றார்கள் .  இன்னும் சில பெண்கள் கடைகளில் இப்படியான ஆடைகளைக் கேட்டு வாங்குகின்றார்கள் !
ஸுப்ஹானல்லாஹ் !!

இது ஆடைகளில் மாத்திரமல்ல பழக்க வழக்கங்களிலும்தான் . இதில் பெண்கள் மாத்திரமல்ல இளைஞர்களும்தான்

02)   நேரம்  வீணடிக்கப் படுகின்றது

இஸ்லாம் காலத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது . இறைவன் காலத்தின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றான்  .

நபிஸல் அவர்கள் கூறினார்கள் இரண்டு அருட் கொடை விடையத்தில்
அதிகமான மனிதர்கள் ஏமாற்றம்மடைந்துள்ளனர் . அவை ஆரோக்கியமும் ஒய்வும்  ( ஹதீஸ் )

இன்னொரு சந்தர்பத்தில் நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஐந்து விடையங்களுக்கு முன் ஐந்து விடையத்தைப் பயண்படுத்திக் கொள் .  உனக்கு   சோலிகள் வரு முன் ஒய்வைப் பயன்படுத்திக் கொள் .  உனது  வயோதிபத்திற்குமுன் இளமையைப்  பயன்படுத்திக் கொள் . உனக்கு சுகயீனம் ஏற்படு முன் ஆரோக்கியத்தைப் பயன்படுத்திக் கொள் .
உனக்கு ஏழ்மை வருமுன்  வசதியைப் பயன்படுத்திக் கொள் . உனக்கு மரணம் வருமுன்  வாழ்கையைப் பயன்படுத்திக் கொள்  (  ஹதீஸ் )

இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம் . ஆனால் இன்று நாங்கள் இறைவனுக்கு துதி செய்வதை விட இப்படியான நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்குத்தான்  அதிகமான நேரங்களை நாம் செலவிடுகின்றோம் .  இதை நாங்கள் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் .

03)  சமூக சீர்கேடு .

இன்று  குடி ,களவு ,  விபச்சாரம் , பாலியல் துஸ்பிரையோகம் போன்றவற்றின்   விளிம்பில் எமது  சமூகம்  தொத்திக் கொண்டிருக்கின்றது .  இஸ்லாம் ஒரளவு  இலங்கையில் வளர்ச்சி அடைந்தாலும் இன்று  சமூக சீர்கேடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது . இதற்கு காரணம் தெனிந்திய திரைப்படங்களின் தாக்கம் என்றும் சொல்ல முடியும் .

தென்னிந்திய தொடர் நாடகங்களின்  தாக்கங்களால்  இலங்கையில்  முஸ்லிம்கள் எதிர் கொள்ள இருக்கும் பிரச்சினை
==============================

01) இலங்கையில் பெளத்த மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய பிழையான புரிதல்கள் உருவாகும் .

02) முஸ்லிம்கள் பற்றிய பிழையான பதிவுகள் ஏற்படும் .

எனவே இதற்கான தீர்வை நான் உங்களின் கைகளில் ஒப்படைக்கின்றேன் !
இதைக் குறைப்பதற்கு நாங்கள் எப்படியான வழிமுறைகளைக் கையாளலாம் ?
  கூறுங்கள் .....   .......

Hafeesul haq (  fathih)
varipathanchenai

No comments:

Post a Comment